தொடர்ந்து 9ஆவது ஆண்டாக பணியாற்ற உகந்த பணியிடங்கள் விருதுகளில் DIMO பிரகாசிப்பு
இலங்கையின் முன்னணியில் உள்ள பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றான DIMO, சமீபத்தில் நடைபெற்ற Great Place to Work (GPTW) விருது வழங்கும் விழா 2021 இல், தொடர்ந்து 9ஆவது ஆண்டாக பணியாற்றுவதற்கான சிறந்த இடமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 2ஆவது முறையாக ‘Asia’s Best Workplace 2021’ (ஆசியாவின் சிறந்த பணியிடம்) பட்டத்தையம் வென்றுள்ளது. அத்துடன், நிறுவனத்தின் சிறந்த மக்கள் நடைமுறைகளுக்கான விருதுகளான, திறமை ஈர்ப்பு, உள்வாங்குதல் அடிப்படையில் மக்கள் முன்முயற்சிகளில் சிறந்து விளங்குதல் விருது மற்றும் உள்ளடக்கிய கலாச்சார அடிப்படையில் மக்கள் முன்முயற்சிகளில் சிறந்து விளங்குதல் விருது, ஆகிய இரண்டு வகை விருதுகளையும் DIMO பெற்றது.
DIMO ஆனது அதன் பல்வேறுபட்ட பணியாளர்களுக்கும் ‘வேலையை இன்பமாக்குதல் மற்றும் வெகுமதி அளிப்பது’ எனும் அதன் பணியாளர் மதிப்பு முன்மொழிவை உண்மைப்படுத்தியுள்ளதுடன், ஒரு வியக்கத்தக்க தொழில் வழங்குனராக அதன் பல்லாண்டு கால அங்கீகாரத்தைத் தக்கவைத்துள்ளது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
கனவுகள் மற்றும் அபிலாஷைகளைத் தூண்டி, 1,800 இற்கும் மேற்பட்ட அதன் ஊழியர்களின் திறமையைக் கடந்து, ஒவ்வொரு குழு உறுப்பினரின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சியை அவர்கள் கொண்டுள்ள விசேடத்துவ பகுதியைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அவர்களை மேம்படுத்துவதன் மூலம் அவர்களின் தனித்துவமான திறன்களை DIMO உறுதியாகப் புரிந்துகொள்கிறது. நல்ல திறமைகளுக்கு திரையிடுவதற்கான வாய்ப்புகளைத் தவிர, மாற்றத்திற்கு பதிலளிக்கும் திறனுடன் தலைமைத்துவத் திறன்களுடன் சான்றளிக்கப்படுகிறார்கள். நிறுவன கட்டமைப்பின் ஒவ்வொரு கிளையிலும் பன்முக படைப்பாற்றலை கொண்டிருப்பதன் மூலம் நிறுவனம் கொண்டுள்ள பன்முகத்தன்மை ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றது. பக்கச்சார்பற்ற திறமையை வளர்ப்பதற்கான நீண்ட கால நடவடிக்கைகள் மூலம், இவ்வருடம் திறமையை ஈர்த்தல் மற்றும் ஈடுபாடு தொடர்பான மக்கள் முன்முயற்சிகள் பிரிவில் DIMOவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
‘பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கம்’ என்பது நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க நிலைபேறான இலக்குகளில் ஒன்றாகும் என்பதுடன், நிறுவனத்தில் பாலின சமத்துவத்தை மேம்படுத்த DIMO உறுதிபூண்டுள்ளது. அதன் நிலைபேறான தன்மை நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக, 2025 ஆம் ஆண்டிற்குள் முடிவெடுக்கும் பதவிகளில் பெண்களை 10% தொடக்கம் 40% ஆக உயர்த்துவதற்கான இலட்சிய இலக்கை DIMO நிர்ணயித்துள்ளது. ஊழியர்கள் தொடர்பான பொறுப்புகளை ஆதரிப்பதை உள்ளடக்கிய, மாற்றுத்திறனாளிகளை சேர்த்துக் கொள்ளுதல் மற்றும் ஒதுக்கப்பட்ட சமூகங்கள் மீது பாகுபாடு காட்டாமை உள்ளிட்ட பன்முகத்தன்மையின் ஒவ்வொரு தன்மையையும் முன்னேற்ற DIMO ஒரு நிலையான உந்துதலைக் கொண்டுள்ளது. தனிநபர் வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல், மக்கள் ஒருவரையொருவர் மதிக்கும், ஆதரிக்கும் சூழலை உருவாக்குவதில் நிறுவனம் அதன் அனைத்து பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்குதல் முன்முயற்சிகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்த வரலாற்று நடைமுறைகள், சமீபத்தில் நடைபெற்ற GPTW விருது வழங்கும் விழாவில், உள்ளடக்கிய கலாசாரப் பிரிவில், மக்கள் முன்முயற்சிகளில் சிறந்து விளங்கும் விருதைப் பெற உத்தரவாதமளித்தன.
DIMOவின் தலைவரும் நிர்வாகப் பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே இது தொடர்பில் தெரிவிக்கையில், “இந்த அங்கீகாரம் மூலம், கொவிட் தொற்றுநோயின் சவால்களை நாம் எவ்வளவு வெற்றிகரமாக வழிநடாத்தியுள்ளோம் என்பதையும், புதிய வேலை முறைகளுக்கு ஏற்றவாறு நாம் எவ்வாறு எம்மை மாற்றியமைத்துள்ளோம் என்பது தொடர்பிலும் DIMO மிகவும் திறமையான மற்றும் ஈடுபாடுள்ள பணிக்குழாமைக் கொண்டுள்ளது என்பதும் என்னால் அளவிட முடிகிறது. இது எமது ஆழமான வேரூன்றிய நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும். திறமையாளர்களை ஈர்ப்பதில் உன்னிப்பாகக் கட்டமைக்கப்பட்ட சிறந்த நடைமுறைகள் மற்றும் சம வாய்ப்பு, தகுதி மற்றும் பரஸ்பர மரியாதையை முன்னேற்றுவதில் எமது விடாமுயற்சியின் சான்று இதுவாகும். இது எமது வளர்ச்சிச் செயல்பாட்டில் யாரையும் நாம் விட்டுச் செல்லவில்லை என்பதை உறுதி செய்துள்ளது. ஒரு குழுவாக இந்தப் பயணம் தொடர்பில் நான் பெருமையடைவதுடன், எமது குழுவினர் அவர்களது முதன்மையான அணுகுமுறையாக DIMO வினை ஏராளமான வெற்றி மற்றும் செழிப்பை நோக்கி அழைத்துச் செல்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
கொவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் இயங்கி வரும் DIMO, இந்த புதிய இயல்பு நிலைக்கு மத்தியிலும் சமூகத்தின் கேள்விகளுக்கான விநியோகத்தை சமாளிக்கும் வகையில், அதன் நெகிழ்ச்சியான பணியாளர்கள் மூலம் தூண்டப்படுகிறது. பணிச்சூழலில் மன மற்றும் உடல் நல ஸ்திரத்தன்மைக்கு உறுதியளிக்கும் அதே வேளையில், தொடர்ச்சியான பயிற்சி மற்றும் மேம்பாடு, நிலையான வெளிப்படையான தகவல்தொடர்பு ஆகியவற்றுடன் ஒரு கலப்பின பணியாளர்களாக அதன் தனித்துவமான பணிக் கலாசாரத்தை மேலும் வளர்க்க நிறுவனத்தினால் முடிகிறது. DIMO குழுவின் கூட்டுப் பங்களிப்பு மற்றும் நிறுவனத்தின் தலைமை ஆகியன இறுதி இலக்குகளை நோக்கி அணிவகுத்துச் செல்லும் அதன் உயர்-செயல்திறன் கொண்ட அணிகளை நிலைநிறுத்த உதவியுள்ளது. பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கிய தன்மைக்கு முன்னுரிமை அளித்து, யாரையும் விட்டுச் செல்லாத வகையில், ஆசியாவில் உள்ள பாரிய அளவிலான நிறுவனங்களுக்கிடையில் DIMO தனது புத்தாக்கமான திறமையுடன் முன்னேறுகிறது.
END