சிறந்த நடைமுறைகள் தொடர்பில் 10,000 பால் பண்ணையாளர்களை தொடர்ச்சியாக வலுவூட்டும் Pelwatte

0

இலங்கையின் முன்னணி பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy Industries Limited, கடுமையான பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் விவசாயிகளின் வாழ்வை செழுமையூட்டல், பாலுற்பத்தியில் தன்னிறைவு அடைதல் மற்றும் உற்பத்தியை அதிகரித்தல் போன்ற தனது உறுதிப்பாட்டை தொடர்ந்து முன்னெடுக்கும் நம்பிக்கையில், பயிற்சி மற்றும் அறிவு பகிர்வு திட்டங்கள் மூலம் விவசாயிகளை வலுவூட்டும் செயற்பாட்டை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.

புத்தலவில் உள்ள பயிற்சி மையத்தில் கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி  நடைபெற்ற பயிற்சித் திட்டங்கள், தீவன பராமரிப்பு, தீவனங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள், நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, இனப்பெருக்கம் மற்றும் வளர்ப்பு, சுத்தமான பால் உற்பத்தி, சேமித்தல் மற்றும் போக்குவரத்தை கையாளுதல் போன்ற விடயப்பரப்புகளை உள்ளடக்கியதுடன் விவசாயிகளுக்கு இவை தொடர்பான முழுமையான பார்வையை வழங்கியது. விவசாயிகள் தங்களை வலுவூட்டி உற்பத்தித் திறன் மற்றும் தமது தயாரிப்புகளின் தரத்தை அதிகரிப்பதற்கு உதவும் பொருட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்களினால் இந்த அமர்வுகள் நடாத்தப்பட்டன. விவசாயிகள் தமது பணிகளில் நிபுணத்துவம் பெறவும், சொந்தமாக ஒரு வியாபாரத்தை நிர்வகிக்கவும், நடத்திச் செல்லவும் தேவையான திறன்களை அவர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களை வலுவூட்ட இந் நிறுவனம் எதிர்ப்பார்க்கின்றது.

இதுவரையிலான திட்டங்களின் முன்னேற்றம் குறித்து Pelwatte Dairy இன் முகாமைத்துவ பணிப்பாளர், அக்மால் விக்ரமநாயக்க கருத்து தெரிவிக்கையில், “எமது 10,000 பால் பண்ணையாளர்களை உள்ளடக்கிய குடும்பத்தையும், அதற்கு அப்பாலும் முன்னேற்றகரமாக செழுமையாக்கும் இந்த நோக்கத்தின் பிரதான பங்காளராக இருப்பதையொட்டி மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம். இந்த நுட்பங்கள், உதவிக்குறிப்புகள் மற்றும் வழிமுறைகள் உற்பத்தியில் அவர்களின் ஒட்டுமொத்த உற்பத்தித்திறனை அதிகரிப்பதுடன், பாலின் தரம் மற்றும் அவர்களின் வாழ்க்கையின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்யும் என்று நம்புகிறோம். குறிப்பாக, இந்தக் காலப்பகுதியில் இந்த பண்ணையாளர்களுக்கும், துணை தொழிற்துறைகளுக்கும் உதவுகிறது,” என்றார்.

இந்த நோக்கத்திற்கு ஆதரவளித்த பங்காளர்கள் மற்றும் அமைப்புகளுக்கு தனது பாராட்டுகளைப் பகிர்ந்துகொண்ட அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “இந்தத் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதில் ஆதரவளிக்கும் அமைப்புகளுக்கு நான் நன்றி கூறுகிறேன். மேலும் எங்கள் அர்ப்பணிப்பு மற்றும் தொலைநோக்கு பார்வை காரணமாக ஏனைய பல சமூகங்களை ஆதரிக்கவும் வளப்படுத்தவும் முடியும் என்பதுடன், இதன் மூலம் இலங்கையை ஒரு தன்னிறைவான பொருளாதாரமாக மாற்றும்.”

இந்த நடவடிக்கைகளின் மூலம், உலகெங்கிலும் உள்ள சிறந்த நடைமுறைகள் மற்றும் வழிமுறைகளை நமது உள்ளூர் விவசாயிகளுக்கு பயிற்றுவிக்கவும், இதன் மூலம் செலவுகளைக் குறைக்கவும், செயல்திறனை அதிகரிக்கவும் Pelwatte  எதிர்ப்பார்க்கின்றது.

“நாங்கள் விவசாயிகளுக்கான இந்த பயிற்சியில் நிதி ரீதியான பரிவர்த்தனை நோக்கத்துடன் ஈடுபடவில்லை, மாறாக இந்த தேவைகள் எங்கள் வருடாந்த வரவு செலவுத் திட்டத்திலேயே உள்ளடக்கப்படுகின்றன,” என விக்ரமநாயக்க அவர்கள் குறிப்பிட்டதுடன், இதன் இறுதி நோக்கம் வாழ்வை வலுவூட்டல் என்பதை மென்மேலும் உறுதிப்படுத்தினார். மேலும், நிறுவனத்தின் நோக்கம் வெறுமனே நிதி ஆதாயம் என்பதல்ல என்பதுடன், அதனையும் தாண்டி தேசத்திற்கு மீண்டும் கைமாறு செய்வதாகும்.

Pelwatte Dairy Industries புத்தலவில் உள்ள தங்கள் பயிற்சி மற்றும் அபிவிருத்தி பண்ணையில் தொடர்ச்சியாக பயிற்சி முகாம்களை நடத்துகின்றது. உள்ளக பயிற்சியானது விவசாயிகளுக்கு தங்குமிடம் மற்றும் போக்குவரத்தை வழங்குகிறது. இதனால், விவசாயிகள் சிறந்த பயிற்சி மற்றும் அறிவு பகிர்வு வாய்ப்புகளைப் பெற ஏதுவாக நிறுவனம் முழு செயல்முறையையும் பொறுப்பேற்கிறது. இந்த மாதிரித் திட்டமானது மக்களை வலுவூட்டி, வாழ்க்கையை வளமாக்குவதுடன், பொருளாதாரத்திற்கும், தேசத்திற்கும் ஆதரவளிக்கும் என்று Pelwatte  நம்புகின்றது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *