ரூபா 1 மில்லியன் பெறுமதியான பாதுகாப்பு முகக்கவசங்களை இலங்கை சுகாதார அமைச்சுக்கு நன்கொடையாக வழங்கிய vivo
COVID-19 தொற்று நிலையை எதிர்கொள்ளும் முகமாக உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தக நாமமான vivo, ரூபா 1 மில்லியன் பெறுமதியான பாதுகாப்பு முகக்கவசங்களை இலங்கை சுகாதார அமைச்சிடம் கையளித்தது.
vivoவின் #vivocare முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நன்கொடை வழங்கப்பட்டது. இதன்போது 15,000 முகக்கவசங்கள், இச்சந்தர்ப்பத்தில் கடும் சிரமங்களுக்கு மத்தியில் நோய்த்தொற்றை தடுப்பதற்காக அயராது பணியாற்றும் சுகாதாரத் துறை பணியாளர்களுக்காக வழங்கப்பட்டன. சுகாதாரத்துறை பணியாளர்களை பாதுகாப்பதன் அவசியத்தை vivo Mobile Lanka நன்கு புரிந்து கொண்டுள்ளமையால், இந்த பராமரிப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முகமாக விசேட முயற்சிகளை எடுத்து வருகிறது.
இந்த பாதுகாப்பு முகக்கவச தொகையானது சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம், vivo Mobile Lankaவின் பணிப்பாளர் எலிசன் ஜின்னினால், அமைச்சக வளாகத்தில் வைத்து ஏப்ரல் 9 ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டது.
இது தொடர்பில் vivo Mobile Lankaவின் பிரதான நிறைவேற்று அதிகாரி கெவின் ஜியாங், கருத்து தெரிவிக்கையில்,” இந்த முக்கியமான காலப்பகுதியில், நாம் அனைவரும் ஒற்றுமையாக நின்று இந்த உலகளாவிய சுகாதார தொற்றுநோயைக் கட்டுப்படுத்த பங்களிக்க வேண்டியது அவசியமாகும். இந்த காலகட்டத்தில் எங்கள் புதிய ஓப்லைன் தயாரிப்பு வெளியீடுகள் அனைத்தையும் ஒத்திவைக்க திட்டமிட்டுள்ளோம். இந்த முக்கியமான காலங்களில் பராமரிப்பாளர்கள் வகிக்கும் பங்கை நாங்கள் அங்கீகரிப்பதுடன், மேலும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு அரசாங்கத்துக்கு உதவ விரும்புகிறோம்,” என்றார்.