கொவிட் தொற்றுக்கு மத்தியில் 2020/21 ஆண்டில் வரலாற்று இலாபத்தை பதிவு செய்த Commercial Leasing & Finance PLC
- வரிக்கு முந்தைய இலாபம் முந்தைய ஆண்டிலும் 34% அதிகரித்து ரூ. 2.67 பில்லியனாக பதிவு
- வரிக்குப் பிந்தைய இலாபம் 43% ஆக உயர்வடைந்து ரூ. 2.2 பில்லியனாக பதிவு
- வாடிக்கையாளர்களுக்கு உதவியாக 60,000 செலுத்துகை தவிர்ப்பு சலுகை
- 15% மொத்த சேவை வளர்ச்சி
- 32% வைப்பு வளர்ச்சி
- செயற்படுத்தப்படாத கடன் (NPL) தொழில்துறையில் சராசரியாக 6.49% ஆக இருந்தும் 13.87% ஆக பதிவு
- NPL இலும் பயன்படுத்தப்படாத சொத்து பேணல் (PCR) 107% ஆக பதிவு
Commercial Leasing & Finance PLC (CLC) ஆனது, வருடம் முழுவதும் உலகளாவிய கொவிட்-19 தொற்று உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில், அதன் மிகச் சிறந்த செயல்திறன் மிக்க, நிதி ஆண்டை பதிவு செய்துள்ளது. 34% வளர்ச்சியை பதிவு செய்துள்ள அது, கடந்த ஆண்டை விட வரிக்கு முந்தைய இலாபமாக ரூ. 2.67 பில்லியனை பெற்றுள்ளது. அத்துடன் வரிக்கு பிந்தைய இலாபமாக, முந்தைய ஆண்டை விட 43% அதிகரிப்பை அடைந்து ரூ. 2.2 பில்லியனை பதிவு செய்துள்ளது. இதேவேளை, அதன் நிதிச் செலவு 23% ஆக குறைவடைந்து, மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆண்டில் ரூ. 4,737 மில்லியனை பதிவு செய்துள்ளது. CLC யின் வெற்றிக்கான முக்கிய காரணி, அதன் எதிர்பாராத கடினமான ஆண்டில் அதன் இரு முனை மூலோபாயமாகும். அதாவது, வாடிக்கையாளர் உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் நிறுவனத்தினால் வாடிக்கையாளர்களுக்கு 60,000 பேருக்கு மீள் செலுத்துகை தவிர்ப்பு சலுகை உதவி வழங்கப்பட்டு, அவர்களுக்கு அவர்களின் நிதி செயற்பாகளைத் திட்டமிட உதவியுள்ளது. இச்சலுகையானது, 2020/21 நிதியாண்டில் அதன் கடனில் மூன்றில் ஒரு பங்காக அமைந்துள்ளது. நிறுவனத்தின் உதவியும் வழிகாட்டலும் வாடிக்கையாளர்களால் மிகவும் பாராட்டைப் பெற்றுள்ளதுடன், அவர்கள் தங்கள் பொறுப்புகளை சரியான நேரத்தில் வழங்கியதன் மூலம் நிறுவனத்திற்கு சாதகமான வகையில் உதவினர். மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆண்டில் அதன் வைப்பானது 32% ஆக அதிகரித்துள்ளது. நுண் வர்த்தக வாடிக்கையாளர்கள் மற்றும் சிறிய நடுத்தர பங்குதார வர்த்தகர்களுக்கு, குறிப்பாக இதுபோன்ற நெருக்கடியான காலங்களில் தேவை எது என்பது தொடர்பில் தனது கவனத்தை CLC ஞாபகத்தில் கொண்டு செயற்பட்டது. இதன் பிரதிபலிப்பாக, வங்கி சாரா நிதித் துறையின் (NBFI) வீழ்ச்சியுடன், CLC ஆனது, மொத்த தனித்துவ சேவை வளர்ச்சியை 15% ஆக பதிவு செய்தது.
2020/21 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் மற்றொரு சுவாரஸ்யமான சாதனையாக, செயற்படாத கடன் (NPL) விகிதம் 6.49% ஆக பதிவாகியிருந்தது. இது தொழில்துறையிலுள்ள சராசரியின் அரைவாசிக்கும் குறைவானதாக அமைந்துள்ளதை காண்பிப்பதனால், நிறுவனத்தின் சேவை ஆரோக்கியமான நிலையில் பேணப்படுவதை அது பிரதிபலிக்கிறது. வலுவான சேவை பராமரிப்பு பேணலுக்கு அப்பால், CLC யின் செயற்படாத கடனை (NPL) மேவும் வகையில், பயன்படுத்தப்படாத சொத்து பேணலை (PCR) 107% ஆக பதிவு செய்துள்ளது. இது சுமார் 100% சொத்து பலத்தை காண்பிக்கின்றது. இது நிறுவனத்தின் நிதி ஸ்திரத்தன்மையை மட்டுமல்லாது, எதிர்காலத்திலும் இதுபோன்ற செயல்திறனைத் தக்கவைத்துக்கொள்ளும் திறனை அது கொண்டுள்ளதை பிரதிபலிக்கிறது.
CLC அதன் பாதையை மேலும் வலுப்படுத்தியவாறு, பாரிய விரிவாக்கத்தை மேற்கொண்டு, தற்போது எந்தவொரு NBFI சேவைகளையும், அதாவது வாகன குத்தகை மற்றும் கடன்கள், சிறு, நடுத்தர நிதி, நுண்நிதி, மாற்று நிதி, தங்கக் கடன்கள், காரணியாக்கல் மூலமான செயற்பாட்டு மூலதன நிதி, வைப்பீடு தொடர்பான பல்வேறு திட்டங்கள் உள்ளிட்ட பல வகையான தயாரிப்புகளை அது வழங்குகிறது. கடனட்டைகளை இணைத்துள்ளதன் மூலம், அதன் சேவைகள் உடனடி எதிர்காலத்தை அடிப்படையாகக் கொண்டு மேம்படுத்தப்பட்டு வருகின்றது. CLC யின் வெற்றியானது, அதன் சேவை வலையமைப்பை மேம்படுத்துவதன் மூலம் தொடர்ந்தும் விரிவுபடுத்தப்படும். அதனடிப்படையில் எதிர்வரும் நிதியாண்டில் மேலும் 10 கிளைகளை அது திறக்கவுள்ளது.
iPay போன்ற கட்டணத் தளம் அறிமுகம், அதன் ஒன்லைன் மற்றும் மொபைல் ஊடான சேவைகளை அதிகரித்தல், டிஜிட்டல் தளங்களுக்கு இடம்பெயர வாடிக்கையாளர்களுக்கு உதவுதல் போன்றவற்றின் மூலம் மேம்பட்ட டிஜிட்டல் வங்கி நடவடிக்கைகளையும் CLC ஆரம்பித்துள்ளது. வாடிக்கையாளர்களை உற்சாகமூட்டும் புதிய தயாரிப்புகள் மற்றும் நன்மைகளை வழங்கும் அதே வேளையில், புதிய வணிக வலையமைப்புகளுடன் கூட்டாளராக இணைய iPay இனை CLC பயன்படுத்துகின்றது.
நிறுவனத்தின் மிகப் பெரும் செயல்திறன் குறித்து CLC நிர்வாக பணிப்பாளர்/ பிரதான நிறைவேற்று அதிகாரி கிரிஷான் திலகரத்ன தெரிவிக்கையில், “இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஆண்டுகளின் மத்தியில் மிக உயர்ந்த இலாபத்தை வெளிக்காட்டியிருப்பதானது, CLC உடன் இணைந்திருக்கும் மக்கள் மற்றும் அதன் செயல்முறைகளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. மிக முக்கியமாக, கொவிட் தொற்றுநோயினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு உதவியளிக்கும் பல்வேறு விடயங்களுக்கு மத்தியில் இம்மைல்கல் எட்டப்பட்டுள்ளதுடன், இது எம் மீது எமது வாடிக்கையாளர் கொண்டுள்ள நம்பிக்கையை பல வகையிலும் மேலும் மேலோங்கச் செய்துள்ளது. CLC மீது அதன் கட்டுப்பாட்டாளரால் வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையும் உயர்வடைந்துள்ளது. நிறுவனம் ரூ. 21 பில்லியன் மூலதனத் தளத்தை அடைந்துள்ளமையே அதற்கான காரணமாகும். இது குறைந்தபட்ச ஒழுங்குமுறை விகிதமான 6.5% ஐ விட 22.25% ஆகும். இலாப வளர்ச்சியை நிலைபேறான முறையில் நாம் அடைந்தமையே எம்மை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது.” என்றார்.
2020/21 ஆம் ஆண்டில் அதன் பாரிய செயல்திறன் மூலம் CLC ஆனது, LOLC குழுமத்தின் சிறந்த நிதி செயற்றிறனில் முக்கிய பங்களிப்பாளர்களில் ஒருவராக மாறியுள்ளதுடன், இலங்கையின் முன்னணி NBFIகளில் ஒன்றாக அதன் அடையாளத்தை வலுப்படுத்தியுள்ளது.
தொழில்துறையினால் தொடர்ந்தும் அங்கீகரிக்கப்பட்டு, கௌரவமளிக்கப்பட்டு வரும் CLC ஆனது, வருடா வருடம் முதல் 50 தரக்குறியீடுகளில் ஒன்றாக LMD சஞ்சிகையினால் தரப்படுத்தப்பட்டு வருவதுடன், இலங்கையின் சிறந்த கௌரவத்திற்குரிய நிறுவனங்களில் ஒன்றாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. இவ்வாண்டில், CLC ஆனது ICRA Lanka Ltd இனால் SL (A) Stable தரப்படுத்தலில் மீண்டும் நிலைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Photo Caption
கிரிஷான் திலகரத்ன, பணிப்பாளர்/ பிரதான நிறைவேற்று அதிகாரி, Commercial Leasing & Finance PLC