சுய-வடிவமைக்கப்பட்ட Imaging Chip V1 உடன் புதிய புரட்சியை ஏற்படுத்தும் vivo, நீண்டகால தொழில்நுட்ப புத்தாக மூலோபாயத்திற்கும் உறுதிபூண்டுள்ளது

0

vivo தனது புதிய சுய-வடிவமைக்கப்பட்ட Imaging Chip V1 ஐ கடந்த வாரம் சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்ற ஊடகங்களுக்கான நிகழ்வின் போது அறிமுகப்படுத்தியது. vivo இந்த நிகழ்வின் போது Imaging Chip V1 ஐ அறிமுகப்படுத்தியதுடன், தனது நான்காண்டு நீண்ட கால மூலோபாயம் தொடர்பிலும் விபரித்திருந்தது.

“V1 என்பது முழு-தனிப்பயனாக்கப்பட்ட ஒருங்கிணைந்த சர்க்யூட் சிப் (circuit chip) என்பதுடன், இது முதற்தர நவீன காட்சி தரத்துடன் இமேஜிங் மற்றும் வீடியோ அப்ளிகேஷன்களுக்கானதாகும். இது சுயாதீன ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி, சிப் வடிவமைப்பில் vivoவின் ஆரம்ப நிலை முன்னேற்றமாக ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது. vivoவின் இமேஜிங் சிஸ்டம் வடிவமைப்பிற்கு (imaging system design) இணைவாக, வியூஃபைண்டர் லுக் (viewfinder look) மற்றும் வீடியோ ரொக்கோடிங் (video recording) போன்ற ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்களை மேம்படுத்தி பாவனையாளர்களின் தேவைகளை நன்கு பூர்த்தி செய்யும் திறனை கொண்டுள்ளது,” என  vivoவின் நிறைவேற்று துணைத் தலைவர் மற்றும் பிரதான செயற்பாட்டு அதிகாரியுமான ஹூ பைஷான் தெரிவித்தார்.

Imaging Chip V1, 24 மாதங்களாக விவோவில் உள்ள 300 ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பணியாளர்கள் மற்றும் இமேஜிங் ஆய்வக நிபுணர்களால் உருவாக்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில், ​​பட அமைப்பு, இயங்குதளம், தொழில்துறை வடிவமைப்பு மற்றும் செயல்திறன் ஆகிய நான்கு பிரதான மூலோபாய தடங்களைச் சுற்றியே சிப் மட்டத்தில் புதுமையான பட செயலாக்க (ஐபி) தொழில்நுட்பத்தை முன்னெடுப்பதற்கான விவோவின் அணுகுமுறை அமைந்திருக்கும்.

“vivo தயாரிப்புகளின் காட்சி அழகியல் மற்றும் இமேஜிங் விளைவுகளை மேம்படுத்துவதற்கு அப்பால் Imaging Chip V1 ஆனது, காட்சி வெளிப்பாடு மூலம் உணர்ச்சி ரீதியான ஒத்திசைவினை வழங்குவதன் மூலம் பாவனையாளர்களுக்கு இணையற்ற அனுபவங்களைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தொழில்துறையில் முன்னணி வகிக்கும் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்களை உருவாக்க நான்கு மூலோபாய தடங்களில் நீண்ட கால முதலீட்டை மேற்கொள்ள vivo உறுதியாக உள்ளதுடன், இது சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் உயர்நிலை ஸ்மார்ட்போன் பாவனையாளர்களைக் கூட திருப்திப்படுத்தும்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில்,  vivo வடிவமைப்பு-உந்துதல் மற்றும் பயனர் சார்ந்த கண்டுபிடிப்புகளை  பாவனையாளர்களின் பரிணாமமடைந்து வரும் கோரிக்கைகளுடன் இணைக்கத் தொடங்கியதுடன், இது நான்காண்டு நீண்ட கால மூலோபாயப் பாதைகளில் நிறைவடைந்தது. அன்றிலிருந்து, vivo ஒரு வலுவான வளர்ச்சி மூலோபாயத்தை செயல்படுத்த உலகம் முழுவதிலுமிருந்து திறமையானோரை பணிக்கமர்த்தி வருகிறது.

இமேஜ் சிஸ்டம் (Image system) என்பது vivoவின் முக்கிய நீண்டகால மூலோபாய தடங்களின் ஒரு பகுதியாகும். vivo இன்று வரை ஐந்து வருடங்களுக்கும் மேலாக இந்தத் துறையில் அதிக முதலீடு செய்துள்ளது, கிம்பல் ஸ்டேபிலைசேஷன் (Gimbal Stabilization) தொழில்நுட்பம் மற்றும் செல்ஃபி ஸ்பாட்லைட் (Selfie Spotlight) போன்ற பல தொழில்துறையில் முன்னணியான முன்னேற்றங்களை அடைந்துள்ளது. டிசம்பர் 2020 இல், vivo மற்றும் ZEISS  ஆகியன மொபைல் இமேஜிங் புத்தாக்கத்தில் நீண்ட கால மூலோபாய பங்குடமையை அறிவித்தது. இரு பங்காளர்களும் vivo ZEISS இமேஜிங் ஆய்வகத்தில் இணை ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மூலம் மொபைல் இமேஜிங் (mobile imaging) இன் எல்லைகளுக்கு சவால் விடுக்கும் விருப்பத்தையும், அதேபோல மிகவும் தேவைப்படும் நுகர்வோர் தேவைகளையும் எதிர்பார்ப்பது மற்றும் பூர்த்தி செய்வதற்கான இலட்சியத்தையும் பகிர்ந்து கொள்கின்றனர்.

நுகர்வோர் நுண்ணறிவுகளின் அடிப்படையில், தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கு இடையேயான சமநிலையை பேண vivo, தயாரிப்பு திட்டமிடல், தொழில்நுட்ப திட்டமிடல் மற்றும் தொழில்நுட்ப முன் ஆராய்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் மூன்று அம்ச மூலோபாயத்தை செயல்படுத்தும். vivo Central Research Institute ஆனது நுகர்வோர் கோரிக்கைகள், தொழில்துறை போக்குகள் மற்றும் பாவனையாளர் சூழல் ஆகியவற்றுடன் நெருக்கமாக இணைந்திருக்கும் வரவிருக்கும் தொழில்நுட்பங்களை திட்டமிடுவதற்கு பொறுப்பாகும்.

அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளில் vivoவின் குறிக்கோள், வடிவமைப்பை பிரதானமாகக் கொண்ட பெறுமதியின் அடிப்படையிலான சிறந்த தயாரிப்புகளை உருவாக்குவது, பாவனையாளர்களுக்கு அதிகளவில் வசதியான மொபைல் மற்றும் டிஜிட்டல் அனுபவத்தை வழங்கி மூலம் மனிதர்களுக்கும் டிஜிட்டல் உலகத்திற்கும் இடையே ஒரு பாலத்தை உருவாக்குவதாகும். vivo ஒரு ஆரோக்கியமான, நீண்ட கால உலகத்தரம் வாய்ந்த நிறுவனமாக மாறும் நோக்கில் தீவிர அபிவிருத்தி மூலோபாயங்களை தொடர்ந்து செயல்படுத்தும்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed