எதிர்காலத்தை நோக்கியதான புதிய வர்த்தகநாம தாரக மந்திரத்தை வெளியிட்டுள்ள சிங்கர்

0

இலங்கையில் 1877ஆம் ஆண்டு ஒரு எளிய தையல் இயந்திர நிறுவனம் எனும் நீண்ட கால வரலாற்றை கொண்டதாக, சிங்கர் நிறுவனத்தின் வரலாறு அமைகின்றது. இன்று, சிங்கர் நிறுவனமானது, நீடித்த நுகர்வோர் பாவனைப் பொருட்களின் சில்லறை விற்பனை நிறுவனமாக வளர்ந்துள்ளது. 600 இற்கும் மேற்பட்ட இலத்திரனியல் பொருட்கள் மற்றும் 1,200 இற்கும் மேற்பட்ட வீட்டு உபகரணங்களின் தயாரிப்புகளை நிறுவனம் கொண்டுள்ளது. சிங்கர் தற்போது 60 இற்கும் மேற்பட்ட உலகப் புகழ்பெற்ற வர்த்தகநாமங்களுக்கு தாயகமாக விளங்குகின்றது. அனைத்து விதமான வாடிக்கையாளர்களுக்கும் சேவைகளை வழங்கும் நிறுவனம் எனும் வகையில், கடந்த 2021 ஆம் ஆண்டு வரையான தனது பயணத்தில் பல்வேறு வெற்றிகளை பதிவு செய்துள்ள சிங்கர் நிறுவனம், ‘To be the market leader in elevating and enriching lives in Sri Lanka’ (இலங்கையர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் வளப்படுத்துவதற்குமான சந்தையின் முன்னோடியாக இருக்க) எனும் அதன் புதுப்பிக்கப்பட்ட தூரநோக்கை வெளியிட்டுள்ளது.

சிங்கர் தனது புதுப்பிக்கப்பட்ட தூரநோக்கை அடையும் வகையில், நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள அதன் முக்கிய கொள்கையை அதன் ஊழியர்கள் கடைபிடிப்பதை அது காண விரும்புகின்றது. குறிப்பாக, தொடர்ந்து மாற்றடையும் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, நிறுவனத்தின் சலுகைகளை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆர்வத்துடன் கண்டறிதல், அனைத்து தொடர்புகளிலும் பொறுப்புடன் இருத்தல் மற்றும் நேர்மையை வெளிப்படுத்துதல், வெற்றிக்காக ஒத்துழைத்தல் ஆகியன இதில் அடங்குகின்றன. ஒரு நிறுவனம் எனும் வகையில், நிறுவனத்திற்குள்ளும் வாடிக்கையாளர்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களிடமும் கண்ணியம் மற்றும் மரியாதையை மேம்படுத்துவதில் சிங்கர் கவனம் செலுத்தும்.

சிங்கரின் புதிய தூரநோக்கு மற்றும் தோற்றத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக, அது முன்னோக்கிப் பயணிக்கும் அனைத்து விடயங்களிலும் ‘home at the heart’ (இருதயத்தின்வீடு) எனும் அதன் புதிய தாரக மந்திரம் அமைந்திருக்கும். இந்த புதிய தாரக மந்திரமானது, சிங்கர் ஆனது மக்களின் வர்த்தகநாமம் எனும் அந்தஸ்தை மேலும் உறுதிப்படுத்துவதுடன், அது எதிர்காலத்திற்காக தயாராக உள்ள ஒரு வர்த்தக நாமம் எனும் அதன் பரிணாம வளர்ச்சியின் அடிக்கல்லாகவும் அமையும்.

சிங்கரின் புதுப்பிக்கப்பட்ட தூரநோக்கு மற்றும் அதன் தாரக மந்திரம் தொடர்பில், சிங்கர் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி மஹேஷ் விஜேவர்தன கருத்துத் தெரிவிக்கையில், “SINGER வர்த்தக நாமத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான எமது முயற்சியின் மற்றுமொரு படி இதுவாகும். எமது புதுப்பிக்கப்பட்ட தூரநோக்கு, புதிய சில்லறை விற்பனை நிலையத்தின் தோற்றம், புதிய வர்த்தகநாம தாரக மந்திரம் ஆகியன, மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் சேவை மூலம் வலுவாக ஆதரிக்கப்படும் என்பதுடன், அது சிங்கர் வர்த்தகநாமத்தையும் எமது வாடிக்கையாளர்களையும் எதிர்காலத்தில் புதிய உச்சத்தை நோக்கி கொண்டு செல்லும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.” என்றார்.

நவீன வெளிப்புற மற்றும் உட்புற வடிவமைப்புடன், சிங்கர் மெகா மற்றும் சிங்கர் காட்சியறைகளின் புதிய சில்லறை விற்பனை நிலையங்களின் தோற்றமானது, வாடிக்கையாளர்களுக்கு மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் சிறந்த அனுபவத்தை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிங்கர் மெகா மற்றும் சிங்கர் காட்சியறைகளிலும் அதன் அனைத்து புதிய வர்த்தகநாமங்களின் முழுமையான தயாரிப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், வாடிக்கையாளர்களுக்கு மிகவும் விசாலமான இடவசதியுடன், தொட்டு உணர்ந்து கொள்வனவு செய்யும் முழுமையான அனுபவத்தை வழங்கும் வகையில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுவரை, இந்த புதிய தோற்றத்தைக் கொண்டதாக 50 சிங்கர் காட்சியறைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 100 விற்பனை நிலையங்கள் இவ்வருடம் மார்ச் மாத இறுதிக்குள் புதிய தோற்றத்திற்கு மாற்றியமைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கர் (ஶ்ரீ லங்கா) நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஷனில் பெரேரா இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “சிங்கர் ஒரு வர்த்தகநாமமாக, அது கட்டமைத்துள்ள வர்த்தகநாம பாரம்பரியம் காரணமாக அல்லது அதன் உயர் மட்டத் திறன், அதன் செயலாக்கங்களை அடைவதன் மூலம் அது சந்தையில் நீண்ட காலம் நிலைத்து நிற்க முடியாது என்பதை முழுமையாக நம்புகிறது. அந்த வகையில், மாற்றமடைந்து வரும் சந்தை நடத்தைகள், நுகர்வோர் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் நிறுவனத்தின் வர்த்தகநாமம் பயணிப்பது அவசியம் என நாம் நம்புகிறோம். பலம் மிக்க வர்த்தக நாமங்கள் காலப்போக்கில் அதன் நுகர்வோருடன் வலுவான தொடர்பை உருவாக்குகின்றன. நிறுவனம் உருவாக்கியுள்ள வர்த்தகநாம பெறுமதிக்கு முக்கியத்துவம் வழங்கும் அதே வேளையில், ஒரு வர்த்தகநாமம் ஏனையவற்றிலிருந்து மாறுபட்டதாக அமைய வேண்டும் என்பதுடன் அது நுகர்வோருக்கு அர்த்தமுள்ளதாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் இது ‘Home at our Heart’ (இருதயத்தின் வீடு) எனும் ஒரு புதிய வர்த்தகநாம தாரக மந்திரத்தை நாம் உருவாக்க வழிவகுத்துள்ளது. காரணம் எமது வாடிக்கையாளர்களின் வீடானது, நாம் மேற்கொள்ளும் அனைத்து விடயங்களும் இதயத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்று நாம் நம்புகிறோம்.” என்றார்.

தனது வரலாறு முழுவதும் எப்போதும் வெற்றிபெற வேண்டுமாயின், சந்தையில் உள்ள போக்குகள் மற்றும் மாற்றங்களுடன் ஒன்றிணைந்திருக்க வேண்டுமென சிங்கர் நம்புகிறது. எவ்வாறாயினும், எந்தவொரு பாரம்பரிய வழியிலான நிறுவனத்தையும் அளவிடும் அளவுகோலாக அமைவது, அது கொண்டுள்ள இலக்குகள் மற்றும் நிறுவனத்திற்கு வலுவான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கான முதல் படியே அது என்பதை ஏற்றுக்கொள்வதுமாகும். சிங்கர், தான் கடந்து வந்த பல ஆண்டுகளில், எந்தவொரு மாற்றத்திற்கும் ஏற்றவாறு தன்னை மாற்றியமைக்க முடியும் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருவதுடன், அது எதிர்காலத்திற்கு தயாராகவுள்ள ஒரு வர்த்தகநாமமாக தொடர்ந்தும் பயணிக்கும்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *