2021 இல் இலங்கையின் 40 சிறந்த பணியிடங்கள் பட்டியலில் Huawei Sri Lanka

0

Huawei Technologies Lanka நிறுவனம், Great Place to Work® இனால் இலங்கையில் பணிபுரிய சிறந்த இடங்களில் ஒன்றாக சான்றளிக்கப்பட்டுள்ளது

ICT தீர்வுகளில் முன்னணி சேவை வழங்குநரான Huawei Technologies Lanka நிறுவனமானது, 2021 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் 40 சிறந்த பணியிடங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. Great Place to Work® நிறுவனத்தின் சுயாதீன ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுத் தரவுகளின் அடிப்படையில் ஒரு சிறந்த பணியிடமாக சான்றளிக்கப்பட்டுள்ளது. Great Place to Work® இனால், Huawei Technologies Lanka நிறுவனத்தின் ஊழியர்ளிடையே மேற்கொள்ளப்பட்ட இரகசியம் பேணப்பட்ட ஆய்வில், ஊழியர்களால் வழங்கப்பட்ட விரிவான மதிப்பீடுகளின் அடிப்படையில் இந்த நற்சான்றிதழை அது பெற்றுள்ளது.

Huawei Sri Lanka பிரதான நிறைவேற்று அதிகாரி லியாங் யி இது தொடர்பில் தெரிவிக்கையில், “வேலை செய்ய சிறந்த இடமாக நாம் அங்கீகரிக்கப்பட்டுள்ளமையானது எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது. Huawei என்பது ஒரு பன்னாட்டு நிறுவனமாகும். இது மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் நிறுவப்பட்ட ஒன்று என்பதோடு, நாம் ICT துறையில் முன்னணியில் இருப்பதன் காரணமாக, 170  இற்கும் மேற்பட்ட நாடுகளில் தொழில்நுட்ப முன்னேற்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம். இந்த வெற்றிக்கு காரணம், அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பைக் கொண்ட எமது ஊழியர்களைத் தவிர வேறு யாருமிலல்லை” என்றார்.

Great Place to Work® நிறுவனத்தின் கருத்தின் படி, “ஒரு சிறந்த பணியிடம் என்பதானது, அதன் ஊழியர்கள் யார், அவர்கள் நிறுவனத்திற்காக என்ன செய்கிறார்கள் என்பது அல்ல. அவர்களது தலைவர்கள் மீது அவர்கள் எவ்வாறு நம்பிக்கை கொண்டுள்ளனர், அவர்கள் பணிபுரியும் நபர்களுடன் எவ்வாறு மகிழ்ச்சியாக உள்ளனர், அவர்கள் எதை செய்கிறார்களோ அது தொடர்பில் பெருமை கொள்வது போன்ற ஒரு நேரிய அனுபவத்தின் அடிப்படையிலானது. மரியாதை, நம்பிக்கை மற்றும் நியாயத்தை வளர்க்கும் ஒரு அமைப்பாக Huawei Technologies Lanka அவர்களின் ஊழியர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளமையானது ஒரு பெருமைக்குரிய விடயமாகும்”

மனித வலுவின் மூலதனத்தின் அடிப்படையில், உள்ளூர் ICT திறமையாளர்கள், டிஜிட்டல் பொருளாதாரத்தை இயக்குவதற்கான முக்கிய கூறுகளில் ஒன்றாக காணப்படுகின்றனர் என்று Huawei நம்புகிறது. அவர்கள் உலகளவில் அங்கீகாரம் பெற்றவர்கள் என்பதுடன் உள்ளூர் மற்றும் சர்வதேச ICT தொழில்துறைக்குத் தேவையான சர்வதேச அளவில் பாராட்டுக்குரிய தகுதிகளைக் கொண்டவர்களுமாவர். பல ஆண்டுகளாக, இலங்கையில் காலூன்றியுள்ள Huawei Sri Lanka நிறுவனம், ICT திறமையாளர்களை வளர்ப்பதில் மிக ஆழமாக கவனம் செலுத்தி வருகிறது. எதிர்காலத்திற்கான விதைகள் (Seeds for the Future), சிறந்த பல்கலைக்கழகங்களுடன் இணைந்து கூட்டு கண்டுபிடிப்பு ஆய்வகங்கள், உள்ளூர் பங்காளிகளுக்கு தொழில்துறை ரீதியிலான ICT பயிற்சிகள் போன்ற முன்முயற்சிகளை மேற்கொண்டு வருவதன் மூலம் இலங்கையானது, பிராந்திய ரீதியிலும், சர்வதேச அளவிலும் ICT துறையில் முன்னேற்றமடைய Huawei உதவி வருகின்றது.

அது மாத்திரமன்றி, இலங்கையில் உள்ள Huawei நிறுவனம், உள்நாட்டு ஊழியர்களுக்கு பல்வேறு தொழில் மேம்பாட்டு பாதைகளையும் வழங்குகிறது. நிர்வாக ரீதியான பணிக்கான பயிற்சிகள், ஒருவருக்கு ஒருவர் வழிகாட்டுதல் போன்ற விடயங்கள் மற்றும் ஏனைய முறைகள் மூலம் உள்ளூர் ஊழியர்களுக்கு அதிக பொறுப்புகள் வழங்கப்படுவதோடு, அவர்களின் தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளும் இதன் மூலம் துரிதப்படுத்தப்படுகின்றன. கடந்த ஆண்டுகளில், Huawei Sri Lanka நிறுவனமானது, Great Place to Work® மூலம் ‘வேலை செய்ய சிறந்த இடம்’ எனும் கௌரவத்தை மீண்டும் மீண்டும் பெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. உலகளாவிய பன்னாட்டு அமைப்பு எனும் வகையில் Huawei நிறுவனமானது, இலங்கை ஊழியர்களின் பணியாளர்களுக்கு அதிகாரமளித்தல் திட்டங்கள், திட்ட முகாமைத்துவம் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள், 20,000 இற்கும் மேற்பட்ட ஒன்லைன் / ஓப்லைன் பயிற்சி வகுப்புகள் மற்றும் ஊழியர்களின் நம்பிக்கையுடன் ஒரு உயர்ந்த நிறுவனமாக தன்னை மேலோங்கச் செய்து, அவர்களிடையே போட்டித்தன்மை மற்றும் திறன்களை மேம்படுத்தி வருகிறது. 2018ஆம் ஆண்டில், Huawei நிறுவனமானது, ஒருவருக்கு ஒருவர் வழிகாட்டல் எனும் திட்டத்தை இலங்கையில் அறிமுகப்படுத்தியது. அதன் அடிப்படையில் இலங்கையிலுள்ள முகாமைத்துவக் குழு உறுப்பினர்கள் தங்கள் பணி தொடர்பான அறிவை உரிய உள்ளூர் முகாமையாளர்களுக்கு முறையான மற்றும் முறைசாரா வழிகள் மூலம் பரிமாறிக் கொள்வார்கள். இதன் மூலம் அவர்கள் நிறுவனத்தில் முகாமைத்துவ ரீதியிலான திறன்களை மேம்படுத்திக் கொள்வார்கள்.

இலங்கையில் உள்ள Huawei நிறுவனம், தொலைத்தொடர்பு வலையமைப்புகள், தகவல் தொடர்பாடல், ஸ்மார்ட் சாதனங்கள் மற்றும் கிளவுட் சேவைகள் ஆகிய நான்கு முக்கிய பிரிவுகளில், ஒருங்கிணைந்த தீர்வுகளுடன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. அத்துடன் உள்நாட்டிலுள்ள பிரதான தொலைத் தொடர்பு வலையமைப்புகள், அரச மற்றும் தொழில்துறை வாடிக்கையாளர்களுடன் விரிவான மற்றும் ஒத்துழைப்புடனான செயற்பாடுகளையும் அது மேற்கொண்டு வருகின்றது. பல ஆண்டுகளாக இலங்கையில் ICT திறமையாளர்களின் கூட்டமொன்றை உருவாக்குவது தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் மூலம் Huawei தொடர்ந்தும் அவர்களை ஊக்குவித்து வருகிறது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *