பாற்பண்ணையாளர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக பல பிரதேசங்களில் குளிரூட்டல் நிலையங்கள் மற்றும் பால் கறக்கும் கொட்டகைகளை நிறுவவுள்ள Pelwatte

0

அம்பாறை மற்றும் அனுராதபுர மாவட்டங்களில் கால்நடை மேய்ச்சலுக்கு நிலம் இல்லாதது தொடர்பான பல பிரச்சினைகளைத் தொடர்ந்து பால் விவசாயிகளுக்கு சிறப்பு நிலங்களை ஒதுக்குவதாக ஜனாதிபதி அளித்த வாக்குறுதி தொடர்பில் Pelwatte Dairy Industries தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. இந்த விடயம் மீது கவனம் செலுத்தியமைக்கும், தொழில்துறை மற்றும் மக்களை ஆதரிப்பதாக உறுதியளித்துள்ளமைக்கும் ஜனாதிபதிக்கு தங்கள் நன்றியைத் தெரிவிக்கும் அதேவேளை அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள நிலங்களில் பால் கறத்தல் கொட்டகைகள் மற்றும் குளிரூட்டும் நிலையங்களை நிறுவதற்கு உதவ Pelwatte Dairy விருப்பம் தெரிவித்துள்ளது.

சிறப்பு நிலங்கள் தொடர்பிலான அறிவிப்பு எதிர்பாராத நேரத்தில் வெளியாகி வாக்குறுதி வழங்கப்பட்டுள்ள நிலையில், உத்தேச குளிரூட்டல் நிலையங்கள் மற்றும் பால் கறக்கும் கொட்டகைகள் பாற்பண்ணையாளர்கள் தங்கள் மாடுகளை பாதுகாப்பாக மற்றும் சுத்தமான சூழலில் வைத்து பால் கறக்கவும், பாலை சேகரிக்கவும், அவற்றை குளிரூட்டும் நிலையங்களில் சேமிக்கவும்  உதவுவதன் மூலம் சரியான நேரத்தில்  பாலை நிறுவனத்திற்கு விநியோகிக்க ஆதரவளிப்பதுடன், தொழில்துறையின் உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறனை அதிகரிக்கும் அதேவேளை அவர்கள் பாலுக்கு சரியான விலையைப் பெற்றுக்கொள்வதனையும் உறுதிசெய்கிறது. இந்த முழு செயல்முறையையும் கால்நடை மருத்துவர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் எளிதில் கண்காணித்து அனுமதி வழங்க முடியும்.

இத்தகைய கொட்டகைகளை நிறுவுவது தொடர்பிலான அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த Pelwatte Dairy Industries இன் முகாமைத்துவ பணிப்பாளர் அக்மால் விக்ரமநாயக்க, “இந்த அமைப்புகள் பால் கறத்தல், சேமித்து வைப்பதற்கான இடங்களை பெற்றுக்கொள்ளவும், சேகரிப்பு மற்றும் போக்குவரத்துக்குக்கான மையங்களாகவும் செயற்படுமெனவும் நாம் நம்புகின்றோம். இது புத்துணர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த தரம் ஆகியவற்றின் அடிப்படையில் Pelwatte இன் தயாரிப்புகள் முதல் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்த உதவும். இவற்றோடு ஊட்டச்சத்து நிறைந்த மற்றும் காப்புப்பொருள்கள் அற்ற புதிய பாலின் முழுச்செழுமை நிறைந்த தயாரிப்பு வரிசையை மேலும் அதிகரிப்பதில் துணைபுரிவதுடன், இப்பகுதியில் உள்ள குடும்பங்களுக்கும் ஒட்டுமொத்த தொழில்துறைக்கும் ஆதரவளிக்கும்,”என்றார்.

