Hemas Consumer – Rainforest Protectors Sri Lanka இணைந்து 15,000 மரங்கள் நடும் திட்டத்தின் மூலம் மீள் காடாக்கும் முயற்சியில்
இலங்கையின் வீடு மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறையில் முன்னணி உற்பத்தியாளரான Hemas Consumer, இலங்கையின் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை தீர்த்தல் மற்றும் காடுகளைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை நோக்காகக் கொண்டு 15 ஏக்கர் பரப்பில் காடுகளின் மீளுருவாக்கத்தை ஏற்படுத்துவதற்காக Rainforest Protectors Sri Lanka உடன் அண்மையில் கூட்டு சேர்ந்துள்ளது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் சமீபத்தில் Hemas Consumer தலைமை அலுவலகத்தில் கையெழுத்திடப்பட்டதன் மூலம் இக்கூட்டாண்மையும் உறுதிபடுத்தப்பட்டது.
பேபி செரமி மற்றும் குமாரிகா ஆகியன, Rainforest Protectors of Sri Lanka (இலங்கையின் மழைக்காடுகள் பாதுகாப்பாளர்களுடன்) இணைந்து 15,000 மரங்கள் மூலம் பலாங்கொடை காடுகளை மறுசீரமைக்கும் திட்டத்தை ஆரம்பிக்கும் வகையில், கடந்த நவம்பர் 12ஆம் திகதி ஆயிரம் மரங்களை நடுகை செய்தனர். Hemas Consumer Brands மற்றும் Atlas Axila வைச் சேர்ந்த தன்னார்வலர்கள் மூலம் இந்நடவடிக்கை மாபெரும் வெற்றியைப் பெற்றது. இந்நிகழ்வில் Hemas Outreach Foundation அறக்கட்டளையின் Green Club, Rainforest Protectors of Sri Lanka, Forest Conservators, விநியோகஸ்தர்கள், பிரதேச முகாமையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் கிராம மக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து மரங்களை நடுவதில் தங்களது பங்களிப்பை வழங்கியிருந்தனர்.
இத்திட்டம் குறித்து கருத்துத் தெரிவித்த அஸ்மரா மன்னன் பெரேரா, “மரங்களை நடுவதென்பது, இத்திட்டத்தின் மூலம் நாம் அடைய எதிர்பார்க்கும் ஒரு ஆரம்பப் புள்ளி மாத்திரமேயாகும், காட்டின் இப்பகுதியை மீள் காடாக்குவதன் மூலம், பெரிய காடுகளை சுற்றியுள்ள பகுதி காட்டுத் தீயிலிருந்து பாதுகாக்கப்படுவதை நாம் உறுதிசெய்கிறோம். இதன் மூலம் இப்பகுதியில் காணப்படும் Atama மற்றும் Bin Kohomba ஆகிய இரண்டு, நம் நாட்டுக்குரிய தனித்துவமான மரங்களைப் பாதுகாப்பதில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எமது அழகான இத்தீவில் உயிர்ப்பல்வகைமை, வளங்களின் பாதுகாப்பு, உள்நாட்டு அரிய உயிரினங்களைப் பாதுகாப்பது உள்ளிட்ட விடயங்களில் நாம் உறுதியாக இருக்கிறோம்.” என்றார்.
இத்திட்டம் தொடர்பில், உயிர்ப்பல்வகைமை மற்றும் நீர்நிலைப் பாதுகாப்பு பாதுகாப்பாளரான (Biodiversity and Watershed Conservation) நிஷாந்த எதிரிசிங்க தெரிவிக்கையில், “ரஜவக பிரதேசதம் எப்போதும் காட்டுத் தீயிற்கு உள்ளாகும் பகுதியாகக் காணப்படுகின்றது. எனவே இத்திட்டமானது, புதிய மரங்கள், வனப்பகுதிகளை உருவாக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், தற்போதுள்ள வனப்பகுதிகளையும் பாதுகாக்க வழிவகுக்கிறது. இத்திட்டத்தின் மூலம் இப்பிரதேசத்திற்குரிய தனித்துவமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களும் பாதுகாக்கப்படும். இதுபோன்ற திட்டங்கள், இப்பகுதிகளின் இருப்பு தொடர்பான கஷ்டமான நிலைமைகளை, பற்றி மேலும் அதிகமான அதிகாரிகளிடையே விழிப்புணர்வடையச் செய்யும். இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தமை தொடர்பில், Hemas Consumer மற்றும் Rainforest Protectors ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க விரும்புவதோடு, இது தொடர்பில் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கவும் நாம் எதிர்பார்க்கிறோம்.” என்றார்.
Rainforest Protectors of Sri Lanka (இலங்கையின் மழைக்காடுகள் பாதுகாப்பாளர்கள்) என்பது இலங்கையின் மழைக்காடுகளைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். இதில் தன்னார்வலர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அங்கம் வகிக்கின்றனர். அவர்கள் ஆராய்தல், விழிப்புணர்வு ஏற்படுத்தல், பாதுகாத்தல் மற்றும் மறுசீரமைத்தல் ஆகிய முயற்சிகளை செயல்படுத்துகின்றனர். அவர்கள் தற்போது, சிங்கராஜ, கன்னெலிய மழைக்காடுகள் மற்றும் ஏனைய ஒழுங்கீனமடைந்துள்ள மழைக்காடுகளையும் பாதுகாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பேபி செரமி மற்றும் குமாரிகா ஆகிய இரு வர்த்தகநாமங்களும் Rainforest Protectors உடன் இணைந்து பணியாற்றுவதுடன், எதிர்காலத்தில் காடுகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்கான மேலும் பல முயற்சிகளை முன்னெடுப்பதற்கு இது ஒரு ஊக்கியாக இருக்குமெனும் நம்பிக்கையில், இத்திட்டத்தினை நீண்ட கால முயற்சியாக முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளனர். பேபி செரமி மற்றும் குமாரிகா ஆகிய இரு தரக்குறியீடுகளும் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் சமூக ரீதியான முயற்சிகளை ஆதரித்தல் ஆகிய எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்டு செயற்படும், மிகவும் புகழ்பெற்ற தனிப்பட்ட பராமரிப்பு தரக்குறியீடுகளாகும்.
Photo Caption:
15,000 மரங்களை நடும் திட்டத்தில் Hemas Consumer Brand மற்றும் Cross Group குழுவினர்
Hemas Consumer Brands பற்றி
வீடு மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு தயாரிப்புகளின் இலங்கையின் முன்னணி உற்பத்தியாளரான Hemas Consumer Brands, பல ஆண்டுகளாக வலுவான நோக்கம் கொண்ட தரக்குறியீடுகள் கொண்ட தயாரிப்புகள் மற்றும் முற்போக்கான நிலைபேறான தன்மையான நடைமுறைகள் மூலம், நுகர்வோர் இதயங்களை வென்றுள்ளது. Hemas Consumer Brands ஆனது உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளின் வரிசைகள் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு தீர்வுகளை வழங்கி வருகிறது. வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட புத்தாக்கம் மிக்க குழுக்கள் மூலம், உள்ளூர் தேவைகளை அறிந்து அதன் மூலம் சிறந்த தயாரிப்புகளை உருவாக்குவது தொடர்பில் அது பாராட்டைப் பெற்றுள்ளது. அந்த வகையில், அனைத்து இலங்கையர்களுக்கும் மிகவும் நிலைபேறான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய எதிர்காலத்திற்கு பங்களிப்பதனை நோக்காகக் கொண்டு, நிறுவனம் பல வழிகளிலும் முற்போக்காக செயற்பட்டு முன்னணியில் திகழ்கிறது. அந்த வகையில், அர்த்தமுள்ள சலுகைகளை உருவாக்கி, நம்பகமான கூட்டாண்மைகளை வளர்த்து, மேலும் சூழலுக்கு உகந்த உலகத்தை உருவாக்குவதன் மூலம் நாட்டின் அனைத்து பாகங்களிலுமுள்ள சமூகங்களின் வாழ்க்கையை சென்றடைகிறது.