அதி சிறப்பான முன் கெமரா அம்சம் மற்றும் போட்டித்தன்மையுடன் கூடிய வன்பொருளுடன் கூடிய V21e ஸமார்ட்போனை அறிமுகப்படுத்தும் VIVO: இன்று முதல் விற்பனைக்கு
ஸ்மார்ட்போன் புகைப்படவியல் அனைவருக்கும் கிடைக்கும் வகையில், மிகவும் எதிர்பார்க்கப்படும் மிகவும் V21e ஸ்மார்ட்போனை vivo இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. vivoவின் புத்தாக்கம் மிக்க V தொடரில் புதிதாக இணைந்து கொண்டுள்ள இது, நவநாகரிக வடிவம், மேம்பட்ட கெமராவினை போட்டித்தன்மையான விலையில் வழங்குகின்றது. V21e முன்பக்கம் 44MP Eye Autofocus கெமராவினைக் கொண்டுள்ளதுடன், வியக்க வைக்கும் புகைப்படவியல் மற்றும் வீடியோகிராபி அனுபவத்துக்கு AI Night Portrait அம்சத்தைக் கொண்டுள்ளது.
“பாவனையாளர் தமது ஆக்கத்திறனை எந்நேரத்திலும், எந்த இடத்திலும் பிரயோகிக்கக்கூடிய சிறப்பம்சங்கள் நிறைந்த V21e, மேம்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கான இலங்கையின் வளர்ந்து வரும் தேவைக்காக உருவாக்கப்பட்டுள்ளது. V21e தொலைவில் உள்ளவற்றையும் தெளிவாக படமெடுக்கக்கூடிய துறையில் முன்னணி வகிக்கும் Eye autofocus தொழில்நுட்பத்துடன் கிடைக்கின்றது. சந்தையில் உள்ள முன்பக்க ஸ்மார்ட்போன் கமெராக்களில் இத்தகைய சிறப்பம்சம் காணப்படுவது குறைவாகும். மேம்பட்ட கமெரா மற்றும் சக்தி வாய்ந்த செயற்பாட்டுடன் வரும் V21e, ஒவ்வொரு நாளையும் சிறப்பு மிக்கதாக்குகின்றது,” என vivo Sri Lanka வின் பிரதான நிறைவேற்று அதிகாரி கெவின் ஜியாங் தெரிவித்தார்.
இந்தப் பிரிவில் சிறந்த முன்பக்க கமெரா வன்பொருள் அதனுடன் கூடிய அதி நவீன மென்பொருள் மற்றும் சிறப்பம்சம் போன்றன தெளிவான படங்கள், மேம்பட்ட இரவு நேர படங்கள் மற்றும் 4K தரத்தில் மிக நிலையான வீடியோக்களையும் V21e கொண்டு வருகின்றது.
இதன் சக்தி வாய்ந்த f/2.0 aperture உடன் கூடிய 44MP Eye Autofocus இருள் சூழ்ந்த சூழ்நிலைகளிலும் சிறந்த ஒளி வெளிப்பாட்டை வழங்கின்றது. AI Night Portrait மற்றும் AI high-definition தொழில்நுட்பங்கள் விபரங்களுடன் கூடிய இரவு நேர படங்களை எடுக்க உதவுகின்றது. மென்பொருள் மற்றும் வன்பொருள் ஒருங்கிணைப்பின் மூலம், Super Night Selfie ஆனது பல மட்ட வெளிப்பாடுகள் மற்றும் பல தரப்பட்ட உயர்தர இமேஜ் பிரேம்கள் ஆகிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளமையானது, இது இரவு நேர காட்சிகளுக்கு பிரகாசம் மற்றும் விபரங்களை வழங்கி தெளிவான உருவப்படங்களை உறுதி செய்கின்றது.
Dual-View Video, Slo-Mo Selfie Video, 4K Selfie Video மற்றும் Steadiface Selfie Video போன்ற உயர்தர அம்சங்கள் அசத்தலான சுய உருவப்படங்களை எடுக்க வாய்ப்பளிக்கின்றது.
இதன் கவனத்தை ஈர்க்கும் 4MP Night camera கெமராவானது மேம்பட்ட பட தரத்தை வழங்குவதுடன், இரண்டாந்தர கமெராக்கள் சிறப்பான புகைப்படவியலை வழங்குகின்றன. Super Night Mode, Stylish Night Filter, Art Portrait Video, Ultra Stable Video சிறப்பம்சங்களுடன் கூடிய பின்புற கெமராவானது தரமான புகைப்படவியல் அனுபவத்தை வழங்குகின்றது.
மிக நேர்த்தியாக, உறுதியான வெளிப்புற தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்ட இந்த சாதனத்தின் முன்பக்கத்தில் FHD ultra-high resolution உடன் கூடிய 6.44” AMOLED திரையைக் கொண்டுள்ளமையானது சீரான காட்சி விளைவுகளை தருகின்றது. இந்த அதி மெல்லிய ஸ்மார்ட்போனானது ரோமன் பிளக் மற்றும் டயமன் பிளயார் ஆகிய வண்ணங்களில் கிடைக்கின்றது.
Qualcomm Snapdragon 720G புரசசரினால் வலுவூட்டப்படும் vivo V21e, அதன் 8GB RAM, 128GB ROM மற்றும் அதிகரிக்கக்கூடிய “+3GB” RAM ஆகியன சிறப்பான தடையற்ற செயற்பாட்டை உறுதி செய்கின்றன. முழுமையான கேமிங் அனுபவத்திற்காக Ultra game mode உடனும் வருகின்றது. மேலும் 33W Flash-Charge சிறப்பம்சம் துரிதமாக சார்ஜிங்கை மேற்கொள்ள உதவுவதுடன், நீண்ட நேர பாவனைக்கும் உகந்ததாக உள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட V21 5G, V21e ஆகிய இரண்டும் Abans, Dialog, Singhagiri, Daraz மற்றும் நாடுமுழுவதிலும் உள்ள vivoவினால் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமும் கிடைக்கின்றது. V21e வாடிக்கையாளர்கள் இரண்டு மாதங்களுக்கு செல்லுபடியாகும் 50GB Dialog Anytime Data bundle இற்கும், V21 5G வாடிக்கையாளர்கள் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் 100GB Anytime Data bundle இற்கும் தகுதியுடைவர்களாவர். V21e இன் விலை ரூபா 74,990/- என்பதுடன், V21 5G இன் விலை 99,990/- ரூபா ஆகும்.