பால் கறக்கும் கொட்டகைகளில் பால் கறக்கும் இயந்திரங்கள், தேவையான உள்கட்டமைப்பு மற்றும் கால்நடைகள் மற்றும் விவசாயிகளுக்கு வசதியான சூழலை வழங்க தேவையான அனைத்து உபகரணங்களும் பொருத்தப்படும். ஒவ்வொரு நாளும் ஒரு நிலையான மற்றும் மாற்றமில்லாத சூழலை வழங்குவது, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான நடைமுறைகளை உறுதி செய்யும் வகையில் பால் கறக்கும் அமைப்புகள் நிறுவப்படும். கைகளால் மேற்கொள்ளப்படுவதை விட பால் கறக்கும் இயந்திரங்களால் அபாயத்தைக் குறைக்கவும், தரம் மற்றும் ஒட்டுமொத்த வேகத்தை மேம்படுத்தவும் முடியும். இந்த இடவசதியானது செயல்முறைக்கு முன்பான கூட்ட நெரிசல் மற்றும் விரயத்தை குறைக்கவும் உதவும். இந்த கொட்டகைகள் எங்கள் விநியோக முறைக்கான நேரடி தொடர்பு புள்ளிகளாக செயல்படுவதுடன், இதன் மூலம் பாலானது குளிரூட்டல் நிலையங்கள் மற்றும் தொழிற்சாலையை சரியான நேரத்தில் அடைவதை உறுதி செய்யும் ஒரு நிலையான விநியோக செயல்முறைகளை நிறுவுகிறது. இந்த கொட்டகைகளை கால்நடைகளின் உடல்நலம் மற்றும் சுகாதாரத்தினை ஆய்வு செய்வதற்காகவும் அவற்றின் அடிப்படை முக்கிய உடலுறுப்புகள், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆரோக்கியம் சரியாக இருப்பதை உறுதி செய்வதற்கும் பயன்படுத்த முடியும். இந்த அமைப்புகள் குறிப்பாக பெரிய அளவில் கால்நடைகளை வைத்திருக்கும் பாற்பண்ணையாளர்களுக்கு உதவும் அதேவேளை அனைத்து பாற்பண்ணையாளர்களுக்கும் ஒரு சிறந்த வசதியாக இருக்கும் என்று நிறுவனம் நம்புகிறது.

மஹாஓய,  வெலிகந்தை, சேருவில , ரம்பகென்னோய, பொல்லேபெத்த, கந்தேகம மற்றும் மாதுறு மற்றும் அம்பாறை மாவட்டத்தின் அருகிலுள்ள பிற பகுதிகளில் உள்ள பாற்பண்ணையாளர்கள் கால்நடை மேய்ச்சலுக்கு வன சீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம், வன பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகாரசபை விதித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்து தங்கள் கவலைகளை வெளியிட்டுள்ளனர். முன்னதாக தனியான நிலங்கள் வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தாலும், அத்தகைய இடங்கள் முறையாக ஒதுக்கப்படவில்லையென்பதுடன்,  இதன் விளைவாக பாற்பண்ணையாளர்கள் கடுமையான சட்டங்களை எதிர்கொண்டனர். இது இந்த பகுதியில் உள்ள பாற்பண்ணைத்துறையை ஸ்தம்பிக்க வைத்தமை மட்டுமன்றி குடும்பங்கள், கால்நடைகள் மற்றும் ஒட்டுமொத்த தொழில்துறையையும் ஆபத்துக்குள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக Pelwatte Industries அதிகாரிகளின் உதவியை நாடியது.

Pelwatte கள அதிகாரிகள் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “இந்த நடவடிக்கை நிலங்களில் சிக்கித் தவிக்கும் 2000 க்கும் மேற்பட்ட கால்நடைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சமாளிக்க உதவும். கருவுறுதல் பிரச்சினைகள், நோய் மற்றும் உற்பத்தித்திறன் இழப்பு போன்ற பல சிக்கல்களைத் தடுக்க கால்நடைகளில் இருந்து தொடர்ந்து பால் கறக்கப்பட வேண்டுமென்ற போதிலும், பாற்பண்ணையாளர்கள் பல மாதங்களாக பார்வையிடவும் பராமரிக்கவும் அனுமதிக்கப்படாத தமது பசுக்களுக்கான அணுகலையும் வழங்கும்,”என்றனர்.

தரம், சுவை மற்றும் ஆரோக்கியம் ஆகிய நிறுவனத்தின் வழிகாட்டும் தூண்களுக்கு இணங்க, உலகளவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியமங்களை கடைபிடிக்கும் மிக உயர் தரமான தயாரிப்புகளை வழங்க Pelwatte எப்போதும் பாடுபடுகிறது. பாற்பண்ணையாளர்களிடமிருந்து பாலை சேகரித்து, செயன்முறைக்குட்படுத்தி சந்தைக்கு விநியோகிக்கும் Pelwatte இன் ஈடிணையற்ற 72 மணித்தியால பாற்பண்ணையாளரிடமிருந்து விற்பனை நிலையம் வரையான காலப்பகுதியானது குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும். இது அதன் புத்துணர்ச்சி, ஊட்டச்சத்து மற்றும் ஒட்டுமொத்த உணவூட்டத்தை உறுதி செய்வதன் மூலம் தமது தயாரிப்புகள் சிறந்த தரம் வாய்ந்தன என்பதை காலத்துக்கு காலம் உள்நாட்டு பால் பதப்படுத்துநர்கள் நிரூபித்துள்ளனர்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *