இலங்கையில் நிலைபேறு கருத்தாடல் தொடர்பான #ActiontoImpact பிரசாரத்தை ஆரம்பித்த Road to Rights

0

Road to Rights எனும் இளைஞர்களை தலைமையாகக் கொண்ட சர்வதேச அமைப்பு, அண்மையில் #ActionToImpact எனும் பிரசார நடவடிக்கையை அறிமுகம் ஆரம்பித்துள்ளது. இது சிறந்த உலகத்தை நோக்கிய உள்ளூர்மய நிலைபேறான இலக்குகளை (SDG) உருவாக்குவதற்கான, இலங்கையிலுள்ள பல்வேறு முன்னணி பங்குதாரர்களை உள்ளடக்கிய முதலாவது பிரசாரமாகும். #ActionToImpact என்பது 2030 ஆம் ஆண்டிற்குள் உலகின் மிக முக்கியமான பிரச்சினைகளை தீர்க்க ஐ.நா மற்றும் அதன் கூட்டாளர் அமைப்புகளால் மேற்கொள்ளப்படும் உலகளாவிய SDG முன்முயற்சிகளுக்கு உரிய நேரத்தில் பதிலளிப்பதாகும். சிவில் சமூகங்கள், இளைஞர்கள் மற்றும் அரசாங்கம் உள்ளிட்ட பல்வேறு பங்குதாரர்கள், இலங்கையில் நீண்டகால நிலைபேறான அபிவிருத்தியை அடைவதற்கான தளமாக இது அமைகின்றது.

இணைய வழியில் இடம்பெற்ற இதன் ஆரம்ப விழாவில், மின்சக்தி அமைச்சர் டளஸ் அளகப்பெரும, ஜேர்மனியின் போனில் உள்ள ஐ.நா. SDG செயற்றிட்ட பிரசாரத்தின் உலகளாவிய பணிப்பாளர் திருமதி மெரினா பொன்டி, ILO இலங்கை மற்றும் மாலைதீவுக்கு பொறுப்பான திருமதி சிம்ரின் சிங், Road to Rights அமைப்பின் நிறுவுனர்/ பிரதான நிறைவேற்று அதிகாரி திருமதி சிம்ரின் சிங், Global Strategic Corporate Sustainability மற்றும் UN Global Compact Sri Lanka நிறுவுனர் டாக்டர் ரவி பெனாண்டோ,  இலங்கையின் நிலைபேறான அபிவிருத்தி சபை பணிப்பாளர் நாயகம் திருமதி. சமிந்த்ரி சபரமது ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்பாக இடம்பெற்ற இந்நிகழ்வில், ActionToImpact இனது டிஜிட்டல் தளமான www.srilanka2030.lk இணையத்தளமும் அறிமுகம் செய்யப்பட்டது. இத்தளமானது பங்குதாரர்கள், இளைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தன்னார்வலர்கள், கல்வியாளர்களை நிலைபேறான அபிவிருத்தியில் ஒத்துழைப்பு வழங்குவதன் பொருட்டு ஒருங்கிணைத்து, அறிவு, வளங்கள், ஆராய்ச்சிக்கான தரவுகள் போன்றவற்றை பகிர்வதன் மூலம் நிலைபேறுத்தன்மை தொடர்பான உரையாடலை முன்னெடுத்துச் செல்லும்.

இப்பிரசார நடவடிக்கையின் ஆரம்பத்துடன், சர்வதேச பேச்சாளர்களின் விவாதங்களைக் கொண்ட ActionToImpact வாரமும் அறிவிக்கப்பட்டது. இதன் ஆரம்ப கலந்துரையாடல் இலங்கையில் SDG களை உள்ளூர்மயமாக்குவதன் முக்கியத்துவம் குறித்தான பெறுமதிமிக்க விளக்கங்களை பார்வையாளர்களுக்கு வழங்கியது. ஓகஸ்ட் 08ஆம் திகதி, கொவிட்-19 இற்குப் பிந்தைய காலத்தில் சிறந்த மற்றும் நிலைபேறான தன்மையைக் கட்டியெழுப்புதல் தொடர்பாகவும், 10ஆம் திகதி SDG களை அடைவதில் ஊடகங்களின் பங்களிப்பு என்பது தொடர்பான ஊடகவியலாளர் வட்டமேசை கலந்துரையாடலும், 12ஆம் திகதி, ஒரு நிலைபேறான இலங்கையை உருவாக்குதவதில் இளைஞர்களின் புத்தாக்கம் எனும் தலைப்பிலான இளைஞர்கள் கலந்துரையாடலும், 14ஆம் திகதி, இலங்கையின் சூழல் தொகுதியை நிலைபேறாக பேணுவதற்கான மறுசீரமைப்பு மற்றும் மீளுருவாக்கம் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பில் விவாதிக்கும் சுற்றுச்சூழல் தொடர்பான கலந்துரையாடல்களை கொண்ட இந்த ActionToImpact வாரம், காலநிலை அவசரநிலைக்கான வர்த்தக ரீதியிலான பதிலளிப்பு தொடர்பில் விவாதிக்கும், வணிக கலந்துரையாடலுடன் (Business Forum) நிறைவுக்கு வருகின்றது.

#ActionToImpact எனும் இந்த திட்டமானது, காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை பேரழிவுகளை எதிர்கொள்ளும் போது இலங்கையில் பல்வேறு சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்கும் வகையிலான, சரியான நேரத்தில் முயற்சிகளை கொண்டு வரும் 9 வருட நீண்ட பயணமாகும். ActionToImpact பிரசாரமானது, கலந்துரையாடல்கள், விவாதங்கள், கருத்தரங்குகள், சமூக ஊடகங்கள் மூலம் SDG தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப் போகின்றது. பிரசார அமைப்பாளர்கள், மாகாண மற்றும் மாவட்ட அளவிலான நிறுவனங்களுடன் ஒத்துழைத்து அந்தந்த பகுதிகளில் குறிப்பிட்ட பிரச்சினைகளை அடையாளம் கண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் உதவியுடன் அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் மத்தியஸ்தம் செய்வார்கள். ActionToImpact பிரபலங்களின் பங்களிப்பு அம்சமானது, இப்பிரசாரத்தின் வளர்ச்சி தொடர்பான விடயங்களை ஊக்குவித்து, இது தொடர்பான விழிப்புணர்வுகள் பார்வையாளர்களை சென்றடைவதில் ஒரு முக்கிய பங்களிப்பை வழங்கி அதனைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதில் பங்களிக்கும். SDG களில் ஆராய்ச்சி தொடர்பான விடயங்களில் காணப்படும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, 2022 இல் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளின் ஆராய்ச்சித் திறனை துரிதப்படுத்தும் நோக்கில், நிலைபேறான தன்மை மேம்பாடு குறித்த தேசிய ஆராய்ச்சி கருத்தரங்கை நடாத்த, பிரசார அமைப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். SDG களை ஊக்குவிப்பது தொடர்பான இப்பிரசார நடவடிக்கையில் இளைஞர்களின் தீவிர ஈடுபாடும் அடையாளம் காணப்பட்டுள்ளமை விடேச அம்சசமாகும். இதனை மேலும் முன்னோக்கி கொண்டு செல்ல, G17 பல்கலைக்கழக தூதுவர்கள் கூட்டமைப்பை ஆரம்பிக்க அமைப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இது SDGகளை அடைவதில் இளைஞர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும். #KIDS4SDGS தேசிய தளமானது சிறுவர்களை ஒன்றிணைத்து, அடுத்த தலைமுறையினரை, நிலைபேறுத்தன்மை முயற்சிகளில் தங்களது ஈடுபாட்டை வளர்க்க அவர்களை தயார்படுத்தும்.

இந்நிலைபேறுத் தன்மை உரையாடல்களின் ஒரு பகுதியாக தங்களை ஆக்கிக் கொள்ளும் வகையில்,  www.srilanka2030.lk ஊடாக தங்களை பதிவு செய்யுமாறு, சமூகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் Road to Rights அமைப்பு அழைப்பு விடுக்கிறது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *