தேவையுடையவர்களுக்கு உதவுவதில் தனது உறுதிப்பாட்டைத் தொடரும் Hemas Consumer

0

கொவிட்-19 பரவலுக்கு எதிராக போராடி வருபவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், இலங்கை இராணுவ சேவா வனிதா பிரிவுக்கு, தனிநபர் பராமரிப்பு பொருட்களை நன்கொடையாக வழங்க Hemas Consumer முன்வந்துள்ளது. இந்நன்கொடை பொருட்களில், கொவிட் நோயாளிகளின் அவசரத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்டும் கணிசமான அளவிலான தனிநபர் பராமரிப்புப் பொருட்கள் அடங்கியிருந்தன, இலங்கை இராணுவத்தினால் சீதுவவில் அபிவிருத்தி செய்யப்பட்ட கொவிட்-19 சிகிச்சை நிலையத்திற்கு இப்பொருட்கள் கையளிக்கப்பட்டன.

ஓர் உண்மையான உள்ளூர் கூட்டு நிறுவனமாக Hemas Consumer நிறுவனம், கடந்த 2020ஆம் ஆண்டில் கொவிட் தொற்றுநோய் ஆரம்பத்திலிருந்து, இந்த எதிர்பாரா சவால்களை சமாளிக்க அனைத்து இலங்கையர்களுக்கும் உதவ வேண்டும் எனும் நோக்கத்துடன், சமூக ஆதரவு முயற்சிகளில் முன்னணியில் இருந்து வருகிறது. சரியான தருணத்தில் இவ்வாறான முன்முயற்சிகளுக்கு Clogard பற்பசை, Dandex ஷம்பூ, Fems சுகாதார துவாய்கள் உள்ளிட்ட Hemas Consumer தரக்குறியீடுகள் தமது ஆதரவை அளித்து வந்துள்ளன.

இலங்கை இராணுவ சேவா வனிதா பிரிவுக்கு உதவியளித்த ஹேமாஸ், கொவிட் நெருக்கடியை எதிர்த்து போராடும் திட்டங்களுக்கு தனது தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் வகையில், கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ள ஆயுர்வேத திணைக்களத்திற்கும் தனிநபர் பாதுகாப்பு பொருட்களை நன்கொடையாக அளித்துள்ளது. குறிப்பாக, மருத்துவமனைகளின் அவசர தேவைகளாக அறிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் உடனடியாக செயற்பட்ட ஹேமாஸ், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சுகாதார துவாய்களை நன்கொடையாக வழங்கியது. சமீபத்தில் பெய்த மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான, கம்பஹா மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சுகாதார துவாய்களை நன்கொடையாக அளித்து ஹேமாஸ் மீண்டும் தனது உதவிக் கரத்தை அம்மக்களுக்கு நீட்டியுள்ளது.

தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் இவ்வாறான நன்கொடை திட்டங்கள் தொடர்பில் கருத்துத் வெளியிட்ட, Hemas Consumer பணிப்பாளர் பியோனா ஜூரியன்ஸ் முனசிங்க, “ஹேமாஸ் முற்றிலும் ஓர் உண்மையான உள்ளூர் நிறுவனமாகும், அது சமூகத்தின் நலனில் மிக அக்கறையாக உள்ளது. ஆரோக்கியமான வாழ்வின் மூலம் வாழ்க்கையை வளமாக்குகிறது. நாடு சவாலை எதிர்கொள்ளும் ஒவ்வொரு முறையும் எமது சக குடிமக்களுக்கு ஆதரவளிப்பதில் நாம் ஒரு படி முன்னாலேயே நின்றுள்ளோம். ஒரு கூட்டு முயற்சியின் மூலம் இந்த சவால்களை நாம் சமாளிக்க முடியுமென நாம் நம்புகிறோம். முழு தேசத்துடனும் ஒன்றிணைந்து நிற்க இதுவே சரியான தருணமாகும்.” என்றார்.

Hemas Consumer பற்றி வீடுகள் மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறையில் இலங்கையின் முன்னணி உற்பத்தியாளரான Hemas Consumer, Hemas Holdings PLC யின் ஒரு துணை நிறுவனமாகும். ஹேமாஸ் நிறுவனம், குடும்பங்கள் ஆரோக்கியமாக வாழ உதவுதல் எனும் ஒரு எளிய நோக்கத்துடன் 1948 இல் நிறுவப்பட்டது. இன்று, 4,500 இற்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட, இம்முன்னணி மக்கள் மைய நிறுவனம், நுகர்வோர், சுகாதார மற்றும் பல்துறை அம்சங்களில், உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் தனித்துவ துறை மூலம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழி வகுத்து வருகிறது.  இலங்கையின் சமூக பொருளாதாரத்தின் கவசமான Hemas நிறுவனம், அதன் தொடர்ச்சியான பயணத்தில், தொடர்ந்தும் மாறுபட்ட மற்றும் முக்கிய விடயங்களில் முதலீடு செய்வதோடு, அர்த்தமுள்ள வரப்பிரசாதங்களை உருவாக்கி, நம்பகமான கூட்டாண்மைகளை வளர்த்து அதன் மூலம் இவ்வனைத்தையும் உள்ளடக்கிய உலகத்தை வெற்றி கொள்கிறது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed