மாணவர்களின் புத்தாக்க தகவல் தொடர்பாடல் மற்றும் வணிக தீர்வுகளை காட்சிப்படுத்திய IIT இன் முதல் மெய்நிகர் Cutting Edge கண்காட்சி

0

இலங்கையில் பிரித்தானிய உயர் கல்வியை வழங்குவதில் முன்னோடியாகவும், நாட்டிலுள்ள முதன்மையான தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிகத் துறை பல்கலைக்கழகமாகவும் திகழும் Informatics Institute of Technology (IIT), தனது முதலாவது மெய்நிகர் (Virtual) IIT Cutting Edge 2020 நிகழ்வை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் போது பல புரட்சிகரமான தகவல் தொழில்நுட்ப மற்றும் வணிக தீர்வுகளின் நவீன தொகுப்பை மாணவர்கள் காட்சிப்படுத்தியிருந்தனர்.

Cutting Edge என்பது அடிப்படையில் தற்போது University of Westminster இன் பல வகையான இளங்கலை பட்டப்படிப்புகளைத் தொடரும் IIT மாணவர்களிடையே டிஜிட்டல் முயற்சியாண்மையை ஊக்குவிக்கும் நோக்கில் IIT இனால் ஏற்பாடு செய்யப்படும் வருடாந்த கண்காட்சியாகும்.  Cutting Edge 2020 இன் கருப்பொருள் “டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலம் மாற்றம் மற்றும் நிலைமாற்றத்தை தழுவுதல்” என்பதாகும். முன்னைய ஆண்டுகளைப் போலவே, மென்பொருள் பொறியியல், கணினி விஞ்ஞானம், வணிக தகவல் அமைப்புகள் (BIS) மற்றும் வணிக முகாமைத்துவ பட்டப்படிப்புகளை தொடரும் நூற்றுக்கணக்கான IIT இளங்கலை பட்டதாரிகள் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிகம் தொடர்பான தங்கள் திட்டங்களை முன்வைத்து ஆர்வத்துடன் பங்கேற்றனர். கொவிட் – 19 தொற்றின் காரணமாக பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளைக் கருத்தில் கொண்டு, இவ் வருடத்திற்கான Cutting Edge கண்காட்சி மெய்நிகர் முறையில் பெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்களுக்கு IIT இன் இணையத்தளம் மற்றும் IIT  இன் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தின் ஊடாக நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட்டது. Cutting Edge 2020 என்பது நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய நேரடி நிகழ்ச்சி, இணையவழி உரையாடல்கள் (webinars) மற்றும் குழு ரீதியான கலந்துரையாடல், Coding போட்டி, கேமிங் போட்டி, வினாடி வினா, வணிக சுருதி போட்டி மற்றும் திட்ட கண்காட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய பல அம்ச நிகழ்வாகும்.

இது தொடர்பில் தனது கருத்தை தெரிவித்த,  IIT இன் வேந்தர் நயோமி கிரிஷ்ணராஜா,  “முதல் மெய்நிகர் Cutting Edge கண்காட்சியானது IIT இல் உள்ள அனைவருக்கும் ஒரு உற்சாகமான நிகழ்வாகவும். இந்த தொற்றுநோயானது எமக்கு வித்தியாசமாக சிந்திக்கவும், புதிய சூழலுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளவும் உதவியுள்ளது. Cutting Edge ஐ மெய்நிகர் தளம் மூலம் நடாத்துவதால் அனைவரும் புதுமையாக சிந்திக்க வேண்டியிருந்தது. மாணவர்கள் திட்டத்தைப் பற்றி சிந்திப்பது மட்டுமல்லாமல், அதிகபட்ச தாக்கத்தை ஏற்படுத்த அதை எவ்வாறு திறம்பட வெளிப்படுத்துவது என்பதையும் தீர்மானிக்க வேண்டியிருந்தது. உடல் ரீதியான சந்திப்பு சாத்தியமில்லை என்பதால், எல்லோரும் சுயாதீனமாக வேலைசெய்து, தங்கள் செயற்திட்டங்களை சரி செய்துகொள்ள ஒன்லைனில் கலந்துரையாடல்களை மேற்கொண்டனர். இதில் நிறைய சவால்கள் இருந்தன, ஆனால் குழுவாக வேலை செய்தமை மற்றும் அர்ப்பணிப்பின் மூலம், மாணவர்களும், கல்வி சார்ந்த ஊழியர்களும் அனைத்தையும் வென்று ஒரு அருமையான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். இந்த புதிய முறையின் மூலம் வீடியோ காட்சியானது இணையத்தில் கிடைக்குமென்பதால் அனைவரும் தமக்கு வசதியான நேரத்தில் அவற்றை பார்வையிட்டு, எதனையும் தவறவிடாமல் தமக்கு தேவையானதை உள்வாங்கிக் கொள்ள முடியும்,” என்றார்.

Cutting Edge 2020 இல் இடம்பெற்றிருந்த இணையவழி உரையாடல்கள் மற்றும் குழு ரீதியான கலந்துரையாடல்கள் மூலம் இலங்கையின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், வணிகம் மற்றும் முயற்சியாண்மை ஆகியவற்றில் முன்னணியில் திகழ்வோரின் தனித்துவமான நுண்ணறிவும் பகிரப்பட்டிருந்தது. இதில், Senior Technology Architect of XO Concepts, மாலிந்த ரத்னாயக்கவினால் “Introduction of IoT and practical sessions of IoT with Arduino (or Microbit)” என்ற தலைப்பின் கீழும், மென்பொருள் துறையில் 22 வருட அனுபவத்தைக் கொண்ட தகவல் தொழில்நுட்பத்துறை நிபுணரான ஷான் சண்முகராஜா, “Cyber Security – Awareness of the threats in IoT and Smart Cities” என்ற தலைப்பின் கீழும், Key Account Manager of hSenid Mobile Solutions, ரந்துல விஜேசிங்க “Business Models for Smart Cities and Urban Innovation” என்ற தலைப்பின் கீழும் தமது அறிவைப் பகிர்ந்திருந்தனர்.

இந்த திட்ட கண்காட்சியின் போது, IIT மாணவர்கள் பல வகையான புத்தாக்க செயற்திட்டங்களை Artificial Intelligence (AI), Augmented Reality (AR), Cloud Computing, Data Science, Big Data, NLP, Internet of Things, Sentiment Analysis, Embedded Systems, Robotics, Fin Tech, Entrepreneurship, E-Commerce, Game Development,  Business Analytics,  Digital Marketing மற்றும் Image Processing ஆகிய விடயப்பரப்புகளின் கீழ் முன்வைத்தனர். இதன்படி ‘மென்பொருள் திட்ட புத்தாக்கம்’ என்ற பிரிவின் கீழ்  சிறந்த திட்டங்களுக்கான விருதிகளில் தங்க விருதினை ஸ்டெலான் பிரயன் சிமோன்ஸின் “Smart Shoes for Visual Impaired” உம், வெள்ளிவிருதினை பாலமுனி திலும் மதுரங்க டி சில்வாவின் “DAugmentor: Automating Generative Adversarial Networks Modulation and Tuning for Data Augmentation” உம், வெண்கல விருதினை வர்ணகுலசூரிய இசானி ரயந்தி குரூஸின் “ReviewIt: Sentiment Analyser for Recommending Products genuineness based on Customer Online Reviews”  உம் பெற்றுக்கொண்டன. Idea Mart இனால் அனுசரணையளிக்கப்பட்ட ‘வணிக புத்தாக்கம்’ பிரிவில், சிறந்த திட்டங்களுக்கான விருதுகளில் தங்க விருதினை திலினி பிரார்தனா கிம்ஹானியின் “InfoChurn – Customer Retention Engine with Churn Prediction for Motor Insurance in Sri Lanka” உம், மொஹமட் இப்ராம் இஸ்மத்தின் “TrustCredit – A credit score for the unbanked” வெள்ளி விருதினையும், ஹனா நடாசா ஹரிஹரனின் “Chain of Ownership” வெண்கல விருதினையும் வென்றன. மேலும் திட்டங்களுக்கு “Business Innovation – Information Driven Entrepreneurial Startup Awards” விருதுகளும் வழங்கப்பட்டதுடன், Foundation தர மாணவர்களின் முதலிடம், இரண்டாமிடம் மற்றும் மூன்றாமிடம் பெற்ற திட்டங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. அதேவேளை, வணிக தகவல் அமைப்புகள், வணிக முகாமைத்துவம் மற்றும் மென்பொருள் பொறியியல்/ கணினி விஞ்ஞான பிரிவைச் சேர்ந்த முதல் மற்றும் இரண்டாம் வருட மாணவர்களின் திட்டங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

வணிக முன்மொழிவு 2020 போட்டியில் இரண்டு பிரிவுகளை உள்ளடக்கியிருந்தது. பாடசாலை பிரிவு மற்றும் பிரிவு ஆகியனவையாகும்.பாடசாலை பிரிவானது, 15 வயதுக்கு மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கானது, அதே நேரத்தில் IIT பிரிவானது, அனைத்து இளங்கலை மற்றும் Foundation பிரிவு மாணவர்களும் “தொழில்நுட்பம் அல்லாத வணிக தீர்வு” மற்றும் “தொழில்நுட்ப வணிக தீர்வு” ஆகிய  பிரிவுகளின் கீழ் தங்கள் யோசனைகளை சமர்ப்பிப்பதற்கானதாகும். IIT பிரிவின் சாம்பியனாக தினு சுதர்க பெரேரா தெரிவானதுடன், 2 ஆம் இடத்தை ஜிதேந்திரன் ஜூட் ஹெக்டரும், 3 ஆம் இடத்தை எம்.பிரயன் கே. அனுபமா பெர்ணாண்டோவும் பெற்றுக்கொண்டனர்.  அதேவேளை, பாடசாலை பிரிவின் சாம்பியனாக புனித பெனடிக் கல்லூரியின் ஷெனால் குமாரவடுவும், 2 ஆம் இடத்தை OKI சர்வதேச பாடசாலையின் ருஸ்தா ரபீக், அமாண்டா பெர்ணாண்டோ மற்றும் உதயகுமார் ஜெமீமாவும் பெற்றுக்கொண்டனர்.

Coding போட்டியானது IIT மாணவர்களுக்கு தமது சக மாணவர்களுடன் Coding திறனை பரிசோதிக்கும் சந்தர்ப்பத்தை வழங்கியது. Cutting Edge Gamefest ஒன்லைன் போட்டித் தொடரானது கேமிங் பிரியர்கள் ஒவ்வொருவருடன் Valorant, Dota 2 மற்றும் Call of Duty Mobile ஆகிய கேம்களில் போட்டி போடும் வாய்ப்பை வழங்கியது. தொழில்நுட்பம், அனைத்து விஷயங்கள் கீக், கேமிங் மற்றும் பொது அறிவு போன்ற கருப்பொருள்களில் மாணவர்கள் ஒருவருடன் ஒருவர் சுவாரஸ்யமாக போட்டியிட்டதால் “Kahoot Quiz Competition” மாணவர்களிடமிருந்து உற்சாகமான பதில்களைப் பெற்றது.

1990 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட IIT ஆனது, தகவல் தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்துவம் ஆகிய துறைகளில் சர்வதேச அங்கீகாரமுடைய பிரித்தானிய பட்டப்படிப்புகளை வழங்கும் இலங்கையின் முதலாவது தனியார் உயர்கல்வி நிறுவனம் என்ற பெருமையைக் கொண்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் University of Westminster மற்றும் Robert Gordon ஆகிய பல்கலைக்கழகங்களின் உள்வாரியான பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு கற்கைநெறிகளை வழங்கும் விருது பெற்ற கல்வி நிறுவனமாக IIT திகழ்கிறது. IIT ஆனது, உலகத் தரம் வாய்ந்த பட்டதாரிகளை உருவாக்குவதன் வாயிலாக இலங்கையின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்துவம் ஆகிய துறைகளை வலுப்படுத்துவதில் முக்கிய இடத்தை வகிக்கின்றது. 1990 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, IIT 3,000 இற்கும் அதிகமான பட்டதாரிகளை உருவாக்கியுள்ளதுடன், தற்போது 25 நாடுகளை தளமாகக் கொண்டுள்ளது. இந்த பட்டதாரிகள் உள்நாட்டு மற்றும் சர்வதேச பெருநிறுவனங்கள் மற்றும் அரச தாபனங்களில் தகவல் தொழில்நுட்பம் அல்லது முகாமைத்துவ துறையிலான வல்லுனர்களாகத் திகழ்வதுடன், 250 பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் புளுசிப் கம்பனிகளில் உயர் பதவிகளை அலங்கரிப்பதன் வாயிலாக குறித்த நிறுவனங்களின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பினை வழங்கி வருகின்றனர்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *