புதிய வண்ணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Huawei Nova 5T

0

நல்லிணக்கத்தையும், அமைதியையும் கொண்டுவரும் புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Huawei, தற்போதைய பரபரப்பான ஸ்மார்ட்போனான Huawei Nova 5Tஐ Crush Green வண்ணத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிதாக Nova குடும்பத்தில் அதிரடியாக இணைந்துகொண்ட Huawei Nova 5T, தற்போது கண்ணைக் கவரும் Crush Green வண்ணத்தில் கிடைப்பதுடன், இம்மாதிரி ஏற்கனவே Crush Blue, Midsummer Purple மற்றும் Black ஆகிய வண்ணங்களில் கிடைக்கின்றது. Huawei Nova 5Tஇன் தட்டையான பின்புற மேற்பரப்பு 3D effects உடன் கூடிய பிரம்மிக்கவைக்கும் அம்சத்தைக் கொண்டுள்ளது. இது ஸ்மார்ட்போனுக்கு நவநாகரீக மற்றும் குளிர்ச்சியான தோற்றத்தை அளிப்பதுடன் பாவனையாளரை உத்வேகத்திலிருந்து புதுமைக்கு கொண்டு செல்கிறது. முதற்தர ஸ்மார்ட்போன்களில் பாவனையாளர்களுக்கு கிடைக்கும் சிறப்பம்சங்கள் நம்பமுடியாத விலையில் இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்படுகின்றமையானது மிக முக்கியமாக குறிப்பிட வேண்டிய சிறப்பம்சம்சமாகும்.

Nova 5T, 8GB RAM மற்றும் 128GB உள்ளக நினைவகத்தையும் கொண்டுள்ளது, கூடுதலாக நினைவகத்தை அதிகரிக்க எவ்வித ஆதரவும் வழங்கப்படவில்லை. இது புதிய EMUI 9.1 இயங்குதளத்தில் செயற்படுவதுடன், Huawei SuperCharge ஆதரவுடன் கூடிய 3,750mAh மின்கலத்தைக் கொண்டுள்ளது. இது வெறும் 30 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் ஆகக்கூடியது. Nova 5T, ஓர் அங்குலத்துக்கன பிக்ஸல் அடர்த்தி (pixel density) 412 பிக்ஸல்களுடன் உடன் கூடிய 1080×2340 பிக்சல்கள் resolution உடன் கூடிய 6.26 அங்குல தொடுதிரையைக் கொண்டுள்ளதுடன், இதன் aspect ratio 19.5:9 ஆகும்.

HUAWEI nova 5T இன் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள 48MP வில்லை, 16MP அதிவிசால கோண வில்லை (ultra wide-angle), 2MP macro மற்றும் 2MP bokeh வில்லைகள் பாவனையாளர்கள் தெளிவாக பார்க்கவும், நெருக்கமாக படமெடுக்கவும், விசாலமாக படமெடுக்கவும் அனுமதிக்கின்றது. ஒருங்கிணைந்த FullView திரையுடனான செஃல்பி கெமராவானது, 32MP f/2.0 lens உடன் திரையின் இடதுபுற மேல்மூலையில் காணப்படுகிறது. 5T இன் AI தொழில்நுட்பத்துடனான Super Night mode, அனைத்து வெளிச்ச நிலைமைகளிலும் துல்லியமான படங்களை எடுப்பதற்கு இடமளிக்கின்றது.

Macro lens மூலம் 4cm அளவுக்கு நெருக்கமாக focus செய்ய முடிவதுடன், 48 MP பிரதான பின்புற கெமராவிலுள்ள Sony ½- அங்குல CMOS சென்சரானது, மிகவும் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கக்கூடிய அதிநவீன புகைப்படவியல் சாதனமாக Huawei Nova 5T இனை நிலைநிறுத்துகின்றது. இதற்கு மேலதிகமாக, Huawei Nova 5T இன் ISO sensitivity ஆனது முன்னணி கெமராக்களுக்கு இணையாகக் காணப்படுகிறது. தத்ரூபமான தோற்றத்தினைத் தரும் bokeh effect மற்றும் புத்தம்புதிய AI Portrait Colour ஆகியவை சினிமா பாணியிலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுப்பதற்கு உதவுகின்றன. அதிகரித்துவரும் Vlogging கலாசாரத்திற்கென விசேட விதமாக வடிவமைக்கப்பட்ட Huawei Nova 5T மற்றும் EMUI 9.1 ஆகியவற்றின் Huawei Vlog வசதியானது, பயனர்கள் தங்களது வீடியோக்களின் தரத்தினை மென்மேலும் அதிகரிப்பதற்கு உதவுகிறது.

Crush Green வண்ண Huawei Nova 5T ரூபா. 69,999 என்ற அறிமுக விலையில் கிடைக்கின்றது.

2020 ஆம் ஆண்டில், Brand Finance இன் மிகவும் பெறுமதி வாய்ந்த உலகளாவிய 500 நிறுவனங்களைக் கொண்ட பட்டியலில் 10 ஆவது இடத்தை தனதாக்கிக் கொண்டது. BrandZ இன் உலகின் பெறுமதி வாய்ந்த உலகளாவிய வர்த்தகநாமங்கள் 100 இன் பட்டியலில் Huawei 47 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளதுடன், Forbes Worldஇன் உலகின் பெறுமதி வாய்ந்த வர்த்தகநாமங்களின் பட்டியலில் 79 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது. 2018 ஆம் ஆண்டு Interbrand இன் உலகளாவிய வர்த்தக நாமங்கள் பட்டியலில் 68 ஆவது இடத்தை Huawei பெற்றுக்கொண்டது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *