அதிநவீன, உயர் தொழில்நுட்ப Huawei MatePad T 10s தற்போது இலங்கையில் கிடைக்கிறது

0

முன்னணி தொழில்நுட்ப தீர்வுகளின் வழங்குநரான Huawei, ஒரு ஒப்பிட முடியாத டெப் சாதனமான Huawei MatePad T 10s இனை உள்ளூர் நுகர்வோருக்காக தற்போது வழங்குகின்றது. மிக இலகுரக மற்றும் மெலிதான அதிநவீன வடிவமைப்பு மற்றும் உயர் தெளிவுத் திறன் கொண்ட திரையுடன் வலுவான இருப்பை அது காண்பிக்கிறது. Huawei MatePad T 10s ஆனது, 10.1 அங்குல 1920 X 1200 FHD தெளிவுத் திறன் கொண்ட திரையை, சிறிய சட்டகத்திற்கான இடத்தை பேணியவாறு கொண்டுள்ளது. இதன் மூலம் சிறந்த காட்சி வெளியீட்டினை அது வழங்குகிறது. குறிப்பாக HUAWEI ClariVu™ தொழில்நுட்பத்துடன் அது இணைக்கப்பட்டுள்ளதன் காரணமாக, அதில் அனைத்துமே தெளிவாகவும் பிரகாசமாகவும் காட்சியளிக்கின்றது. இதன் மூலம் உங்கள் கைகளில் உயிர்ப்பாக செயற்படுகிறது.

Huawei MatePad T 10s ஆனது, உயர் அலைவீச்சைக் கொண்ட இரட்டை ஸ்பீக்கர் தொகுதியுடன் கூடிய, இருபுறமும் நன்கு சமநிலையான ஒலியை விருந்தாக வழங்குகிறது. இதன் மூலம் வலுவான அல்லது ஏனைய ஒலி அமைப்புகளை பயனர்கள் பெறலாம். இதில் Harman Kardon தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளதால், அது ஒலியை சிறந்த தெளிவுடன் வழங்குகிறது. எனவே, திரைப்படங்களைப் பார்ப்பதற்கு மட்டுமல்லாது, கற்றல், கேமிங் போன்ற விடயங்களின் போது, ஹோம் தியேட்டர் போன்ற சினிமா ஒலி அனுபவத்தைப் பெறுவீர்கள்.

Huawei MatePad T 10s ஆனது, EMUI 10.1 octa-core chipset மற்றும் மேம்பட்ட algorithm ஆகியவற்றை இணைத்து, மேம்படுத்தப்பட்ட கிரபிக்ஸ் மற்றும் மேம்பட்ட செயல்திறனை வழங்குகிறது. செய்திகளை பார்வையிடும்போது, ​​வீடியோக்களைப் பார்க்கும்போது, ஒன்லைனில் ஷொப்பிங் செய்யும்போது அல்லது நீங்கள் விரும்பிய செயலிகளுக்கு இடையில் மாறும்போது, ​​மிருதுவான மற்றும் தங்குதடையற்ற அனுபவத்தை வழங்குகிறது. Huawei App Multiplier ஆனது, சாதனம் கிடையாக உள்ள நிலையில் ஒரே செயலியின் இரண்டு விண்டோக்களை காண்பிக்க உதவுகிறது. அத்துடன் தங்கள் வசதிக்கேற்ற இடது மற்றும் வலது விண்டோக்களின் அளவையும் மாற்றியமைக்கலாம். உதாரணமாக, ஒருவர் இணையத்தில் ஷொப்பிங் செய்யும் பொருட்களை ஒரு பக்கத்தில் பார்த்தவாறு, பொருட்களின் பெரிதாக்கப்பட்ட படங்களுடன் அதன் வடிவமைப்பு விபரங்களை பார்வையிடலாம். அல்லது  செய்திகளைப் படித்தவாறு அதன் பக்கத்தில் அது தொடர்பான அறிக்கைகளை வைத்து பார்க்கலாம்.

Huawei MatePad T 10s ஆனது TÜV Rheinland சான்றளிக்கப்பட்டு, கண்களுக்கு வசதியானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தீங்கு விளைவிக்கும் நீல ஒளியைக் குறைக்க உதவுவதுடன், உங்கள் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் கண்களுக்கு வசதியை வழங்குகிறது. கிட்டத்தட்ட புத்தகங்களை வாசிப்பது போன்ற சுவாரஸ்யமான அனுபவத்திற்காக பயனர்கள் e-Book Mode இனை தெரிவு செய்யலாம். அத்துடன் இரவாகும் போது, ​ பார்ப்பதற்கு இதமளிக்கும் வகையில் குறைந்த ஒளி வேறுபாடுகளுடன், அதிக மிருதுவான காட்சி விளைவைப் பெற, Dark Mode இற்கு மாற முடியும்.

Huawei MatePad T 10s ஆனது Kids Corner எனும் பிரத்தியேக அணுகல் மூலம் உங்கள் குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற உள்ளடக்கத்துடன், சுதந்திரமாக அவர்களை அதனை பயன்படுத்த அனுமதிக்கிறது. அவர்களின் விலைமதிப்பற்ற பார்வைத் திறனைப் பாதுகாக்கும் வகையில், அது ஆறு அடுக்கு பாதுகாப்பைக் கொண்டுள்ளது. இப்போது குழந்தைகள் வெவ்வேறு நிலைமைகளுக்கு ஏற்ற விளைவுகளுடன் விளையாடுதல் மற்றும் கற்றல் நடவடிக்கையில் ஈடுபடலாம். அத்துடன், அவர்களின் சிறிய கண்களை பாதுகாக்கும் வகையில், ஆரோக்கியமற்ற பயன்பாட்டைத் தடுப்பது தொடர்பான எச்சரிக்கைகளையும் அது அனுப்புகின்றது.

Huawei MatePad T 10s ஆனது, நீல (Deep Sea Blue) நிறத்தில் நேர்த்தியான, மிக மெலிதான, பணிச்சூழலுக்கேற்ற வடிவமைப்புடன் வருகிறது. இது தற்போது இலங்கையில் உள்ள அனைத்து Huawei அனுபவ மையங்கள், சிங்கர் காட்சியறைகள், அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள், Daraz.lk மற்றும் Singer.lk போன்ற இணைய வர்த்தக தளங்களிலும் கிடைக்கிறது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *