Huawei தொழில்நுட்ப சாதனங்கள்: வணிக நிபுணர்களுக்கேற்ற பங்காளர்கள்
புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Huawei, புதுமையான ஸ்மார்ட்போன்கள், டெப்லட்கள் மற்றும் பிற தொழில்நுட்ப சாதனங்களையும் அறிமுகப்படுத்துவதில் பிரசித்தி பெற்றதாகும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Huawei Media Pad T5, Huawei Nova 7i மற்றும் Huawei Free buds 3 ஆகிய புத்தாக்க தயாரிப்புகள் அனைத்தும், பன்முக நோக்கங்களுக்காக ஒன்றுடன் ஒன்று இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் திறன் கொண்டவை. இவற்றின் மூலம் ஈடிணையற்ற பயனர் அனுபவத்தை வழங்கும் தனது ஆற்றலை Huawei மீண்டும் நிரூபித்துள்ளது. இம் மூன்று தயாரிப்புகளும் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தொழில்சார் பணிகளுக்கான உதவியாகவும், பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குவதன் மூலமாகவும் இலங்கையர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்த 10.1 அங்குல Huawei Media Pad T5, இலகுவாக எடுத்துச் செல்லக்கூடிய கூடிய வடிவத்துடன், சக்திவாய்ந்த செயல்திறனை வழங்குவதற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. வெறும் 460 கிராம் நிறை கொண்ட இந்த இலகு ரக சாதனத்தை வணிக ரீதியான பயணங்களின் போது கொண்டு செல்வது இலகுவென்பதால், மடிக்கணினிகள் மற்றும் தனியாள் கணினிகள் ஆகியவற்றை விட மேம்பட்டதாக திகழ்கின்றது. பணிகளை மிகவும் நெகிழ்வான முறையில் செய்து முடிக்கவும், விளக்கக்காட்சிகளை காண்பிக்கும் போதும் சிறந்த துணையாக இது செயற்படுகின்றது. இதன் பெரிய திரையானது, ஒரு சிறிய மடிக்கணினி தரக்கூடிய அனுபவத்தை அளிக்கின்றது. இதில் பாவனையாளர்கள் உருவப்பட நோக்குநிலை அல்லது நிலப்பரப்பு நோக்குநிலை ஆகியவற்றில் ஏதேனுமொன்றை செயற்படுத்திக்கொள்ள முடியும்.
இந்த 4G சாதனமானது, வேகமான இணைய இணைப்பை வழங்குவதுடன், குறிப்பெடுக்கவும் உகந்ததாக இருப்பதால் இணையத்தில் உலாவருவதற்கு ஏற்றதாகும். தற்போது கைகளில் டெப்லட் இருப்பதால், பாவனையாளர்கள் Wi-Fi இணைப்பை தேடி அலைய வேண்டிய தேவையில்லை, மாறாக அவர்கள் செய்ய வேண்டியது பவரை ஒன் செய்து, ஒன்லைனில் சஞ்சாரிக்க வேண்டியது மட்டுமே. இதன் octa core processor காரணமாக செயற்திறன் அடிப்படையில் எவ்வித இயக்கப்பின்னடைவுகளும் இல்லையென்பதுடன், பவர் ஒன் செய்வதற்கும், முதலில் இயங்கத் தொடங்கவும் ஒரு சில செக்கன்கள் மட்டுமே தேவையாகும். சாதனமொன்றின் மின்கல ஆயுளானது தொழில்சார் நிபுணர்களால் என்றுமே கவனத்தில் கொள்ளப்படும் முக்கிய அம்சமென்பதுடன், Media Pad T5 அதன் 5100 mAh வலுவுடன் என்றுமே அவர்களை ஏமாற்றுவதில்லை. மேலும் இதன் குறைவான சக்தி நுகர்வின் காரணமாக ஒரு நாள் முழுவதும் பயன்படுத்தக் கூடியதாக உள்ளது. கண்களுக்கு இதமான eye comfort பயன்முறை, வாசிப்பு நோக்கங்களுக்கு உதவுவது மட்டுமன்றி, இதன் பெரிய திரையானது இணையத்தில் கிடைக்கும் ஏராளமான மின் புத்தகங்கள் மூலம் மாற்று வாசிப்பு தெரிவை வழங்குகிறது.
தொழில்சார் மற்றும் வணிக ரீதியான பாவனைகளுக்கான உதவியாளராக இருப்பதற்கு மேலதிகமாக, Media Pad T5ஐ வகுப்பறையில் பாடங்களை நடத்துவதற்கான கற்பித்தல் உதவியாகப் பயன்படுத்த முடியுமென்பதுடன், கல்விசார் நோக்கங்களுக்கும் சிறந்ததாகும். இதன் Full HD தெளிவான திரையானது திரைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்க்கும் போது கண்களுக்கு விருந்தாக அமைகின்றது. மேலும் இதன் தனிப்பட்ட சேமிப்பகத்தில் கோப்புகள், வீடியோக்கள், படங்கள் மட்டுமன்றி திரைப்படங்களையும் சேமித்து வைக்க முடியும். குறிப்பாக இதன் இரட்டை ஸ்பீக்கர்கள் தடையற்ற பொழுதுபோக்கினை வீட்டுக்கோ அல்லது செல்லும் இடங்களுக்கோ கொண்டு வருவதன் மூலமாக, இதனை எண்ணற்ற தேவைகளுக்கான முழுமையான தீர்வாக மாற்றியுள்ளது.
Huawei Nova 7i சிறப்பம்சங்களால் நிறைந்த மற்றுமொரு சாதனமென்பதுடன், Huawei இன் புத்தாக்க ஸ்மார்ட்போன் வரிசைக்கான முக்கிய இணைப்பாகும். Huawei Nova 7i மற்றும் Media Pad T5 ஆகியவற்றின் கூட்டுழைப்பானது வேலை-வாழ்வு சமநிலைக்கு அவசியமான அனைத்தையும் வழங்குகின்றது. Nova 7i இல் கிடைக்கும் Huawei share சிறப்பம்சமானது போனின் திரையை டெப்லட்டில் பிரதிபலிக்கும் திறனைக் கொண்டது. இதன் மூலம் டெப்லட்டின் ஊடாக போனினை கட்டுப்படுத்த முடியும். தற்போது கோப்புகளை பகிர்வது Huawei share சிறப்பம்சத்தின் மூலம் புதிய அத்தியாயத்தை எட்டியுள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்போனின் தரவுகளை டெப்லட்டுக்கு பகிரவோ அல்லது இதிலிருந்து அதற்கு பகிர்ந்துகொள்ளவும் முடியும். Nova 7i மற்றும் Media Pad T5 ஆகியன தொழில்சார் நோக்கங்களுக்காக பயன்படுத்துவற்கான சிறந்த இணைப்பாகும்.
பணிகளை இருக்கும் இடத்திலேயே செய்து முடிப்பதற்கு உதவும் மேலுமொரு இணைப்பு Huawei Free Buds 3. அலுவலகத்தில் பணிபுரியும் போது அல்லது நடந்து செல்லும் போது பெருத்த வயர்களால் ஏற்படும் கவனச்சிதறலைத் தவிர்க்க பயனர்களுக்கு இது உதவுகிறது. Huawei Huawei Free Buds 3 செயல்திறன் மிக்க பாவனைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், பாவனையாளர்கள் இதனைப் பயன்படுத்தி எங்கும், எப்போதும் தொலைபேசி அழைப்புகளுக்கு தடையின்றி பதிலளிக்கவும், Bluetooth இணைப்பு மூலம் இசையை கேட்கவும் முடியும். பின்னணி இரைச்சலைத் தவிர்க்க உதவும் இதன் active noise cancellation சிறப்பம்சமானது அழைப்புகளை மேற்கொள்ளும்போது தெளிவினை உறுதிசெய்கின்றது. மேலும் அடக்கமான சார்ஜிங் கேஸ் உடன் வருவதுடன், இதனை 20 மணித்தியாலங்கள் உபயோகிக்க முடியுமென்பது பணியில் உள்ள தொழில்சார் நிபுணர்களுக்கு ஒரு நற் செய்தியாகும். Huawei Free Buds 3 வை Huawei Media Pad T5 மற்றும் Huawei Nova 7i ஆகிய இரண்டுடனும் பயன்படுத்த முடியுமென்பதுடன், இதன் மூலம் இந்த 3 தயாரிப்புகளும் தனித்தனியாகவும், ஒன்றாகவும் பயன்மிக்கதாக உள்ளது.
Huawei Media Pad T5, Huawei Nova 7i மற்றும் Huawei Free Buds 3 ஆகிய மூன்றும் அனைத்து Huawei அனுபவ நிலையங்கள், Singer காட்சியறைகள் மற்றும் Daraz.lk. இணையத்தளத்தின் ஊடாகவும் கிடைக்கின்றது.