சமூகங்கள் மற்றும் தேசத்தை COVID-19 க்கு எதிரான போராட்டத்தில் ஆதரிக்க ஃபொன்டெராவிடம் இருந்து ரூ. 32 மில்லியன்
COVID-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும் பாதிக்கப்பட்ட சமூகங்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் நாட்டின் முயற்சிகளை ஆதரிப்பதற்காக, அங்கர் தயாரிப்புகளை வழங்கும் ஃபொன்டெரா பிராண்ட்ஸ் ஸ்ரீ லங்கா நிறுவனம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களால் நிறுவப்பட்ட COVID-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதிக்கு ரூ.10 மில்லியன் நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நன்கொடை மனிதாபிமான பணிகளுக்கு மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அயராது உழைக்கும் அதிகாரிகளின் தேவைகளுக்கு உதவும்.
ஃபொன்டெரா பிரான்ட்ஸ் ஸ்ரீ லங்கா மற்றும் இந்திய உப கண்டத்துக்கான முகாமைத்துவ பணிப்பாளர் சுனில் சேதி கருத்துத் தெரிவிக்கையில், ´இலங்கை இந்த நிலைமையைக் கடக்கிறதை உறுதி செய்வதற்காக ஜனாதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பணிக்குழு, சுகாதாரப் பணியாளர்கள், மற்றும் முற்படையினரது வீர முயற்சிகளுக்கு நாங்கள் கடன்பட்டுள்ளோம். இந்த நேரத்தில் எங்கள் முதன்மை கவனம் அவர்களின் முயற்சிகளை ஆதரிக்கிறதே.´ என்றார்.
ஃபொன்டெரா அதன் உள்ளூர் பால் உழவர்களின் வலையமைப்பிலிருந்து தொடர்ந்து பால் சேகரித்து வருவதுடன் அது மூலம் அவர்களுக்கு இந்த நிச்சயமற்ற காலங்களில் உத்தரவாதமான வருமானத்தை உறுதிப்படுத்துகிறது. அவ்வாறே, உழவர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவது உட்பட பால் சேகரிப்பு நடவடிக்கைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நிறுவனம் பல அமைப்புகளை வடிவமைத்துள்ளது.
´இது போன்ற கடினமான காலங்களில், மிக முக்கியமானது என்னவென்றால், கூட்டு
மனிதாபிமான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் நாம் அனைவரும் எவ்வாறு
ஒன்றிணைகிறோம் என்பதே. பாலோடு இணைந்த ஒரு நிறுவனமென்ற வகையில், எங்கள்
உழவர் வலையமைப்பின் வாழ் வாதாரங்களை நாங்கள் பாதுகாக்கிறோம் என்பதை
உறுதிப்படுத்த நாம் விரும்புகிறோம்,´ என்று சேதி கூறினார்.