மத்தியதர ஸ்மார்ட்போன்களின் புதிய அளவுகோல்: Nova 7i தற்போது இலங்கையில்

0

புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Huawei, வசதியான விலைக்கேற்ற பெறுமதியை வழங்கும் Nova ஸ்மார்ட்போன் வரிசையில் புதிதாக இணைந்து கொண்ட,  பல சிறப்பம்சங்களால் நிரம்பிய Huawei Nova 7i ஸ்மார்ட்போனை அண்மையில் அறிமுகம் செய்திருந்தது. அனைத்து Nova ஸ்மார்ட்போன்களைப் போலவும் Nova 7i, matte தோற்றத்துடன் கூடிய அலுமினிய வளைவுகளுடன் கண்ணைக் கவர்வதாக உள்ளதுடன், கையில் பிடிக்கவும் வசதியாக உள்ளது. இதன் 6.4 அங்குல dew drop திரையானது ஒட்டுமொத்த வடிவத்துக்கு மேலும் அழகு சேர்ப்பதுடன், திரைப்படங்களை பார்ப்பதிலும், கேம்ஸ்களை விளையாடுவதற்கும் தொந்தரவற்ற அனுபவத்தை அளிக்கிறது.

இதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சமாக குறிப்பிடக்கூடிய மற்றும் இந்த இலகு-முதற்தர சாதனத்தை வரையறுக்கும் சிறந்த அம்சங்களில் ஒன்று,  48MP பிரதான கெமரா, 8MP ultra-wide கெமரா, 2MP macro மற்றும் 2MP depth camera ஆகியவற்றைக் கொண்ட Quad AI கெமரா அமைப்பாகும்.  இந்த Quad AI அம்சமானது வெளிச்சம் குறைவான சூழ்நிலைகளிலும் தெளிவான படங்களை எடுப்பதை உறுதி செய்வதுடன், macro வில்லையானது 4cm நெருக்கத்தில் உள்ள பொருட்களையும் focus செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, இந்த கெமரா, படங்களுக்கு திரைப்படங்களைப் போன்றதொரு உணர்வைத் தரும் தொழில்சார் bokeh விளைவுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வண்ண அம்சத்தையும் (AI portrait color) கொண்டுள்ளது. இந்த முழுக் காட்சி திரையுடன் உள்ளடக்கப்பட்டுள்ள செல்பி கெமராவானது 16  மெகாபிக்ஸலாகும்.  இது திரையின் இடது பக்க மூலையில் ஒரு சிறிய punch hole ஆக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Huawei Devices Sri Lanka – உள்நாட்டு தலைமை அதிகாரியான பீட்டர் லியு இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், ” இந்த இலகு-முதற்தர ஸ்மார்ட்போனை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைவதுடன், இது நாட்டில் உள்ள Huawei வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. Nova குடும்ப ஸ்மார்ட்போன்களானது எப்போதும் மேம்பட்ட பல அம்சங்களைக் கொண்டு வருவதுடன், ஒவ்வொரு புது அறிமுகத்துடனும் மேம்பட்டு வருகின்றது. Nova 7i, அதன் விலைக்கு மேல் சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளதுடன், தற்போது சந்தைக்கு வந்துள்ள மிகவும் கட்டுப்படியாகும் மத்திய-தர போன்களில் ஒன்றாகும். எதிர்காலத்திலும் மிகச் சிறந்த சாதனங்களை வழங்குவதற்கு நாம் தொடர்ச்சியாக எம்மை மேம்படுத்திக் கொள்வதுடன்,  நவீன தொழில்நுட்பங்களையும் பயன்படுத்திக்கொள்வோம்,”என்றார்.

Huawei Nova 7i,  Kirin 810 இனால் வலுவூட்டப்படுவதுடன், 8GB RAM மற்றும் 12GB வரை அதிகரிக்கக்கூடிய நெனோ மெமரியுடன் கூடிய 128  உள்ளக நினைவகத்தையும் கொண்டுள்ளது. 4200mAh பற்றரியானது நீடித்து நிலைப்பதுடன், 40W super charge அம்சத்தைக் கொண்டுள்ளதுடன், இதன் மூலம் வெறும் 30 நிமிடங்களில் 70 வீதம் சார்ஜ் செய்ய முடியும். இது தினசரி பாவனையாளர்களுக்கு மிகுந்த நன்மையளிப்பதுடன், அடிக்கடி சார்ஜிங் செய்ய வேண்டிய தேவையை இல்லாமல் செய்கின்றது.

Nova 7i நவீன அண்ட்ரோய்ட் 10, Huawei EMUI 10 வடிவமைப்புடன் கிடைப்பதுடன், இது Huawei Mobile Services உடன் அப்ளிகேஷன் தரவிறக்கம் மற்றும் தனிநபர் தரவுகள் மற்றும் தகவல்களை சேமிப்பில் மேலதிக பாதுகாப்பினை வழங்கும் Huawei AppGallery, ஆகியவற்றுக்கான அணுகலைக் கொண்டுள்ளது. இதற்கு மேலதிகமாக Nova 7i இல், வேகமாகவும், துல்லியமாகவும் இயங்கும் கைரேகை ஸ்கேனர் பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ளது.

Sakura Pink, Crush Green மற்றும் Midnight black ஆகிய மூன்று நிறங்களில், அனைத்து Huawei அனுபவ வர்த்தக நிலையங்கள், Singer காட்சியறைகள் மற்றும் Daraz.lk இணையத்தளத்தின் ஊடாகவும் ரூபா 49999 என்ற விலைக்கு கிடைக்கின்றது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *