இலங்கையின் பழைமையான வண்ணமயமான வாழ்க்கை முறையைக் கொண்டாடும் ‘மாணிக்கவத்த’ நாடகத்திற்கு சுதேசி கொஹொம்ப அனுசரணை
இலங்கையின் 1880-1980 நூற்றாண்டு காலத்திற்குரிய புகழ்பெற்ற சிங்கள இலக்கியப் படைப்பான ‘மாணிக்கவத்த’ வினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மிகவும் யதார்த்தமான தொலைக்காட்சி நாடகத் தொடரின் பிரதான அனுசரணையாளராகியுள்ளமை தொடர்பில் சுதேசி கொஹொம்ப பெருமை கொள்கிறது.
நாட்டின் இயற்கை வளங்களின் பெறுமதி, இயற்கையின் பொருத்தப்பாடு, சூழல் பாதிப்பின் எதிர்மறையான விளைவுகள், காலனித்துவம் மற்றும் அதன் தாக்கங்கள், வரலாற்று ரீதியான மற்றும் புராதன மரபுகள், ஒரு தனியான குடும்பத்தை மையமாகக் கொண்ட இலங்கையின் சமூகக் கட்டமைப்பின் முக்கிய கருப்பொருள்களை மையமாகக் கொண்டு ‘மாணிக்கவத்த’ எனும் இக்கதை அமைந்துள்ளது. சப்ரகமுவ மாகாணத்தின் உள்ளார்ந்த வாழ்க்கை முறை, கலாசாரம், மொழிப் பயன்பாடுகள் பற்றிய இந்த தொலைக்காட்சித் தொடரின் சித்தரிப்பு, எதிர்கால சந்ததியினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு துணைபுரியும்.
தொலைக்காட்சியைப் பார்ப்பத்தில் புதிய அனுபவத்தைத் தரும் இந்தத் தொடரை, இயக்குநர் சுதத் ரோஹண உருவாக்கியுள்ளார். ஒவ்வொரு வார இறுதியிலும் இரவு 8.30 மணிக்கு ITN அலைவரிசையில் இது ஒளிபரப்பாகிறது.
இயக்குனர் சுதத் ரோஹண இது தொடர்பில் விபரிக்கையில், “என்னை பொறுத்தவரையில், பெரும்பாலான தொலைக்காட்சி நாடகங்கள் பரவலாக வணிக நோக்கங்களுக்காக தயாரிக்கப்படும் இந்த காலகட்டத்தில், எமதுகல்வி, கலாசார, அரசியல், சமூக விழுமியங்களை மீண்டும் உறுதிப்படுத்தும் மாணிக்கவத்தை போன்ற அர்த்தமுள்ள, தரமான படைப்பின் மூலம் சமூகத்திற்கு பங்களிப்புச் செய்வது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.” என்றார்.
Swadeshi Industries நிறுவனத் தலைவி திருமதி அமாரி விஜேவர்தன தெரிவிக்கையில், ‘மாணிக்கவத்த’ என்பது இலங்கையர்களின் வாழ்க்கை முறை மற்றும் பாரம்பரியத்தின் பெறுமதியை வெளிப்படுத்துவதற்கான ஒரு பெறுமதியான வாய்ப்பாகும். இந்நாடகத் தொடர் நம் குழந்தைகளுக்கு நமது கிராமப்புற பாரம்பரியம் மற்றும் வரலாற்றை அறிய உதவும். இத்தொடரை பார்வையிடும் பொதுமக்களிடையே இலங்கை கலாசாரம் மற்றும் விழுமியங்கள் தொடர்பான சாதகமான அணுகுமுறை மாற்றத்தை சுதேசி இண்டஸ்ட்ரீஸ் எதிர்பார்க்கிறது. இத்தகைய பாரம்பரிய விழுமியங்களைச் சித்தரிக்கும் நாடகங்களுக்கு நிதியுதவி கிடைப்பது இன்று மிகவும் அரிதான ஒன்றாகவே காணப்படுகின்றது. சுதேசி இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நாம், எமது பாரம்பரியத்தை மதிக்கும் இலங்கை நிறுவனமாக, இத்தகைய முயற்சிக்கு பங்களிப்பதில் மிகப் பெருமையடைகிறோம். சுதத் ரோஹண இயக்கிய அம்புதருவோ, உதுவான்கந்த சரடியேல், கருவல கெதர, கிந்துரு குமாரயா உள்ளிட்ட பல தொலைக்காட்சி நாடகங்களுக்கும் இதற்கு முன்னர் சுதேஷி இண்டஸ்ட்ரீஸ் அனுசரணை வழங்கியிருந்தது.
இந்நாடகத்தின் பிரதான அனுசரணையாளராகிய சுதேசி கொஹொம்ப, தலைமுறை தலைமுறையாக நம்பகமான வர்த்தக நாமமாக இருந்து வருகிறது. சுதேசி கொஹொம்பவில் இயற்கையான வேம்பு எண்ணெய் உள்ளது. இது கிருமிகளுக்கு எதிராக பாதுகாப்பை வழங்கும் இயற்கையான சிகிச்சை மூலிகையாக, தலைமுறை தலைமுறையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சுதேசி கொஹொம்ப, சருமத்தை தூய்மையாக்கும் அதே நேரத்தில் சருமத்திற்கு போசாக்களித்து, அதனைப் பாதுகாக்கிறது.
‘மாணிக்கவத்த’ என்பது காடுகளிலும் அதை மையப்படுத்திய வாழ்க்கைக்கான வாழ்வாதாரத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு கற்பனையான கதையாகும். 1880ஆம் ஆண்டில், மன்னர் ஒருவரின் கீழ் உள்ள ஒரு உயர் பதவியில் உள்ள மதுவன்வெல திசாவே என்பவர், இளம் ஜோடிகளான கெட்டி ஹாமி மற்றும் பிச்சியை, அட்டகலன் பகுதியில் உள்ள ஒரு அடர்ந்த காட்டுப் பகுதிக்கு நாடு கடத்துகிறார். அவர்களுக்கு பிறக்கும் முதலாவது குழந்தை அதன் ஆரம்ப நாட்களிலேயே குருடாக மாறுகிறது. இந்த தம்பதியினர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக உழுது அறுவடை செய்யப்பட்டு வந்த நெல் வயலும் பின்னர் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு, உத்தியோகபூர்வ உத்தரவின் பேரில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகின்றது. விருது பெற்ற எழுத்தாளர் மஹிந்த பிரசாத் மாசிம்புலகேயின் கற்பனைப் படைப்பான மாணிக்கவத்த, இவ்வாறு நாடுகடத்தப்பட்ட தம்பதியினர், அக்காலத்தில் தொடர்ச்சியாக மாறும் சமூக – அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகளின் கீழ், இத்தகைய போராட்டங்களுக்கு மத்தியில் தைரியமாக தங்கள் குடும்பத்தை எவ்வாறு கட்டியெழுப்புகின்றனர் என்பதை கதை கூறுகின்றது. இப்புனைக்கதை படைப்பில் உள்ள கதாபாத்திரங்களான ஜகத் சமில, உமா அசேனி, வோல்கா கல்பனி, மயூர பெரேரா, சரத் கொத்தலாவல, நிரோஷன் விஜேசிங்க, உதயந்தி குலதுங்க, டபிள்யூ. ஜயசிறி, பிரியங்கர ரத்நாயக்க, பாலித சில்வா ஆகியோரால் நாடகம் உயிரூட்டப்பட்டுள்ளது.
100% உள்ளூர் நிறுவனமான சுதேசி, தனது தேசத்தைக் கட்டியெழுப்பும் என்பதுடன், இலங்கை சமூகங்களுக்கான அதன் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்களையும் (CSR) தொடரும். சுதேசி கொஹோம்ப வர்த்தக நாமமானது, இயற்கை அன்னையை பராமரிப்பதிலும் கலாசார விழுமியங்களை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துவதோடு மட்டுமல்லாது, நிலைபேறானதன்மை தொடர்பான திட்டங்களை செயல்படுத்த அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் விகாரைகளை ஒளியூட்டும் ‘சுதேசி கொஹோம்ப ஆலோக பூஜா’ நிகழ்வுகள், விகாரைகள் மற்றும் புகையிரத நிலையங்களுக்கான கை கழுவும் தொகுதிகள் வழங்கல், கொவிட்-19 தொற்றுநோய்களின் போது குழந்தைகளை நோக்காகக் கொண்ட வீடியோ மூலமான கைகளை கழுவுதல் தொடர்பான விழிப்புணர்வுகள், வேம்பு மர நடுகை பிரசாரங்கள், இலங்கையின் வறண்ட வலயத்தில் உள்ள சமூகத்தினர் மற்று பாடசாலைகளுக்கு தண்ணீர் தொட்டிகளை நன்கொடையாக வழங்குதல், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு குழந்தை பராமரிப்பு பரிசுகள் போன்றவற்றை வழங்குதல் ஆகியன, நிறுவனத்தின் பல சமூக நல முயற்சிகளாகும்.
இலங்கையில் மூலிகையுடனான தனிநபர் பராமரிப்பு பிரிவில் முன்னோடியும், சந்தையின் முன்னணி நிறுவனமுமான Swadeshi Industrial Works PLC நிறுவனம் 1941 இல் கூட்டிணைக்கப்பட்டது. ராணி சந்தனம், சுதேசி கொஹோம்ப, சுதேசி கொஹோம்ப பேபி, பேர்ல்வைட், லக் பார், சேஃப் ப்ளஸ், பிளக் ஈகிள் பேர்ஃப்யூம், கொஹோம்ப ஹேண்ட் வொஷ், கொஹோம்ப பொடி வொஷ், ராணி ஷவர் கிறீம் வகைகள் ஆகியன சுதேசியின் முன்னணி தரக்குறியீடுகளில் உள்ளடங்குகின்றன.
“இலங்கையின் முன்னணி மூலிகை தனிநபர் பராமரிப்பு தயாரிப்புகள் உற்பத்தி நிறுவனம் எனும் வகையில், சுதேசி அதன் அனைத்து தயாரிப்புகளிலும் பயன்படுத்தப்படும் மூலிகைப் பொருட்களின் செயற்பாட்டு நன்மைகள் தொடர்பில் நுகர்வோர் மேலும் அறிந்து கொள்ள வேண்டுமென விரும்புகிறது. நாங்கள் இலங்கையின் சிறந்த மூலிகைகளை மட்டுமே பயன்படுத்துகிறோம் என்பதுடன், பயன்படுத்தப்படும் அனைத்து மூலப்பொருட்களும் விரிவாக ஆய்வுக்குள்ளாக்கப்படுகின்றன. தயாரிப்புகளின் தரத்தை உறுதி செய்வதற்காக முழுமையாக சோதனைக்கு உள்ளாக்கப்படுவதுடன், எமது தயாரிப்புகள் யாவும் 100% சைவத்தை அடிப்படையானது. அவை விலங்குகள் மீது சோதிக்கப்படவில்லை என்பதுடன் விலங்குகளின் கொடுமைகளிலிருந்து விலக்கற்றவை. சுதேசி கொஹொம்ப, ராணி சந்தனம், சுதேசி கொஹொம்ப பேபி உள்ளிட்ட சுதேசி தயாரிப்புகள் யாவும் இங்கிலாந்தின் Vegetarian Society, UK யினது அங்கீகாரம் பெற்றவை.” இந்த உறுதிமொழியானது, நிறுவனத்தின் முன்னோக்கு-சிந்தனை நடைமுறைகளுக்கும், நுகர்வோருக்கு நெறிமுறை ரீதியானதும் சூழல் நட்புரீதியானதுமான தெரிவுகளை மேற்கொள்ள உதவும் என நாம் எதிர்பார்க்கிறோம். நிறுவனம் எப்போதும் தனது தயாரிப்புகளின் ஆரோக்கியம் மற்றும் சூழல் தாக்கத்தை கருத்தில் கொண்டு, தொடர்ந்தும் அவற்றிற்கு முன்னுரிமையளிக்கின்றது. உண்மையான இலங்கை நிறுவனமான சுதேஷி, அண்மையில், எந்தவொரு நிறுவனமும் பெறாத COVID-19 பாதுகாப்பு முகாமைத்துவ சான்றிதழை பெற்றுள்ளதுடன், இவ்வாறான தொழில்துறையில் முதன்முதலாக தனது பெயரில் பெற்ற பல்வேறு உரிமை கோரல்களுக்கு உரித்துடையதாக திகழ்கின்றது.
#ENDS#