Huawei ID உடன் பதிவு செய்து, Huawei Mobile Cloud இனை மேற்படுத்தி வியக்கவைக்கும் பரிசுகளை வெல்லுங்கள்
உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, புத்தாக்க வன்பொருள் தொழில்நுட்பங்களுடன் உலகை ஊக்கப்படுத்துவது மட்டுமன்றி, டிஜிட்டல் பரப்பை மாற்றுவதற்காக அதிநவீன தரவுத்தள தொழில்நுட்பங்கள் மற்றும் IOT சேவைகளையும் அறிமுகப்படுத்துகிறது. Huawei Mobile Cloud என்பது இது போன்ற ஒரு புதுமையான தரவு சேமிப்பக தளமாகும். இது புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்கள் உட்பட அனைத்து தரவையும் எதிர்கால அணுகலுக்காக பாதுகாப்பாக சேமிக்க பாவனையாளருக்கு உதவுகிறது. தரவைச் சேமிக்கவும், பிரதி எடுக்கவும், ஒத்திசைக்கவும் ஏற்றதொரு இடமாகவும் இது செயல்படுகிறது. அதே நேரத்தில் எந்தவொரு சாதனத்திலிருந்தும் அணுக பாவனையாளருக்கு உதவுகின்றது. தரவைப் பாதுகாப்பதற்கும், தனியுரிமையைப் பாதுகாப்பதற்கும் ஒரு விரிவான 9-அடுக்கு பாதுகாப்பை வழங்குவதுடன், டிஜிட்டல் வாசிகளுக்கான தரவைச் சேமித்து பாதுகாப்பதற்கான மிகவும் பாதுகாப்பான வழியாகவும் Huawei Cloud அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
Huawei Cloud மூலம் பாவனையாளர்கள் படங்கள், தொடர்புகள், மெசேஜ்கள், குறிப்புகள், நாட்காட்டிகள் மற்றும் சில மூன்றாம் தரப்பு செயலிகளில் உள்ள தரவு உள்ளிட்ட தரவுகளுக்கான தானியங்கி கிளவுட் பிரதிகளை அட்டவணைப்படுத்தலாம். ஸ்மார்ட்போன் தொலைந்து போயிருந்தால் அல்லது உடைந்தால், பாவனையாளர்கள் கிளவுட்டை அணுகுவதுடன், ஒரு தடவை பொத்தானை அழுத்துவதன் மூலம் வேறு எந்த சாதனத்திற்கும் தரவை மாற்ற முடியும். அனைத்து படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற கோப்புகளை கிளவுட்டில் சேமிப்பதன் மூலம் சாதனத்தின் இடத்தை நிர்வகிக்க பாவனையாளருக்கு Huawei Cloud உதவுகிறது. அதன் Find Device option பாவனையாளர் தாம் இழந்த சாதனத்தை எளிதில் கண்டுபிடிக்கவும், கடுமையான பாதுகாப்பு நடவடிக்கையாக lost mode இல் வைக்கவும் அல்லது அதன் தரவை முற்றாக அழிக்கவும் உதவுகின்றது. இலகுவாக உள்நுழைவதன் மூலம் Huawei Cloud இனை 24/7 அணுக முடிவதுடன், தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு பலவகையான சிறப்பம்சங்கள் காத்திருக்கின்றன.
Huawei Cloud இனை அணுக, ஒவ்வொரு பாவனையாளரும், Huawei வழங்கும் புதுமையான மென்பொருள் தீர்வுகளை அணுகுவதற்கான நுழைவாயிலான Huawei ID உடன் பதிவு செய்ய வேண்டும் . Huawei ID உடன் பதிவு செய்ய, “Settings” என்பதற்குச் சென்று Log in with Huawei ID” என்பதைத் தட்டவும், பின்னர் Register” என்பதைத் தட்டவும்> சரிபார்ப்பு செயல்முறைக்கு செல்லுபடியாகும் தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், தொடர்ந்து உங்கள் கைத்தொலைபேசி எண்ணுக்கு அனுப்பப்பட்ட சரிபார்ப்புக் குறியீட்டை உள்ளிடவும். சரிபார்ப்பு வெற்றிகரமாக முடிந்த பிறகு, பதிவை பூர்த்தி செய்ய கடவுச்சொல்லை உள்ளிடவும். Huawei ID வைத்திருப்பதன் மூலம், Huawei Cloud, Huawei AppGallery, Themes மற்றும் மேலும் பலவற்றின் முழு சிறப்பம்சங்களையும் நீங்கள் அணுகலாம்.
Huawei ID உடன் வெற்றிகரமாக பதிவுசெய்த பாவனையாளர்கள் Huawei Huawei Mobile Cloud இணை எளிதாக செயற்படுத்த முடியுமென்பதுடன், அடுத்த தலைமுறை கிளவுட் சேவைகளை பெற்றிடலாம். Huawei Mobile Cloud உடன் உள்நுழைய: “Settings” என்பதற்குச் சென்று “Account center” இல் தட்டவும்> பின்னர் “Cloud” ஐத் தட்டவும், இதனைத் தொடர்ந்து Huawei Cloud இல் நுழைய விபரங்களை நிரப்பவும். அனைத்து புதிய Huawei Cloud பாவனையாளர்களும் 5GB இலவச கிளவுட் சேமிப்பகத்தை பெற்றுக்கொள்ளும் தகுதியைப் பெறுவதுடன், அதனை புகைப்படங்களை ஒத்திசைக்க, முக்கியமான தரவுகளை பிரதி எடுக்க, ஆவணங்களைச் சேமிக்க மற்றும் பலவற்றுக்காக பயன்படுத்தலாம்.
கிளவுட் பாவனையாளர்களுக்கு மேலதிக நன்மைகளை வழங்கும் முயற்சியாக Huawei, ஜூன் 1 முதல் ஜூன் 31 வரை கிளவுட் Cloud Storage Lucky draw பிரசாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வெற்றியாளர்களுக்கு அற்புதமான பரிசுகளை வழங்குகிறது.
ஜூன் 1 முதல் ஜூன் 31 வரை தங்கள் Cloud storage இனை நிலையான 50GB திட்டத்திற்கு அல்லது அதற்கு மேல் மேம்படுத்தும் Huawei பாவனையாளர்கள் ஒரு ஸ்டைலான Huawei Nova 7 SE ஸ்மார்ட்போன், Huawei Watch Fit சாதனங்கள் மற்றும் நான்கு Huawei Band 6 சாதனங்களை வெல்ல தகுதியுடையவர்கள். Huawei Cloud storage இணை மேம்படுத்த: “Settings” என்பதற்குச் சென்று “Log in with Huawei ID” என்பதைத் தட்டவும், தொடர்ந்து “Cloud” ஐத் தட்டவும் பின்னர் “Upgrade Cloud Space” என்பதைத் தட்டவும், இதனையடுத்து விருப்பமான திட்டத்தைத் தேர்ந்தெடுத்து கொள்வனவு செய்யவும்.