Huawei Y7a: விரும்பத்தக்க நடுத்தரவகை ஸ்மார்ட்போனாக அமைந்தமைக்கு காரணங்கள்

0

Huawei Y7a ஆனது Huawei இன் பிரபல Y தொடரின் சமீபத்திய நடுத்தர வகை ஸ்மார்ட்போன் என்பதோடு, அதன் போட்டியாளர்களுடன் ஒன்றுக்கொன்று நேரெதிரே நின்று போட்டியிடக் கூடிய வகையிலான, மிகப் பெரிய திரையையும் கொண்டுள்ளது. Y7a நடுத்தர வகை பிரிவில் உள்ளடக்கப்பட்டிருந்தாலும், இது முதன்மையான ஸ்மார்ட்போன் அம்சங்களை உள்ளடக்கியுள்ளதுடன் நடுத்தர வகை கையடக்கத் தொலைபேசியொன்றை கொள்வனவு செய்யும் பணத்திற்கான அதிக மதிப்பை வழங்குகிறது. Huawei Y7a ஆனது, அதன் விலை வரம்பிற்குட்பட்ட பெறுமதிக்கான பணத்திற்கு கொள்வனவு செய்வதில் சிறந்த மதிப்பை வழங்குகின்றது என்பதற்கு ஏழு தனித்துவமான காரணங்களை கொண்டுள்ளது.

ஒரு பெரிய திரை கொண்ட ஸ்மார்ட்போன் என்பது, உயர்தர திரைப்படங்களைப் பார்த்தல், விளையாடுதல், இணையத்தில் உலாவுதல் மற்றும் இணைய புத்தகங்களைப் வாசித்தல் ஆகிய விடயங்களை கொண்டிருக்க வேண்டி அம்சங்கள் என்பதோடு, இன்றைய எந்தவொரு ஸ்மார்ட்போன் பயனரினதும் பிரதான செயல்பாடுகளாக அவை காணப்படுகின்றன. நவீன ஸ்மார்ட்போன்கள் சராசரியாக 6.2 – 6.3 அங்குலங்கள் கொண்ட பெரிய திரையைக் கொண்டிருக்கும். ஆயினும், ஒரு நடுத்தர வகை தொலைபேசியில் வழக்கமாக காணப்படாத வகையிலான, ஒரு பெரிய, 6.67 அங்குல திரையுடன் Huawei Y7a வருகிறது. திரைக்கு உடல் விகிதத்தில், 90.3% எனும் மிகப் பெரும் பரப்பைக் கொண்ட திரையுடனான வடிவமைப்புடன், உள்ளங்கையில் வைத்து தொடர்ச்சியாக நீண்ட கால பயன்பாட்டை பேணுவதற்கு, Y7a ஒரு சிறந்த சாதனமாக அமைவதோடு, அதன் தனித்துவமான வடிவமைப்பு இருபுறமும் பேணப்பட்டுள்ளதுடன், செல்ஃபி கெமராவுக்கான சிறு துளையுடனான திரையையும் (punch display பஞ்ச் டிஸ்ப்ளே) அது கொண்டுள்ளது. உயர் திறனான பின்புற மூடி வடிவமைப்பைக் கொண்ட இது, படைப்பாற்றல் கொண்ட பச்சை, தங்கம், கறுப்பு (Crush green, Blush gold, Midnight black) ஆகிய 3 வண்ணங்களுடன் வருகிறது.

பெரும் சேமிப்புத் திறன் காணப்படுவதானது, பயனர்களுக்கு மெமரி கார்ட் போன்ற மேலதிக சேமிப்பு அம்சங்களின் தேவையை இல்லாமல் செய்கின்றது. நவீன ஸ்மார்ட்போன்களில் உயர் தரமான, பெரிய அளவிலான புகைப்படங்களை எடுக்கும் உயர் தெளிவுத்திறன் கொண்ட கெமராக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதிக சேமிப்பிடங்களை கொண்டுள்ள செயலிகள் மற்றும் கேம்களின் செல்வாக்கு அதிகரித்துவரும் நிலையில் பெரிய சேமிப்பகங்கள் இதற்காக அவசியமாகின்றன. அந்த வகையில் Huawei Y7a 128GB சேமிப்பகத்தைக் கொண்டுள்ளதுடன், இதன் மூலம் பயனர்கள் தங்களது சாதனத்தின் சேமிப்பகத்தை பற்றிக் கவலைப்படாமல் அனைத்து உயர் தெளிவுத்திறன் கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள், விளையாட்டுகள் உள்ளிட்ட அனைத்து செயலிகளையும் தரவிறக்கு பயன்படுத்த முடிகிறது.

Huawei Y தொடர் கொண்டுள்ள கெமராவானது, அத்துறையில் சக்தி வாய்ந்த ஒன்றாக காணப்படுகின்றது. Y7a தனது பாரம்பரிய வழியில் அமைந்த 48MP குவாட் கெமரா அமைப்பைக் கொண்டு வந்துள்ளதுடன், அதன் லென்ஸ்கள் செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படுகின்றன. அதன் பிரதான கேமரா f/1.8 குவியத்தைக் கொண்ட 48MP உயர் தெளிவுத்திறன் படப்பதிவு அம்சத்தைக் கொண்டு செயற்படுகிறது. 8MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் ஆனது f/2.4 எனும் குவியத்துடன், அல்ட்ரா-வைட் வகையிலான புகைப்படங்களைப் பிடிக்க உதவுகிறது. ஆழ விளைவுகளை பிடிப்பதற்காக 2MP ஆழ லென்ஸ் ஆனது f/2.4 எனும் குவியத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. மெக்ரோ (Macro) வகை மிக அருகில் எடுக்கப்படும் நுணுக்கமான புகைப்பட பிரியர்களுக்கு, Y7a இனது f/2.4 குவியம் கொண்ட 2MP மெக்ரோ லென்ஸ் இடமளிக்கிறது. பிரதான கெமராவுடன் இணைந்துள்ள ஏனைய கெமரா லென்ஸ்களைக் கொண்ட இக்கலவையானது AI focus (நுண்ணறிவாற்றல் கொண்ட குவியப்படுத்தல்) கொண்ட பரந்த படப்பிடிப்பு உள்ளடக்கத்துடன், மிக படிகம் போன்ற மிகத் தெளிவான புகைப்படங்களை எடுக்க வாய்ப்பளிக்கிறது. குறைந்த அல்லது மங்கலான ஒளியில் புகைப்படங்களை பிடிப்பது என்பது, நடுத்தர வகை ஸ்மார்ட்போன்களில் காணப்படும் அம்சமாக இல்லாத போதிலும், Y7a இனது ‘Super Night Mode’ (சுப்பர் நைட் பயன்முறை’) இன் மூலம் பயனர்களால் இருட்டில் கூட தெளிவான புகைப்படங்களை எடுக்க முடிகிறது.

தற்போது ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர்களில் பெரும்பாலானோர், ‘அடிக்கடி சார்ஜ் செய்வது’ போன்ற சிக்கலைத் தவிர்க்க, அதிக சக்தி வாய்ந்த மின்கலங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன்களைத் தெரிவு செய்கிறார்கள். உயர் தெளிவுத்திறன் கொண்ட திரை கொண்ட கையடக்கத் தொலைபேசிகளில், கேம்களை விளையாடுதல், வீடியோக்களை பார்வையிடுதல் போன்ற செயற்பாடுகளால், அதன் மின்கலங்கள் விரைவாக மின்னிழப்புக்குள்ளாகும் என்பதை அவர்கள் முழுமையாக அறிந்து வைத்துள்ளார்கள். Huawei இரசிகர்கள் தங்கள் Huawei ஸ்மார்ட்போன்களை மெச்சுவதற்கு மிகப் பெரும் காரணமாக, நீண்டகால மின்கல நீடிப்புத்திறனை கொண்டிருப்பதை காரணமாக கொண்டுள்ளார்கள். Y7a ஆனது 5000mAh மின்கலத்தைக் கொண்டுள்ளதன் காரணமாக ஒரு முழு நாள் பயன்பாட்டிற்குப் பின்னரும் பயனர்களுக்கு குறிப்பிட்ட மின்சக்தியை அதனால் வழங்க முடிகிறது. மீண்டும் இயக்க ஒரு சிறிய 10 நிமிட சார்ஜ் செய்வதன் மூலம், இரண்டு மணிநேர வீடியோவை பார்வையிட போதுமானதாக அமைவதென்பது, அது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், இருக்கும்போது, அதன் உண்மையான திறன் எவ்வாறு அமையும் என்பதற்கு ஒரு சான்றாக காணப்படுகின்றது.

பெரிய மின்கலங்களைக் கொண்டுள்ள கையடக்கத் தொலைபேசிகளில் காணப்படும் ஒரு முக்கிய பிரச்சினையானது, அதனை முழுமையாக சார்ஜ் செய்ய எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதில் தங்கியுள்ளது. அத்துடன், நடுத்தர வகை ஸ்மார்ட்போன்களில் பெரும்பாலானவை, வேகமாக சார்ஜ் செய்வதற்கு ஈடுகொடுக்கம் வகையில் அமைக்கப்படவில்லை. Y7a இன் 22.5W Huawei Super Charge தொழில்நுட்பம் காரணமாக, பயனர்கள் தற்போது Y7a கையடக்கத் தொலைபேசியை நம்பமுடியாத வேகத்தில் சார்ஜ் செய்யலாம். 5,000mAh பாரிய மின்கலம் மற்றும் 22.5W சுப்பர் சார்ஜ் ஒத்திசைவு என்பன, நீண்ட நேரம் தொலைபேசிகளுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் இன்றைய இளைஞர்களுக்கான சரியான அம்சங்களின் கலவையாக அமைகின்றன.

சக்திவாய்ந்த chipset (சிப்செட்) ஆனது வேகமான செயலாக்கத்தை வழங்குகிறது. அந்த வகையில் Huawei Y7a ஆனது 14nm Kirin 710A சிப்செட்டினால் இயக்கப்படுகிறது. இது மிகப் பிரபலமான விளையாட்டுகளைக் கூட எவ்வித பின்னடைவுகளும் ஏற்படாமல் விளையாட அனுமதிக்கிறது. Y7a இன் 4GB RAM உடன் ஜோடியாக அமைந்த கிரின் 710 சிப்செட் ஆனது, ஒரே நேரத்தில் பல பணிகளை மேற்கொள்ளுதல் (multi-tasking), உயர்தர இணைய வீடியோ பார்வையிடல், செயலிகளை செயற்படுத்தல் பயன்படுத்தல் போன்றவற்றின் போது சிறப்பாக செயல்பட உதவுகிறது.

கைரேகை வழி திரையை திறக்கும் (Fingerprint lock screen) அம்சம் என்பது, நடுத்தர வகை ஸ்மார்ட்போன்களில் வழமையாக காணப்படும் ஒரு அம்சமாக இருந்த போதிலும், நடுத்தர வகை தொலைபேசிகளில் காணப்படாத அம்சமான, பக்கவாட்டில் அமைந்த கைரேகை வழி திரையைத் திறக்கும்  பொத்தான் அம்சமானது, அரிதான விருந்தாக அமைந்துள்ளது. உண்மையில், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை திறத்தல் அம்சமானது, பெவிரலால் லாவகமாக பயன்படுத்தக் கூடிய வசதியானது வகையில் அமைந்துள்ளதோடு, மிக விரைவானது எனவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. Y7a இலுள்ள பக்கவாட்டில் அமைந்த கைரேகை திறத்தல் அம்சம் மூலம், ஒரு நொடியிலேயெ சாதனத்தை திறக்க முடியும்.

புதிய Huawei Y7a ஆனது உண்மையிலேயே அனைவராலும் பெறக் கூடிய வகையிலான, ரூ. 35,999 எனும் விலையில் கிடைப்பதோடு, நாடு முழுவதிலுமுள்ள அனைத்து சிங்கர் மெகா மற்றும் சிங்கர் பிளஸ் காட்சியறைகளிலும், அங்கீகரிக்கப்பட்ட விற்பனை முகவர்களிடமும் இருந்து கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் Daraz.lk வழியாக ஒன்லைனில் கொள்வனவு செய்து அதை தங்களது வீட்டுக்கே வரவழைத்து பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *