SLINTEC மற்றும் Multilac Care இணைந்து வெளியிடும் கொரோனா வைரஸிற்கு எதிராக போராடும் NOVID வைரஸ் தடுப்பு மற்றும் பற்றீரியா தடுப்பு ஸ்பிரே
COVID-19 இற்கு எதிரான முன்னோடி முயற்சியாக, Sri Lanka Institute of Nanotechnology (SLINTEC) உடன் இணைந்து Multilac Care, இலங்கையின் முதல் வைரஸ் தடுப்பு மற்றும் பற்றீரியா தடுப்பு ஸ்பிரேயினை அண்மையில் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் வெளியிடப்படும் இந்த வகையான முதல் தயாரிப்பு NOVID வைரஸ் தடுப்பு மற்றும் பற்றீரியா தடுப்பு ஸ்பிரே இதுவென்பதுடன், 99% கொரோனா வைரஸை இது கொல்கிறது. குறுகிய காலத்திற்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும் பாரம்பரிய கிருமிநாசினிகளுடன் ஒப்பிடுகையில்,இந்த ஸ்பிரேயின் ஒரு முக்கிய சிறப்பம்சம் என்னவெனில், ஒரு தடவை பயன்படுத்துவதானது நீண்ட நேரத்துக்கு நீடித்து நிலைப்பதுடன் அதிக அளவு பாதுகாப்பையும் உறுதி செய்யும்.
NOVID வைரஸ் தடுப்பு மற்றும் பற்றீரியா தடுப்பு ஸ்பிரே தெளிக்கப்பட்ட மேற்பரப்புகள் மீதான பரிசோதனையின் போது, இந்தப் பூச்சு கொரோனா உட்பட 99.9% தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை கொல்லக்கூடியதென்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது பயன்படுத்த எளிதானதுடன், அதன் தரத்தில் தனித்துவமானதாகும். மேலும், இது ஐக்கிய இராச்சியத்தின் லண்டனில் உள்ள வைரோலஜி ஆராய்ச்சி சேவைகள் ஆய்வகங்களால் பரிசோதிக்கப்பட்டு சான்றளிக்கப்பட்டது.
NOVID வைரஸ் தடுப்பு மற்றும் பற்றீரியா தடுப்பு ஸ்பிரே தொடர்பில் தனது கருத்தை வெளியிட்ட, Multilac Care இன் பணிப்பாளர்/ பிரதான நிறைவேற்று அதிகாரி மிஷா மிஸ்வர், “COVID-19 வைரஸை எதிர்த்துப் போராடுவதில் ஒரு சிறந்த தீர்வை உருவாக்க SLINTEC உடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம். NOVID வைரஸ் தடுப்பு மற்றும் பற்றீரியா தடுப்பு ஸ்பிரே என்பது எங்கள் ஒத்துழைப்பின் விளைவாகும், மேலும் இது கொரோனா வைரஸுக்கு எதிராக அதன் உற்பத்தி செயல்பாட்டில் பயன்படுத்தப்படும் வைரஸ் எதிர்ப்பு தொழில்நுட்பத்துடன் மிகவும் செயற்திறன்மிக்கதாக இருப்பதனை நிரூபித்துள்ளது. பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க உதவுவதோடு, COVID-19 வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் எங்கள் பங்கை வகிப்பதிலும் பெருமிதம் கொள்கிறோம்,” என்றார்.
NOVID வைரஸ் தடுப்பு மற்றும் பற்றீரியா தடுப்பு ஸ்பிரே ஒரு பிரஷ் உடன் பொதிசெய்யப்பட்டுள்ளதுடன், அதன் மூலம் மேற்பரப்புகளில் பூசுவதன் மூலம் சிறப்பான பயனைப் பெறமுடியும். அதே நேரத்தில், மரம், உருக்கு, பிளாஸ்டிக், துணி, சுவர் மற்றும் சீமெந்து, கதவு கைப்பிடிகள் மற்றும் வோல் சுவிட்சுகள் உள்ளிட்ட எந்தவொரு மேற்பரப்பிலும் உருட்டல், தெளித்தல் அல்லது துடைப்பதன் மூலமும் இதைப் பயன்படுத்தலாம். ஒரு மேற்பரப்பில் பயன்படுத்தப்பட்டதும், மேம்பட்ட நனோ- தொழில்நுட்பத்துடன் கூடிய NOVID ஸ்பிரே தானாகவே மேற்பரப்புகளை ஒரு நுண்ணுயிர் எதிர்ப்பு மண்டலமாக மாற்றுகிறது. இது மேற்பரப்புகளைச் சுற்றியுள்ள காற்றை சுத்திகரிக்கிறது மற்றும் காற்றில் உள்ள பற்றீரியாக்களை அகற்றுவதன் மூலம் அந்தப் பகுதியைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறது.
SLINTEC இன் பிரதான ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்திற்கான தலைமை அதிகாரி Dr. அசீஸ் முபாரக் கருத்து தெரிவிக்கையில், “வெற்றிகரமான நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் புத்தாக்கம் எப்போதும் ஒரு முக்கிய காரணியாக இருந்து வருகிறது. ஆனால் ஆராய்ச்சி முடிவுகளை பொருளாதார விளைவாக மாற்ற , ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைக்கு இடையே ஒத்துழைப்பு அவசியம். அத்தோடு, மற்றும் இடையிலான வெற்றிகரமான பங்களிப்பின் முக்கிய உதாரணமாகும்.
ஸ்பிரேயிலிருந்து அதிகபட்ச நன்மையைப் பெறவும், எளிதான பயன்பாட்டிற்காகவும், பாவனையாளர்கள் மேற்பரப்பு சுத்தமாகவும் ஈரலிப்பின்றி இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். மேலும் தேவையான எந்த மேற்பரப்பிலும் தெளிப்பதற்கும், உருட்டுவதற்கும் அல்லது துடைப்பதற்கும் முன்பு நன்கு குலுக்க வேண்டும். NOVID ஸ்பிரே மட்டும் COVID-19 இலிருந்து 100% பாதுகாப்பை உறுதிப்படுத்தாது என்பதால் பாவனையாளர்கள் தேவையான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பெருமை வாய்ந்த இலங்கை நிறுவனமான Macksons Paints Lanka (Pvt) Ltd, Multilac Paints உற்பத்தியாளர் என்பதுடன், வாடிக்கையாளர் தேவைகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான தனது அர்ப்பணிப்பால் தன்னை தனித்துவமாக வேறுபடுத்தியதுடன், சரியான நேரத்தில் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மற்றும் நாட்டின் பொருளாதாரத்துக்கு தொடர்ந்து பங்களிக்கும் புத்தாக்கம் மிக்க உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புகளை தொடர்ந்து உருவாக்கி வருகிறது. அதன் தயாரிப்புகளை 10க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, புகழ்பெற்ற புத்தாக்கங்கள் மற்றும் சர்வதேச தரமான தயாரிப்புகளுக்காக இலங்கையை தொடர்ந்து உலக அரங்கில் நிலைநிறுத்தியுள்ளது.