கொவிட் 19 காலப்பகுதியில் இலங்கை அஞ்சல் திணைக்களத்துடன் இணைந்து ஆதரவை விஸ்தரிக்கும் Hutch
நாடு முழுவதும் ரீசார்ஜ் அட்டைகளை விநியோகிக்க பங்காண்மையில் கைச்சாத்திட்டது
இலங்கையில் கொவிட்–19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான ஜனாதிபதி செயலணியின் வேண்டுகோளுக்கிணங்க, தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு மற்றும் உயர் கல்வி, தொழிநுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சுடன் இணைந்து, மிகவும் அவசியமான ரீசார்ஜ் அட்டைகளை அனைத்து இலங்கையர்களினதும் வீட்டு வாசலுக்கே விநியோகிக்கும் பொருட்டு HUTCH நிறுவனம் இலங்கை அஞ்சல் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.
இந்த HUTCH ரீலோட் அட்டை சேவையானது 078 மற்றும் 072 இரு சந்தாதாரர்களுக்குமானதென்பதுடன், இவை ஒரு வருடம் வரையான செல்லுபடியாகும் காலத்தைக் கொண்டதாகும். இது தற்போதைய சவாலான காலத்தில் வாடிக்கையாளர்கள் இணைந்திருப்பதற்கு உதவுகிறது.
HUTCH சந்தாதாரர்கள் அருகிலுள்ள அஞ்சல் நிலையத்துடன் ஒருங்கிணைந்து, அஞ்சல் துறையால் விநியோகிக்கப்படும் மருத்துவ பொதிகளுடன் தங்கள் ரீசார்ஜ் அட்டைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான தபால் நிலையங்களில் HUTCH ரீசார்ஜ் அட்டைகள் கிடைப்பதற்கு வழிசெய்யப்படவுள்ளது. இந்த பங்காண்மை மூலமாக, வாடிக்கையாளர்களின் மருத்துவ தேவைகளுடன் ரீசார்ஜ் அட்டைகளையும் அஞ்சல் நிலையங்கள் ஊடாக விநியோகிக்க HUTCH திட்டமிட்டுள்ளது. பின்னர் நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான அஞ்சல் நிலையங்கள் மற்றும் உப அஞ்சல் நிலையங்கள் ஊடாகவும் ஒரு முழுமையான விநியோக பொறிமுறையைத் தொடங்கவுள்ளது.
இந்த முயற்சியானது இலங்கை முழுவதும் உள்ள 15 பிராந்திய அலுவலகங்கள், 653 பிரதான அஞ்சல் நிலையங்கள் மற்றும் 3410 உப அஞ்சல் நிலையங்களை உள்ளடக்குவதன் மூலம் HUTCH வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்தவாறே ரீசார்ஜ் அட்டைகளை கொள்வனவு செய்வதனை இலகுவாக்குகின்றது.
“இந்த சூழ்நிலைக்கு பொறுப்பான அரச அதிகாரிகளான, எமது சுகாதாரத்துறை மற்றும் அஞ்சல் திணைக்களத்தினால் வழிகாட்டப்படும் இந்த கௌரவமான முயற்சிகளின் பங்காளராக இருப்பது தொடர்பில் பெருமையடைகின்றோம். ஒரு பொறுப்பான கூட்டாண்மை பிரஜையாக, மிகவும் சவாலான இக் காலக்கட்டத்தில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள எங்கள் பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களின் அனைத்து தொடர்பாடல் தேவைகளையும் வலுப்படுத்தும் மேலுமொரு முயற்சியில் இணைந்துள்ளோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இணைப்பை எளிதாக்குவதற்கான வாய்ப்பை வழங்கியதற்காக தகவல் மற்றும் வெகுசன ஊடகம் அமைச்சர் மற்றும் உயர் கல்வி, தொழிநுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கௌரவ. பந்துல குணவர்தன மற்றும் அஞ்சல் திணைக்களத்துக்கு, எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். நாடு இயல்பு நிலையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், இலங்கை முழுவதும் மிகவும் கட்டுப்படியாகும் விலையிலான இப் பெறுமதி சேர் வழங்கலை தொடர எங்களுக்கு நம்பிக்கை உள்ளது” என, HUTCH நிறுவனத்தின் விற்பனைப் பிரிவிற்கான பொது முகாமையாளர், மனோஜ் குமார் மோசஸ் தெரிவித்தார்.
கொவிட் 19 வீட்டிலிருக்கும் காலப்பகுதியில், இலங்கை அஞ்சல் திணைக்களம் ஒசு சலவுடன் இணைந்து Whatsapp, Viber மற்றும் MMS ஆகியவற்றின் மூலமாக மருந்துகளை வீடுகளுக்கே விநியோகிக்கும் பொறிமுறையை ஏற்பாடு செய்துள்ளது. சுகாதார அமைச்சு நாடுபூராகவும் உள்ள மருந்தகங்களை அங்கீகரித்துள்ளதுடன், இந்தப் பட்டியலை www.health.gov.lk என்ற இணையத்தளத்தின் மூலமாக பெற்றுக்கொள்ள முடியும்.
அஞ்சல் திணைக்களத்துடனான இந்த முக்கிய இணைவானது நாடு முழுவதும் HUTCH இன் அணுகலை மேலும் விரிவுபடுத்துவதுடன், ” Bigger and Better” தெரிவாக மாற்றுவதுடன், “Be. Anywhere” என்ற HUTCH இன் வர்த்தகநாம பெறுமான நிலைத்தோற்றத்தை மேலும் வலுப்படுத்துகின்றது.