பாதுகாப்பாக வாகனம் செலுத்துவதை கற்றுத்தரும் Stafford Motors மற்றும் ProRide இன் புதிய முயற்சியான ‘ProRide Safety Riding Academy’

0

இலங்கையின் முன்னணி ஒட்டோமோட்டிவ் விற்பனையாளரும், ஹொண்டாவின் அங்கீகாரம் பெற்ற உள்நாட்டு பிரதிநிதியுமான StaffordMotors, அதன் புத்தாக்க கல்வி சார் முயற்சியான  ‘ProRide Safety Riding Academy’ ஐ 2020 செப்டம்பர் மாத ஆரம்பத்தில்,  முன்னாள் ஓட்டப்பந்தய ஜாம்பவானான பெரோஸ் ஒமரிற்கு சொந்தமான ProRide (Pvt) Ltd  நிறுவனத்துடன் இணைந்து கூட்டு முயற்சியாக ஆரம்பித்துள்ளது.

“வாகனம் ஓட்டுவதற்கு கற்றுக்கொள்வது ஒரு புதிதாக ஆரம்பிப்பவருக்கு எளிதான காரியமாக இருக்காது. அனுபவமிக்க பயிற்றுநர்களின் மேற்பார்வை ஆரம்பத்தில் அவசியமானதாகும். எங்கள் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பயிற்றுநர்கள் மற்றும் செயல்முறை விளக்கமானது இந்த பணியை மேம்பட்ட நவீன பயிற்சி நிகழ்ச்சிகளுடன் வழங்குவதுடன், அவை எந்த அளவிலான அனுபவம் கொண்ட அனைத்து ஓட்டுநருக்கும் பொருந்தும். வகுப்பறை பயிற்சியானது வீதி சமிக்ஞைகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைக் கற்றுக்கொள்ள தேவையான படிப்பினைகளை வழங்கும்” என்று பெரோஸ் உமர் ஆரம்ப விழாவில் தெரிவித்தார்.

இலங்கையில் பாதுகாப்பாக வாகனம் செலுத்துதலை ஊக்குவிக்கும் நோக்கத்தின் கீழ் இந்த திட்டம் தொடங்கப்பட்டதுடன்,  உயர் தரமான பயிற்சியின் மூலம் சரியான வாகன செலுத்தல் உத்திகளைப் பயன்படுத்தி ஹொண்டா உலகளாவிய பாதுகாப்பு கொள்கையான “அனைவருக்கும் பாதுகாப்பு” ஐப் பின்பற்றி தொடங்கப்பட்டது. இதன் மூலம், இலங்கையின் இரு சக்கர வாகன ஓட்டுநர்களின் வாகனம் செலுத்தும் தரத்தை உயர்த்துவதில் ‘ProRide Safety Riding Academy’ நிறுவப்படுவது முக்கியமானதாக இருப்பதுடன் வீதி பாதுகாப்பு மற்றும் அனைத்து வாகன ஓட்டுநர்களின் மனதிலும் அவர்களின் இள வயதிலேயே பொறுப்பாக வாகனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஏற்படுத்தும். இந்த கல்விசார் முயற்சியானது, உலகளாவிய வர்த்தகநாமமான ஹொண்டாவின் இணைப்பினால் இலங்கையில் இருசக்கர வாகனங்களின் சந்தையில் முன்னணி நிறுவனம் என்ற வகையில்   Staffordஇன் பலத்தாலும், ஓட்டப்பந்தயத்தில் தொலைநோக்கு பார்வை கொண்ட பெரோஸ் ஒமரின் வழிகாட்டல் மற்றும் தேர்ந்த பயிற்சியாளர்களின் நிபுணத்துவம் மற்றும் அவர்கள் ஹொண்டா தாய்லாந்தில் இருந்து பெறப்பட்ட விசேட பயிற்சி ஆகியவற்றின் பலத்துடன் முன்னெடுக்கப்படுகின்றது.

ProRide வளாகத்தில் அமைந்துள்ள 300 மீட்டர் நீளமுள்ள பாதுகாப்பான வாகனம் செலுத்தும் பாதை சர்வதேச பாதுகாப்பு மற்றும் வாகனம் செலுத்தல் தரத்தின்படி உருவாக்கப்பட்டுள்ளது, இது பங்கேற்பாளர்களுக்கு வசதியான வாகனம் செலுத்தும் அனுபவத்தை வழங்குகிறது. மல்டிமீடியா ப்ரொஜெக்டர் வசதியுடன் கூடிய குளிரூட்டப்பட்ட வகுப்பறை, தனி ஆண்கள் மற்றும் பெண்களுக்கான குளியல் மற்றும் உடைமாற்றும் வசதிகள், நவீன கருவிகளைக் கொண்ட ஒரு தொழில்நுட்ப பட்டறை மற்றும் பங்கேற்பாளர்களுக்கு போதுமான வாகனதரிப்பிட வசதி ஆகிய வசதிகளை உள்ளடக்கியது.

தானியங்கி மற்றும் மெனுவல் கியர் அமைப்புடன் கூடிய 100 சிசி முதல் 250 சிசி வரையிலான ஸ்கூட்டர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் முதல் ஸ்கூட்டர்கள் வரை இந்த தொழிற்சாலையானது முதலீடு செய்துள்ளதுடன், இது பங்கேற்பாளர்களுக்கு சாத்தியமான ஒவ்வொரு வாகன செலுத்தல் அனுபவத்தையும் வழங்குகிறது.

இந்த பயிற்சியின் போது வழங்கப்படும் கற்கைநெறிகள் புதிய பைக் பாவனையாளர்கள் / புதிதாக வாகன அனுமதிப்பத்திரம் பெற்றவர்கள், புதிய வாகன அனுமதிப்பத்திரம் தேடுபவர்கள், கோர்ப்பரேட் வாடிக்கையாளர்கள் மற்றும் பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும்.

ஆர்வமுள்ளோருக்கு அவர்களது வயது மற்றும் தேவைக்கு ஏற்ப வாகனம் செலுத்தும் கற்கைநெறிகள் வழங்கப்படும். ஒவ்வொரு அடிப்படை கற்கைநெறியும் கோட்பாடு, செயல்முறை விளக்கம் மற்றும் நடைமுறை கூறுகளைக் கொண்டிருக்கும். இது வாகனத்தில் உடல் இருக்க வேண்டிய நிலை, பிரேக், சமநிலை, ஸ்லாலோம், பம்பி மற்றும் கோர்னரிங் மற்றும் வாகனம் செலுத்தல் தொடர்பான அனைத்து பிற பகுதிகளையும் உள்ளடக்கும். குழந்தைகளுக்கான சிறப்புப் பயிற்சியானது வீதியைக் கடத்தல் மற்றும் போக்குவரத்து விதிகளை உள்ளடக்கிய வெளியக பயிற்சி அமர்வுகளை உள்ளடக்கும் அதே நேரத்தில், உள்ளக வகுப்பறை அமர்வுகள், வீதி சமிக்ஞைகள் மற்றும் ஊடாடும் வீடியோக்கள் மற்றும் விளையாட்டுகள் மூலம் விளக்கப்பட்ட பாதுகாப்பு வழிகாட்டுதல்களை உள்ளடக்கும்.

ஒரு நபருக்கு நாளொன்றுக்கான நியம பாடநெறி கட்டணம் ரூ: 3,500/ -, அதேவேளை 10 பங்கேற்பாளர்கள் அடங்கிய குழுவொன்றுக்கு சிறப்பு விலைக்கழிவுடன் நபரொருவருக்கு  தலா ரூ: 3,000 என்ற கட்டணத்துடன் வழங்கப்படும். இந்த திட்டம் குறித்த மேலதிக விபரங்களை 076 8950870 (Chathuranga) & 076 7019674 (Charindu) இடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *