‘Union Lifestyle Bonus’ ஹோட்டல் டீல்களுடன் இலங்கையின் அழகை ரசிப்பதற்கு வாய்ப்பு

0

யூனியன் அஷ்யூரன்ஸ் ஆயுள் காப்புறுதிதாரர்களுக்கு தமது வாழ்க்கையை அனுபவிக்கவும், இலங்கையின் அழகை ரசித்து மகிழ்வதற்கும் ‘Union Lifestyle Bonus’ ஊடாக வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

விடுமுறை காலப்பகுதியில் பிரயாணம் செய்து, தமது ஓய்வு நேரத்தை மகிழ்ச்சிகரமாக செலவிட எதிர்பார்ப்போருக்கு தற்போது மிகவும் சகாயமான விலையில் அதை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும். திருகோணமலை, ஹிக்கடுவை, ஹபரண மற்றும் கண்டி போன்ற பகுதிகளில் அமைந்துள்ள சினமன் ஹோட்டல்ஸ் அன்ட் ரிசோர்ட்ஸ் ஹோட்டல் தொடரில் மகிழ்ச்சிகரமாக தமது பொழுதை செலவிடக்கூடியதாக இருக்கும். அத்துடன் 30% முதல் 40% வரை விலைக்கழிவை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

“உங்கள் வாழ்க்கையை இன்று மகிழ்ச்சிகரமாக அனுபவிப்பதுடன், உங்கள் எதிர்காலத்தை நிறுவனம் கவனத்திக் கொள்ளும்” எனும் உறுதி மொழிக்கமைய, இந்த திட்டத்தினூடாக காப்புறுதிதாரர்களுக்கு கவர்ச்சிகரமான விலைக்கழிவுகளை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதுடன், 2020 ஆம் ஆண்டை முழுமையாக அனுபவிக்க முடியும்.

2020 மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னதாக யூனியன் அஷ்யூரன்ஸ் ஆயுள் காப்புறுதிக்கு பதிவு செய்து கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும். மாதாந்தம் 15000 ரூபாய்க்கு மேலான தவணைக்கட்டணத்தைக் கொண்ட யூனியன் அஷ்யூரன்ஸ் ஆயுள் காப்புறுதி திட்டத்துக்கு இந்த சலுகை பொருந்தும். வருடம் முழுவதிலும் ஆயுள் காப்புறுதிதாரர்களுக்கு விலைக்கழிவுகள் மற்றும் சேவைகளை பெற்றுக் கொடுப்பதனூடாக வெகுமதிகளை வழங்குவதாக அமைந்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்காக தன்னை அர்ப்பணித்துள்ள, யூனியன் அஷ்யூரன்ஸ் இலங்கையின் மாபெரும் ஆயுள் காப்புறுதி தீர்யுகளை வழங்கும் நிறுவனமாக திகழ்கின்றது. மூன்று தசாப்த காலத்துக்கு மேலான அனுபவத்தையும் கொண்டுள்ளது. இலங்கையின் மாபெரும் பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் பின்புலத்தில் இயங்கும் இந்நிறுவனம், உறுதியான சேவை மனப்பாங்கை கொண்ட நிபுணர்களை கொண்டுள்ளது. பரந்தளவு புத்தாக்கமான ஆயுள் காப்புறுதி தீர்வுகளையும் சேவைகளையும் வழங்குகின்றது.

மேலதிக தகவல்களுக்கு தொடர்புகளுக்கு, 011 2 990 990.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *