IITயின் 30 வது ஆண்டு நிறைவில் University of Westminster பட்டங்களை வருடாந்த பட்டமளிப்பில் பெற்றுக்கொண்ட மாணவர்கள்

0

இலங்கையில் பிரிட்டிஷ் உயர் கல்வியின் முன்னோடியும், நாட்டின் முதன்மையான தகவல் தொழில்நுட்ப மற்றும் வணிக வளாகமுமான Informatics Institute of Technology (IIT), தனது 26 வது பட்டமளிப்பு விழாவை வெற்றிகரமாக நடாத்தியதுடன், அங்கு 350 க்கும் மேற்பட்ட மாணவர்கள் University of Westminster – United Kingdom (UoW) இன் பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.

அதிகாரிகள் வழங்கிய கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களின் படி நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில், IITயின் 350 க்கும் மேற்பட்ட மாணவர்கள், UoWவழங்கிய IT மற்றும் வணிகத் துறையில் உலகளவில் புகழ்பெற்ற இளமானி மற்றும் முதுமானி பட்டங்களை பெற்றனர். Bachelor of Engineering (Honours) in Software Engineering, Bachelor of Science (Honours) in Computer Science, Bachelor of Science (Honours) in Business Information Systems, Master of Arts in Fashion Business Management, Master of Science in Advanced Software Engineering மற்றும் Master of Science in Cyber Security and Forensics ஆகியவற்றை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

சைபர் பாதுகாப்பு மற்றும் தடயவியல் மாணவர்களும், பெஷன் வணிக மாணவர்களும் பட்டம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த பட்டமளிப்பு விழாவில் பிரதம விருந்தினராக கல்வி அமைச்சின் செயலாளரும், மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் கபில பெரேரா கலந்து கொண்டார். Informatics குழும நிறுவனங்களின் தலைவர் Dr. காமினி விக்ரமசிங்க, IIT நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹான் பெர்னாண்டோ, Westminster பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் தலைவருமான Dr. பீட்டர் போன்ஃபீல்ட் (நேரடி ஸ்ட்ரீம் வழியாக இணைந்து கொண்டார்), ஏராளமான IIT பணியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் BMICH பிரதான மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இந் நிகழ்வின் போது, IIT இல் தாம் கற்ற காலப்பகுதியில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பல சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

Informatics குழும நிறுவனங்களின் தலைவர் Dr. காமினி விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “IIT 30 ஆண்டுகால கல்வி மேன்மையை கணினியியல் மற்றும் வணிகத்தில் மாபெரும் வெற்றியுடன் கொண்டாடுவதால், எங்கள் 26 வது பட்டமளிப்பு விழாவில் எங்கள் IIT  பட்டதாரிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.University of Westminster (UOW) இளமானி மற்றும் முதுமானி கல்வித் திட்டங்களை வெற்றிகரமாக முடித்த IIT இன் பட்டதாரிகளின் இந்த புதிய தொகுதி தமது வெற்றியை நோக்கிய பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. எங்கள் வளாகத்தில் எங்கள் பட்டதாரிகள் பெற்ற கல்வி, தொழில்துறையில் மாறும் மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றுவதற்கும், கோர்பரேட் உலகின் சவால்களை ஏற்றுக்கொள்வதற்கும் அவர்களை வலுவூட்டியுள்ளது.IITயின் பல தனித்துவமான அம்சங்களில் ஒன்று, நமது மாணவர்களுக்கு வழங்கப்படும் பல்கலைக்கழக வாழ்க்கையின் பன்முகத்தன்மை ஆகும், அங்கு கற்பிக்கப்பட்ட கல்வி சுயாதீனமான கற்றல் மற்றும் பலவிதமான இணைப்பாடவிதான செயற்பாடுகளுடன் ஒன்றிணைக்கப்படுகிறது. IITயில், நாங்கள் எப்போதுமே பட்டதாரிகளை முழுமையானவர்களாகவும், தொழில்துறையில் நுழையும் மிக உயர்ந்த திறனுள்ளவர்களாகவும் உருவாக்க முயற்சிக்கின்றோம். IITயில் வழங்கப்படும் கல்வி அறிவு மற்றும் தொழிற்துறை வெளிப்பாடு ஆகியவற்றின் கலவை எங்கள் பட்டதாரிகளுக்கு அவர்கள் தெரிவு செய்த வாழ்க்கைப் பாதையில் சிறந்து விளங்க உதவியதுடன், இன்றைய போட்டிமிக்க தொழிற்சந்தையில் அதிக கேள்வி கொண்டதாக உள்ளது”,என்றார்.

Westminster பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் தலைவருமான Dr. பீட்டர் போன்ஃபீல்ட் கருத்து தெரிவிக்கையில்,”University of Westminster  என்பது ஒரு உறுதியான உலகளாவிய கண்ணோட்டத்துடன் கூடிய ஐக்கிய இராச்சியத்தின் பல்கலைக்கழகமாகும், மேலும் தொழில்துறை ஈடுபாட்டிற்கும், எங்கள் மாணவர்கள் அனைவரையும் தொழில்முறை பட்டதாரி வாழ்க்கைக்கு தயார்படுத்துவதற்கும் ஒரு வலுவான அர்ப்பணிப்புடன் உள்ளது. IIT என்பது இலங்கையில் எங்கள் நீண்டகால – மற்றும் மிகவும் மதிப்புமிக்க பங்குதாரராகும். எங்கள் பங்குடமையானது  மாணவர்களுக்கான வேலைவாய்ப்பை வளர்ப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் மற்றும் முன்னணியில் உள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்களுடனும், பல்வேறு தொழில்முறை நடைமுறைகள் மற்றும் துறைகளுடனும் ஈடுபடுவதில் அவர்களுக்கு ஆதரவளிப்பதற்கான பரஸ்பர விருப்பத்திலிருந்து பிறந்ததாகும். எங்கள் பங்குடமையின் அடித்தளத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தகவல் அமைப்புகள், தகவல் மற்றும் மென்பொருள் பொறியியல் ஆகியவற்றில் எங்கள் பொதுவான பணி, இரு நிறுவனங்களிலும் எங்கள் கல்வித் திட்டங்களுக்கு ஒரு முக்கிய பங்களிப்பை செய்வதுடன், எங்கள் மாணவர்களை பட்டதாரி வேலை உலகிற்கு தயார்படுத்துகிறது.தொழில் சார்ந்த பாடப் பிரிவுகளின் தொடர்ச்சியான விரிவாக்கலுடன், IIT Colombo  உடனான எங்கள் பங்குடமைக்கான ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். University of Westminster மற்றும்IITயில் எங்கள் கல்வித் திட்டங்கள், நிறுவனம், புத்தாக்கம் மற்றும் படைப்பாற்றலைத் தழுவி, அனைத்து பின்னணியிலிருந்தும் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், அவர்களின் ஆற்றலை பயன்படுத்திக் கொள்ளவும் உதவுகின்றன.தொழில்சார் வாழ்க்கை உலகிற்கும், உலகளாவிய வேலைவாய்ப்பு அரங்கிற்குத் தேவையான திறன்களுக்கும் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பது எமது பெறுமானங்களுக்கு அடிப்படையானதாகும். இலங்கைத் தொழிற்துறை, புகழ்பெற்ற தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிக நிறுவனங்கள் மற்றும் எங்கள் சொந்த அங்கீகார அமைப்பான British Computer Society ஆகியவற்றால் எங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் எங்களுக்கு குறிப்பிடத்தக்க பெருமையைத் தருகிறது,” எனக் குறிப்பிட்டார்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *