DIMO – Allianz உடன் இணைந்து தனது வாடிக்கையாளர்களுக்கு ‘MercedesProtect’ இனை வழங்குகிறது

0

இலங்கையில் உள்ள முன்னணி பல்வகை கூட்டு நிறுவனங்களில் ஒன்றான DIMO, அதன் Mercedes-Benz வாடிக்கையாளர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட மோட்டார் காப்புறுதித் திட்டமான ‘MercedesProtect’ இனை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Mercedes-Benz இன் உலகளாவிய காப்புறுதி பங்காளரான Allianz உடன் இணைந்து, DIMO வின் பெருமைக்குரிய Mercedes-Benz வாடிக்கையாளர்களுக்கு சிறந்ததை வழங்கும் நோக்கில் இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

MercedesProtect ஆனது, வாகன உரிமையாளரின் பூச்சிய பங்களிப்பு அடிப்படையிலான காப்புறுதி வசதியாகும். வாகனக் காப்புறுதியின் போதான கோரல்களின் (insurance claims) போது, உரிமையாளரின் கணக்கின் பகுதியை முழுமையாக விட்டுக்கொடுத்து, விபத்து பழுதுபார்த்தலை முற்றிலும் பூச்சிய செலவில் வழங்குகிறது. இத்திட்டத்தில், மோட்டார் காப்புறுதி கோரலின் விபத்து தொடர்பான பழுதுபார்த்தலில், வாடிக்கையாளர் எந்தவொரு பகுதியையும் செலுத்த வேண்டியதில்லை. இதன் மூலம், புகழ்பெற்ற Mercedes-Benz வாகனங்களுக்கான சிறந்த பாதுகாப்புத் தீர்வாக MercedesProtect அமைகின்றது.

இந்த காப்புறுதித் திட்டம், உற்பத்தி செய்யப்பட்ட திகதியிலிருந்து 5 வருடங்களுக்குக் குறைவான வாகனங்களுக்கு பொருந்தும் என்பதுடன், வாகனத்தின் அனைத்து உடல் மற்றும் பூச்சு பழுதுபார்ப்புகள், சேவைகள் யாவும் Mercedes-Benz இனது விசேட மையமான DIMO 800 இனால் பிரத்தியேகமாக கையாளப்படுகின்றன. அனைத்து பழுதுபார்த்தல் பணிகளும் Mercedes-Benz AG பழுதுபார்த்தல் வழிகாட்டல்களை இறுக்கமாக பின்பற்றியவாறு மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கையில் Mercedes-Benz வாகனங்களுக்கான ஒரே அங்கீகரிக்கப்பட்ட முகவர் DIMO என்பதுடன், தென்கிழக்கு ஆசியா முழுவதிலும் உள்ள வாகன உடல் மற்றும் பூச்சு பழுதுபார்ப்புகளுக்கான Mercedes-Benz AG சான்றளிக்கப்பட்ட, Mercedes-Benz AG பயிற்சி பெற்ற பழுதுபார்த்தல் வல்லுநர்கள் குழுவைக் கொண்ட, பொது விநியோகஸ்தர் சேவை மையத்தையும் அது கொண்டுள்ளது. Mercedes-Benz அசல் உதிரிப்பாகங்கள், விசேட கருவிகள், உபகரணங்களைப் பயன்படுத்தி, Mercedes-Benz AG இன் உரிய பழுதுபார்த்தல் வழிகாட்டலின் அடிப்படையில் அனைத்து பழுதுபார்ப்புகளும் சேவைகளும் செயற்படுத்தப்படுகின்றன.

MercedesProtect ஆனது Call & Go வசதியை கொண்டுள்ளது. இதில், விபத்து நடந்த இடத்திற்கு முகவர் வரும் வரை வாகனச் சாரதிகள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் Allianz Insurance நிறுவனத்திற்கு அறிவித்துவிட்டு தங்கள் பயணத்தைத் தொடர முடியும். மீதமுள்ளவற்றை Allianz Lanka கவனித்துக் கொள்ளும்.

DIMO – Allianz இணைந்து, பெருமைக்குரிய Mercedes-Benz வாடிக்கையாளர்களுக்கு MercedesProtect காப்புறுதி திட்டத்திற்கான தனிப்பயனாக்கப்பட்ட மோட்டார் காப்புறுதி அட்டையையும் வழங்குவதோடு, இது அச்சிடப்பட்டதாகவும் e-card ஆகவும் வழங்கப்படுவதுடன், அவை எப்போதும் ஒரே வகையைில் செல்லுபடியானவையாகும். MercedesProtect ஆனது, வாகனத்தின் உரிமையாளரை மட்டுமல்லாது, மூன்றாம் தரப்பினரையும் உள்ளடக்கியதாகும். இது தனி நபருக்குச் சொந்தமான மோட்டார் கார்களுக்கான மூன்றாம் தரப்பு சேதங்களுக்கு ரூ. 10 மில்லியன் வரை ஒதுக்குவதோடு, இயற்கை ஆபத்துகள், மூன்றாம் தரப்பு சொத்துகளுக்கான சேதங்கள், வாகன கண்ணாடி (windscreen) ஆகியவற்றுக்கு ரூ. 100,000 வரையான பாதுகாப்பையும் வழங்குவதுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரிகளின் வெளியேற்றப்படும் airbags இற்கு முழு செலவையும் (full cover) ஏற்கின்றது. MercedesProtect இன் உருவாக்கத்தில், குடும்பத்திற்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதில், குழந்தைகளுக்கான பாதுகாப்பு, மருத்துவ பாதுகாப்பு, ஆயுள் காப்புறுதி போன்ற பல தனித்துவமான பாதுகாப்புகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த தனித்துவமான காப்புறுதித் திட்டமானது, வாடிக்கையாளர்களுக்கு கடுமையான காயங்களின் போது, வாகன குத்தகையில் ஏதேனும் நிலுவை காணப்படுமாயின், ரூ. 500,000 வரையில் செலுத்துவதிலும் அது கவனம் செலுத்துகிறது.

Allianz Insurance Lanka Limited இன் பிரதம நிறைவேற்று அதிகாரி கனி சுப்ரமணியம் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “Daimler உடனான Allianz இன் நீண்டகால உலகளாவிய உறவை கட்டியெழுப்புவதில் நாம் மகிழ்ச்சியடைவதுடன், இலங்கையில் உள்ள DIMO வின் Mercedes-Benz வாடிக்கையாளர்களுக்கு மேலும் பல பெறுமதியான சலுகைகளையும் வழங்குகிறோம். இந்த கூட்டாண்மை மூலம், மதிப்புமிக்க வாடிக்கையாளர்களின் தனித்துவமான வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட, பிரத்தியேகமான காப்புறுதித் தீர்வை MercedesProtect வழங்குகின்றமை தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பையும், நேர்த்தியான பலன்களின் தொகுப்பையும் வழங்குவதன் மூலம், அவர்களுக்கு அதிக மன அமைதியையும் நம்பிக்கையையும் அளிக்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எமது வாடிக்கையாளர்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பதில் நாம் உறுதியாக உள்ளோம், DIMO போன்ற ஒரே எண்ணம் கொண்ட கூட்டாளர்களுடன் தொடர்ந்து பணியாற்றுவதில் ஆர்வமாக இருக்கிறோம். அந்த வகையில் புதுமையான காப்புறுதி தீர்வுகளை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அதிக தைரியத்தை அளிக்கும் எதிர்காலத்தை எதிர்கொள்ள ஊக்கமளிக்கிறோம். என்றார்.

DIMO இன் Mercedes-Benz Cluster பிரதான செயற்பாட்டு அதிகாரி ரஜீவ் பண்டிதகே கருத்துத் தெரிவிக்கையில், “DIMO ஆனது, சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வலியுறுத்துவதன் மூலம், ‘சிறந்தது அதை தவிர எதுவுமே இல்லை’ எனும் Mercedes-Benz வாசகத்திற்கு உண்மையாக இருந்து, நாட்டில் புதிய புரட்சியை ஏற்படுத்துகிறது. இந்த பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட காப்புறுதித் திட்டம், ஒரு பெறுமதி சேர்க்கப்பட்ட மோட்டார் காப்புறுதி திட்டமாக, உத்தரவாதம், மன அமைதி, எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக DIMO மீது வைக்கப்பட்டுள்ள பாரிய நம்பிக்கையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது. என்றார்.

MercedesProtect ஆனது விபத்து நடந்த இடத்திலிருந்து DIMO 800 சேவை மையத்திற்கு விசேட வாகனம் மூலம் கொண்டு செல்லும் சேவையைக் கொண்ட விசேட திட்டத்தையம் உள்ளடக்கியுள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் தாங்கள் கொண்டு செல்வதற்காக செலவிடும் பணத்திற்காக ரூ. 10,000 இனை இதில் பெறவும் முடியும். அத்துடன் பழுதுபார்ப்பு முடிவடைய மூன்று நாட்களுக்கு மேல் ஆகுமானால், வாடகை வாகன பயன்பாட்டிற்காக, பதினைந்து நாட்கள் வரை வாடிக்கையாளருக்கு ஆகும் செலவுக்காக, நாளொன்றுக்கு ரூ. 1,000 வரையான மீளப் பெறும் வசதியையும் இத்திட்டம் கொண்டுள்ளது.

ஒருவர் தனது வீடு மற்றும் வர்த்தக நிலையத்தை காப்புறுதி செய்வது கடினமான விடயமாக இருக்கலாம். எனவே, பல்வேறு வகையான காப்புறுதிகளை நிர்வகிப்பதற்கான சுமையை எளிதாக்கும் வகையில் MercedesProtect ஆனது, வீடு மற்றும் வர்த்தக நிலைய காப்புறுதிக்கான அனைத்து ப்ரீயமியம் திட்டங்களுக்கும் 25% தள்ளுபடியை வழங்குகிறது. தெரிவு செய்யப்பட்ட திட்டங்களுக்கு அமைவாக MercedesProtect ஆனது, குத்தகை அல்லது வாடகை கொள்வனவு அமைப்புகளையும் வழங்குகிறது. அத்துடன் Allianz Drive Safe ‘2 in 1’ ப்ரீமியம் பாதுகாப்பானது, தனிப்பட்ட மற்றும் வாடகை வாகனங்களுக்கும் பொருத்தமான வேளைகளில் பொருந்தும்.

Allianz Lanka ஆனது, ஜேர்மனியின் Allianz SE இற்கு முழுமையாக உரித்தான துணை நிறுவனமாகும். இது ஒருங்கிணைக்கப்பட்ட நிதிச் சேவைகளில் உலகின் முன்னணி நிறுவனமான Allianz Group கொண்டுள்ள நிறுவனமாகும். 2009 ஆம் ஆண்டில், Allianz SE ஆனது Mercedes-Benz AG உடன் ஒரு மூலோபாய கூட்டாண்மைக்குள் நுழைந்ததுடன், அது தற்போது உலகம் முழுவதும் 27 நாடுகளில் வியாபித்துள்ளது. 2005 ஆம் ஆண்டு Greenfield செயற்பாடாக ஆரம்பிக்கப்பட்ட Allianz Lanka தற்போது இலங்கையில் வேகமாக வளர்ந்து.

வரும் காப்புறுதி சேவை வழங்குனர்களில் ஒன்றாக உள்ளதுடன், தனது வாடிக்கையாளர்களின் கடின நிலைகளை புரிந்துகொண்டு அதன் உலகத்தரம் வாய்ந்த தயாரிப்பு வகைகளின் தீர்வுகளை வழங்குவதன் மூலம் அவர்களின் வியாபார உத்திகளுக்கு ஆதரவளிப்பதில் பெருமை கொள்கிறது. Allianz Group இனது பலத்தால் ஆதரிக்கப்படும் இந்நிறுவனம், 100 மில்லியனுக்கும் அதிகமான சில்லறை மற்றும் பெருநிறுவன வாடிக்கையாளர்களைக் கொண்டதும், உலகின் மிகப்பெரிய முதலீட்டாளர்களில் ஒன்றுமாகும்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *