அதிகரிக்கும் உற்பத்திச் செலவுக்கு மத்தியில், பால் உற்பத்திகளில் உயர்ந்த தரத்தை பேணும் Pelwatte

0

நாட்டிற்கு பெறுமதியான அந்நியச் செலாவணியை சேமிக்கும் வகையில் பல்வேறு வகையான பால் உற்பத்திகளை தயாரிக்கும் இலங்கையின் முன்னணி உள்ளூர் பால் வர்த்தக நாமங்களில் ஒன்றான Pelwatte Dairy, தனது பால் உற்பத்திகளின் விலைகளில் மேற்கொள்ளப்படவுள்ள மிகக் குறைந்தளவிலான மாற்றமானது, அண்மையில் அதன் உற்பத்திச் செலவுகளில் ஏற்பட்ட அதிகரிப்பை ஈடுசெய்யும் வகையில் அமையவுள்ளதாக அறிவித்துள்ளது.

அண்மைக் காலத்தில் செலவுகள் அதிகரித்துள்ள போதிலும், பெல்வத்தை அதன் உற்பத்தி நடவடிக்கைகளை தங்கு தடையின்றி மேற்கொள்வதுடன், நிலையான பால் விநியோகத்தையும் பேணி வருகிறது.

பெல்வத்தை உற்பத்தி வரிசையில் Pelwatte Full Cream Milk Powder, Pelwatte Non Fat Milk Powder, Pelwatte Butter, Pelwatte Yoghurt, Pelwatte Ghee Oil (முழு ஆடைப் பால்மா, கொழுபற்ற பால்மா, வெண்ணெய், யோகட், நெய்) ஆகியன அடங்குகின்றன.

Pelwatte விநியோகச் சங்கிலி மூலம் பெறப்படும் பாலின் அளவு மிகவும் அதிகமானதாகும் என்பதுடன், பெல்வத்தை உயர்தர பாலை மாத்திரம் பெற்றுக் கொள்வதில் உறுதியாக உள்ளதால், கொள்வனவு செய்யும் பாலுக்கு சிறந்த விலையையும் வழங்குகிறது. ‘சிறந்த பால் பொருட்களை சிறந்த மூலப்பொருளான பசும் பாலில் இருந்து மட்டுமே தயாரிக்க முடியும்.’ எனும் நன்கு அறியப்பட்ட தொழில்துறை சார்ந்த பழமொழியை பெல்வத்தை கடைப்பிடிக்கிறது.

Pelwatte Dairy Industries இன் முகாமைத்துவப் பணிப்பாளர் அக்மால் விக்ரமநாயக்க இது தொடர்பில் தெரிவிக்கையில், “சராசரியாக சுமார் 8.4 லீற்றர் மூலப்பொருளான பால் பதப்படுத்தப்பட்டு ஒரு கிலோ பால் மா தயாரிக்கப்படுகிறது. பால்மாவைத் தயாரிக்க அதிகளவு பிரித்தெடுத்தலை மேற்கொள்ள வேண்டுமென்பதை இது காட்டுகிறது. பெல்வத்தை அதன் ஒட்டுமொத்த பால் சங்கிலி மற்றும் உற்பத்திச் செயன்முறைகளில் நூறு சதவீத தரத்தை பேணுவதுடன், அதிலிருந்து கடுகளவேனும் தரம் குறைவு ஏற்படாமலிருக்கும் உத்தரவாதத்தை உறுதி செய்வதால், உற்பத்திச் செலவைக் குறைப்பதற்காக இந்த முக்கியமான செயல்பாடுகளில் ஏதேனுமொன்றை மாற்றுவதில் சாத்தியமில்லை என்பது தெளிவாகிறது. அந்த வகையில் குறுக்குவழிகளை நாடாததன் விளைவாக, நுகர்வுக்குத் தகுதியற்ற தயாரிப்புகளை வழங்குவதை பெல்வத்தை தவிர்க்கிறது. இவ்வாறு (உற்பத்திக்கான) ஒட்டுமொத்த தேசிய பால் விநியோகச் சங்கிலி செலவுகள் அதிகரிக்கும் போது, ​​பெல்வத்தை உற்பத்திகளின் விலைகளிலும் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆயினும், இந்த திருத்தங்களை குறைந்தபட்ச மட்டத்தில் மேற்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.” என்றார்.

பசும் பாலின் பண்ணை விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பும், அண்மைய விலைத் திருத்தத்திற்கு ஒரு முக்கிய காரணமாகும். இந்த அதிகரிப்பு கணிசமான அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், உற்பத்தி செய்யப்படும் பிராந்தியத்தின் அடிப்படையில், தற்போதைய சராசரி விலையானது, லீற்றருக்கு ரூ. 90 முதல் ரூ.105 வரை மாறுபடுகிறது.

“கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், பால் கொள்முதல் விலை 25% ஆக அதிகரித்துள்ளது. மின்சாரம்/ எரிபொருள் விநியோகச் செலவுகள் 20% ஆக அதிகரித்துள்ளது. பொதியிடல் செலவு 40% ஆக அதிகரித்ததுள்ளதுடன், போக்குவரத்து மற்றும் ஊழியர் செலவுகள் 35% ஆக அதிகரித்துள்ளமை போன்ற ஏனைய செலவுகளின் அதிகரிப்பு காரணமாக இறுதி விற்பனை விலைகளில் மாற்றத்தை மேற்கொள்ள பெல்வத்தை நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது” என அக்மால் விக்ரமநாயக்க மேலும் தெரிவித்தார்.

பெல்வத்தை உற்பத்தி வகைகளுக்கான மூலப்பொருளான பால் விநியோகச் சங்கிலியானது, இலங்கையில் உள்ள வலுவான 12,500  பால் விவசாயிகளிடமிருந்து பெறப்படுகின்றது. அவர்களின் வாழ்வாதாரம் பெல்வத்தை நிறுவனத்தை நேரடியாக நம்பியுள்ளது.  ஊவா, கிழக்கு, மத்திய, வடமேல், மாகாணங்களில் 50 பால் சேகரிப்பு மையங்களின் வலையமைப்பை நிறுவனம் கொண்டுள்ளது. இதன் மூலம் மாதாந்தம் 4.5 மில்லியன் லீற்றர் புத்தம் புதிய பால் கிடைக்கப் பெறுகின்றது. கொவிட் நெருக்கடிக்கு மத்தியிலும் நிறுவனம் பாலை விநியோகிக்கும் விவசாயிகளுக்கு ரூ. 3.18 பில்லியனை செலுத்தி வந்துள்ளது (2019/2020 உடன் ஒப்பிடும்போது இது 2020/21இல் 70% வருடாந்த அதிகரிப்பாகும்). மேலும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையிலான பல்வேறு பால் பண்ணை விவசாயிகள் நல முயற்சிகளை இலவசமாக முன்னெடுத்து வருகிறது. இதன் மூலம், கடந்த நான்கு வருடங்களாக ஒவ்வொரு ஆண்டும் பெல்வத்தவிற்கு திரும்பும் அதே பால் விவசாயிகள் தளம்  நடைமுறைப்படுத்துகிறது.

Pelwatte Dairy பற்றி:

பால் பதப்படுத்துதல், கால்நடை தீவனம் மற்றும் பால் பொருட்கள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற Pelwatte Dairy நிறுவனம், 2006 இல் நிறுவப்பட்டது. இது வெளிநாடுகளில் இருந்து பால் பொருட்கள் இறக்குமதிக்கு செலவிடும் வெளிநாட்டு நாணயத்தை வெற்றிகரமாக சேமிக்கும் இலங்கையின் வர்த்தக நாமங்களில் ஒன்றாகும், பால் உற்பத்தித் தொழிலுக்கு அவசியமான தரமான மூலப்பொருட்களின், தொடர்ச்சியான மற்றும் நம்பகமான நடத்தையை பேணும் நோக்கில், இலங்கையில் கறவை மாடு வளர்ப்பை மேம்படுத்துவதனை நிறுவனம் இலட்சியமாக கொண்டுள்ளது. ISO 22000:2018 தரச்சான்றிதழ் பெற்ற கம்பனியான Pelwatte Dairy, இலங்கையின் பால் உற்பத்தித் துறையில் தற்போது இயங்கும் அதி நவீன (டென்மார்க் தொழில்நுட்பத்தை மையமாக வைத்து வடிவமைக்கப்பட்ட) பால் தொழிற்சாலைகளில் ஒன்றை  சொந்தமாகக் கொண்டுள்ளது.

#ENDS#

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *