இலங்கையின் சுற்றுச்சூழல் மற்றும் சிவனொளிபாதமலைப் பாரம்பரியத்தை பாதுகாக்க கைகோர்க்கும் Clogard

0

இலங்கையின் முன்னணி வாய்ச் சுகாதார தரக்குறியீடுகளில் ஒன்றான Clogard, வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்துடன் இணைந்து புனித சிவனொளிபாதமலை தலத்தைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழல் தொகுதியை பராமரிப்பதில் தனது பங்களிப்பைச் செலுத்துகிறது. இதற்காக, பெறுமதி வாய்ந்த பல்லுயிர் பெருக்கம் கொண்ட சிவனொளிபாதமலை தலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் மூலமான மாசுபாட்டைக் குறைக்கும் வகையிலான பல்வேறு முயற்சிகளை அது மேற்கொண்டுள்ளது.

‘Jala Mula Rakimu Samanola Gira’ என அழைக்கப்படும் இம்முன்னெடுப்பு, Clogard இன் முதன்மையான நோக்கமான ‘Strong Roots and Strong Bonds’ (‘வலுவான வேர்கள் – வலுவான பிணைப்புகள்’) என்பதை அடிப்படையாகக் கொண்டு, இலங்கை கலாசாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக அகற்றுவது தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்துதல் ஆகிய இரண்டு முக்கிய தலைப்புகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.

பல தசாப்தங்களாக இலங்கை கலாசார மற்றும் பாரம்பரியத்திற்கு முன்னுரிமை வழங்கும் ஒரு உண்மையான இலங்கை தரக்குறியீடு எனும் வகையில், நிலம் செழிக்க உதவி செய்து, இலங்கை கலாசாரத்தின் வேர்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை  உணர்ந்து, விழிப்புணர்வை ஏற்படுத்தி, தமக்கும் சக இலங்கையர்களுக்குமாக தாம் வாழும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் பொருட்டு, பிளாஸ்டிக்களை அகற்றுவதற்கான முறையான வழிமுறைகளைப் பற்றி இத்திட்டம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

ஏப்ரல் முதல் மே வரை மேற்கொள்ளப்பட்ட இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், சிவனொளிபாதமலை தலத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு, சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், பிளாஸ்டிக்களை உரிய வகையில் அகற்றும் முறைகள் குறித்து அறிவுறுத்துவதும், சிவனொளிபாதமலை யாத்திரை செல்லும் பாதையில் அது தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளை நிறுவுதலுமாகும். அத்துடன் தன்னார்வமாக முன்வந்து பிளாஸ்டிக்களை அகற்றுவது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், Clogard குழுவினர் தமது பங்களிப்பாக, சிவனொளிபாதமலைக்கு செல்லும் வழியில் காணப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து, அதனை  சேகரிப்பதற்காக நியமிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைத்தனர்.

அத்துடன், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், Clogard பக்தர்களுக்கு களிமண்ணினால் செய்யப்பட்ட போத்தல்களை வழங்கியதுடன், இந்திகட்டுபான, சீத்த கங்குல, ரத்து அம்பலம ஆகிய இடங்களில் சுத்தமான குடிநீர் வசதிகளையும் வழங்கியது.

இதேவேளை, யாத்த்திரிகர்கள், தங்களது பயணத்தில் முழுமையான புத்துணர்ச்சியைக் கொடுப்பதற்காக கராம்பு வாசனை கொண்ட Breath Freshener (சுவாச புத்துணர்ச்சி திரவியம்) வழங்கப்பட்டது. இது, கிருமிகளை எதிர்த்துப் போராடும் கிருமி கொல்லியான கராம்பு, தொண்டைக்கு இதமளிக்கும் சீனி கலந்த இனிப்பு, ஒட்சியேற்றத்தை தடுக்கும் ஏலக்காய் ஆகியவற்றின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.  க்ளோகார்ட் பற்பசையின் முக்கிய மூலப்பொருளான கராம்பு, இலங்கையர்களின் வாய்ச் சுகாதாரத்திற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இத்திட்டம் தொடர்பில் Hemas நிறுவனத்தின் சந்தைப்படுத்தல், தனிநபர் பராமரிப்பு பொது முகாமையாளர் டெரிக் அந்தோனி தெரிவிக்கையில், “இப்புனித தலத்தை பாதுகாப்பதற்கும் அதை பிளாஸ்டிக் அற்ற சூழலாக மாற்றுவதற்குமான ஆர்வத்துடன் தொடர்ச்சியான முயற்சிகளை வழிநடத்தியமை தொடர்பில் நாம் பெருமிதமடைகின்றோம். சிவனொளிபாதமலையில் மாத்திரமல்லாது, பொறுப்பற்ற வகையில் பிளாஸ்டிக்களை இடுவதானது, நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் காணப்படும் ஒரு பரவலான பிரச்சினையாக காணப்படுகின்றது. இது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்களும், முன்முயற்சிகளின் மூலமும், பிளாஸ்டிக் மாசடைவு தாக்கத்தை ஓரளவிற்கு குறைக்க முடியுமாக இருந்த போதிலும், நாம் அனைவரும் சார்ந்து வாழ்ந்து வரும் சூழலைப் பாதுகாப்பது, இவ்வாறான இடங்களுக்கு வருகை தரும் ஒவ்வொரு நபரினதும் பொறுப்பாகும்.” என்றார்.

உண்மையான இலங்கை தயாரிப்பு எனும் மதிப்பீட்டைக் கொண்ட ஒரு தரக்குறியீடான Clogard, பிளாஸ்டிக் மாசடைதலால் பாதிக்கப்பட்டுள்ள சிவனொளிபாதமலையின் சுற்றுப்புறச் சூழல் ஆபத்தில் இருக்கும் இந்நேரத்தில் இவ்வாறான சமூகப் பொறுப்பு மிக்க முயற்சிக்கு தனது பங்களிப்பை வழங்கியுள்ளது. காடழிப்பு மற்றும் சூழல் மாசடைதல் போன்ற மனிதத் தலையீடுகளால் இச்சூழல் தொகுதி,  பாரிய சூழல் தாக்கங்களுக்கு உள்ளாகியுள்ள அதே நேரத்தில், ஏற்கனவே சில சூழல் தொகுதிகள், மீளமைக்க முடியாத வகையில் சேதமடைந்துள்ளன. இயற்கை சூழல்தொகுதிகள் மிக வேகமான வகையில் அதன் இயல்பு நிலையிலிருந்து வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் இக்காலத்தில், உலகம் முழுவதும் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவால்களான கொவிட்-19 மற்றும் காலநிலை மாற்றம் போன்றவற்றை மனித குலம் புரிந்துகொண்டுள்ள நிலையில், உயிர்ப்பல்வகைமை இழப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாசடைதலை குறைப்பதை உறுதி செய்வதில் மக்கள் தாம் வகிக்கும் பங்கை புரிந்து கொள்ள வேண்டிய நேரம் இதுவாகும். எமது பாரம்பரியத்தை பேணிப் பாதுகாப்பது தொடர்பில் பங்களிப்புச் செய்யப்படும் முயற்சிகளுக்கு Clogard தொடர்ந்தும் தனது ஆதரவை வழங்கும்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *