Pyramid Wilmar (Private) Limited இன் அறிக்கை

0

அஃப்லடோக்ஸின் (Aflatoxin) அதிகளவில் கலந்திருக்கும் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் குறித்த அண்மைய ஊடக சமூக அறிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் Pyramid Wilmar (Private) Limited (“Pyramid Wilmar”)  இன் முகாமைத்துவம் பின்வருவனவற்றை குறிப்பிட விரும்புகின்றது. 

  1. Pyramid Wilmar என்பது நல்லாளுகை மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றி நெறிமுறையான வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒரு நிறுவனமாகும். இவையே அதன் இருப்பு மற்றும் செயற்பாட்டின் மையக்கருவாகும். அதன் சமரசமற்ற தரம் மற்றும் வாடிக்கையாளர்களுக்கும் பங்குதாரர்களுக்குமான அர்ப்பணிப்புடனான நேர்மையால், Pyramid Wilmar இன் சில பரிந்துரைக்கப்பட்ட தயாரிப்புகள் இலங்கையின் சமையல் எண்ணெய் சந்தையில் ‘Fortune’ என்ற வர்த்தகநாமத்தின் கீழ் முன்னணி இடத்தைப்பெற்றுள்ளன. 
  2. Pyramid Wilmar தீர்க்கமான தர பண்பளவுகளின் கீழ் சமையல் எண்ணெய்களைத் தயாரிப்பதுடன், அவை FSSC 22000, ISO 14001, ISO 9001, HACCP, GMP மற்றும் ஏனைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சர்வதேச சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களுக்கு இணங்குகின்றன. 
  3. மேலும், இறக்குமதி செய்யப்படும் அதன் சமையல் எண்ணெய் தயாரிப்புகள் உள்ளூர் சந்தைக்கு விடுவிக்கப்படுவதற்கு முன்பு தேவையான பரிசோதனை மற்றும் சரிபார்ப்புக்கு உட்படுத்தப்படுகின்றன என்பதை Pyramid Wilmar மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றது. Pyramid Wilmar இனால் சந்தைப்படுத்தும் அனைத்து சமையல் எண்ணெய்களும் இலங்கை ஒழுங்குபடுத்தல் அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்டுள்ளதன் பிரகாரம், தேங்காய் எண்ணெய்யில் மொத்த அஃப்லடோக்ஸின் (Aflatoxin) அளவுகள் உள்ளிட்ட தேவையான தர நியமங்களுக்கு இணங்குவதாக முறையாக சான்றளிக்கப்பட்ட பின்னர் மட்டுமே வெளியிடப்படுகின்றன. 
  4. ஒரு பொறுப்பான வர்த்தக நிறுவனம் என்ற வகையில் Pyramid Wilmar, அனைத்து நேரங்களிலும் அதன் வாடிக்கையாளர்களே மிகவும் முக்கியமெனவும், அவர்களின் ஆரோக்கியம், போஷாக்கு மற்றும் நல்வாழ்வே பெறுமதியானதாகவும் கருதுகின்றது என்பதனை  மீண்டும் உறுதிசெய்ய விரும்புகின்றது. Pyramid Wilmar சமரசமின்றி அவர்களின் சிறந்த நலன்களுக்காக தொடர்ந்து பாடுபடும். 
  5. சமையல் எண்ணெய்கள்பெஃட் ஸ்பிரட்கள் மற்றும் தொழில்துறைக்கான மார்ஜரின்கள் உள்ளிட்ட அதன் தயாரிப்புகளுக்கு எதிரான சில உண்மைக்கு புறம்பான மற்றும் தவறான குற்றச்சாட்டுகள் Pyramid Wilmar திட்டவட்டமாக மறுக்கிறது. Pyramid Wilmar இற்கு எதிரான இத்தகைய குற்றச்சாட்டுகள் Pyramid Wilmar இன் நற்பெயரையும் சந்தையில் அதன் பங்கையும் களங்கப்படுத்தவும் சேதப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட போலியான ஆதாரமற்ற தீங்கிழைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களாகும். இந்த குற்றச்சாட்டகளை முன்வைப்பவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான உரிமையை  Pyramid Wilmar கொண்டுள்ளது. 
  6. எந்தவொரு நபருக்கும் இது தொடர்பில் ஏதேனும் கேள்விகள் இருப்பின் அல்லது இது குறித்து மேலதிக தெளிவுபடுத்தல்கள் தேவைப்படின், குழும சட்ட அதிகாரியை 0775973182 இல் தொலைபேசி ஊடாக அல்லது consumercare@pyramidwilmar.com என்ற மின்னஞ்சல் ஊடாக தொடர்புகொள்ளும்படி Pyramid Wilmar கேட்டுக்கொள்கின்றது. 
  7. Pyramid Wilmar இன் அனைத்து உரிமைகளும் இதன் மூலம் தெளிவாக பேணப்பட்டுள்ளது.

                                                                                               – முகாமைத்துவம், Pyramid Wilmar (Private) Limited.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *