Study Group அதன் Job Ready திட்டத்தை Teesside பல்கலைக்கழக இலங்கை மாணவர்களுக்கு வழங்குகிறது
மாணவர்கள் சிறந்த ஆற்றல்களைக் கற்றுக் கொள்வதோடு, அது அவர்களுக்கு வேலைவாய்ப்பை பெறும் வாய்ப்பை அதிகரித்து, கற்கும் போதே பணியாற்றும் அனுபவத்தை வளர்க்கும்
வெளிநாடுகளில் கற்கும் இலங்கை மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்கான மிக நம்பிக்கைக்குரிய வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், முன்னணி சர்வதேச கல்வி நிறுவனமான Study Group, அதன் புதிய இங்கிலாந்து உயர்கல்வி பங்காளரான Teesside பல்கலைக்கழகத்தில் கற்கும் மாணவர்களுக்கு அதன் Job Ready திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது.
Job Ready திட்டமானது, இலங்கை மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கான முக்கிய ஆற்றல்களை வளர்க்க உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், கற்கும் போதே பணியாற்றும் அனுபவத்தை வளங்குவதோடு, பட்டப்படிப்பை பூர்த்தி செய்யும் நிலையில் உலகளாவிய தொழில்வாய்ப்பை அணுகும் வாய்ப்பையும் அவர்களுக்கு வழங்குகிறது. அந்த வகையில், UK International Study Centre அல்லது International College இல் தங்களுக்கான இடத்தை உறுதி செய்யும் அனைத்து மாணவர்களுக்கும் சேவைக் கட்டணத்தை Study Group பொறுப்பேற்கும்.
Study Group மாணவர்கள் அவர்களது கற்கை நெறிக்கான அனைத்து வளங்களையும் பெறுவதுடன், சுய விபரக் கோவையை எழுதுதல் மற்றும் சுயவிபர விளக்க முன்வைப்புகள் (CV writing, profile presentation) போன்றவை தொடர்பில் அவர்களுக்கு உதவியளிக்கப்படும். அத்துடன் நேர்முகத் தெரிவு பயிற்சிகள் மற்றும் போலி நேர்முகத் தெரிவுகள் போன்றவை மூலம் பயன் பெற முடியும். அத்துடன் இப்பாடநெறியை நிறைவு செய்தவுடன், சாத்தியப்படுகின்ற மூன்று தொழில் வழங்குனர்களுடனான நேர்முகத் தெரிவுக்கான வாய்ப்புகளைப் பெறுவதற்கான பிரத்தியேக உதவியைப் பெறவும் அவர்கள் தகுதி பெறுவர். மாணவர்கள் தெரிவு செய்த International Study Centre அல்லது International College இற்கு அருகில் அமைந்துள்ள நிறுவனங்களில் இந்த நேர்முகத் தெரிவுகள் நடத்தப்படும்.
Job Ready திட்டத்தின் அறிமுகம் தொடர்பில், Study Group நிர்வாக பணிப்பாளர் James Pitman தெரிவிக்கையில், “கொவிட் தொற்றானது இலங்கையில் உள்ள பல சர்வதேச மாணவர்களின் குடும்பங்களில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இவ்வருடம் Study Group இல் மாணவர்கள் தங்கள் கற்கைகளைத் தொடரும்போது அவர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்த உதவுவதற்காக Job Ready திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம். மூன்று நேர்முகத் தெரிவுக்கான வாய்ப்புகளை ஏற்பாடு செய்வதில் மாணவர்களுக்கு அர்ப்பணிப்பு மிக்க உதவிகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இலங்கை மாணவர்கள் தங்கள் பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்ததைத் தொடர்ந்து அவர்களின் வாழ்க்கைக்குத் தயாராகும் வகையில், அவர்கள் தங்கள் தொழில்வாய்ப்புகளை அடைவதிலும் அவர்களுக்கு உதவியளிக்கும்.
இலங்கையின் Study Group பிராந்திய பணிப்பாளர் சிறினி பண்டார தெரிவிக்கையில், “Job Ready திட்டம் என்பது இலங்கை மாணவர்கள் தங்கள் உயர் கல்வி கற்கையை நிறைவு செய்தவுடன் அவர்கள் வேலைக்கு தயாராக உள்ளதை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு அற்புதமான திட்டமாகும். இலங்கை மாணவர்கள், தாங்கள் தேர்ந்தெடுத்த கல்வித் துறையில் அறிவு மற்றும் நிபுணத்துவத்தை உருவாக்க வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதோடு, அதனுடன் இணைந்தவாறு, தொழில்முறை ரீதியான முக்கிய திறன்கள் மற்றும் வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகளை மேம்படுத்தவும், அவர்கள் இங்கிலாந்துக்கு வந்தவுடன் உரிய பணி அனுபவத்தை உருவாக்குகிறது. இதன் மூலம், அவர்கள் இலங்கை தொழில் துறையில் உள்ள திறமைக்கான இடைவெளிகளை நிரப்பும் வகையிலான வலுவான நிலையில் இருப்பார்கள்.
Study Group பற்றி
Study Group ஆனது, சர்வதேச மாணவர்களின் முன்னணி கல்வி வழங்குனர் என்பதுடன், அதன் மாணவர்கள் மற்றும் பங்காளிகளுக்கு அது வெற்றியை அடைய வழி காட்டுகிறது. கடந்த 25 வருடங்களாக, Study Group ஆனது, இங்கிலாந்து, ஐரோப்பா, வட அமெரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. அது பல்வேறு வகையன கல்விப் பின்னணியைக் கொண்டுள்ள மாணவர்களை, தமது வளாகத்தில் உள்ள சர்வதேச கற்கை மையங்கள் ஊடாக, அவர்கள் தேர்ந்தெடுக்கும் பல்கலைக்கழகத்தின் மூலம் அவர்களது வெற்றிக்காக அவர்களைத் தயார் செய்கிறது. அவர்களது நிகழ்ச்சித் திட்டங்கள், மாணவர்களுக்கு பல்கலைக்கழக முன்னேற்றத்திற்குத் தேவையான மொழி, கல்வி, சமூகத் திறன்களை வழங்குவதுடன், அவர்கள் பட்டம் பெற்ற பின்னரும் தொடர்ச்சியான வெற்றியை அவர்களுக்கு அளிக்கின்றது.