Huawei: வணிக மீளெழுச்சியை ஊக்குவிக்க தயாரிப்பு வரிசையை மேம்படுத்துதலும் சவாலான சூழலில் பயணித்தலும்
Huawei தனது 18 ஆவது உலகளாவிய ஆய்வாளர் உச்சி மாநாட்டை அண்மையில் ஷென்சனில் நடாத்தியது. தொழில்துறை மற்றும் நிதி ஆய்வாளர்கள், செல்வாக்கு மிக்க நபர்கள் மற்றும் ஊடக பிரதிநிதிகள் உட்பட 400 க்கும் மேற்பட்ட அதிதிகள் இந்த நிகழ்வில் நேரடியாகவும், உலகெங்கிலும் உள்ள ஆய்வாளர்கள் மற்றும் ஊடக பிரதிநிதிகள் ஒன்லைன் ஊடாகவும் கலந்து கொண்டிருந்தனர்.
Huaweiஇன் சுழற்சிமுறை தலைவரான எரிக் ஷூ, 2020 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் வணிக செயல்திறன் மற்றும் இனிவரும் காலத்திற்கான ஐந்து மூலோபாய முயற்சிகள் தொடர்பில் தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
இதன்படி Huawei ஆனது:
- வணிக மீளெழுச்சியை பொருட்டு அதன் தயாரிப்பு வரிசையை மேம்படுத்தல். இந்த முயற்சிகளின் ஓர் அங்கமாக, ஹவாய் அதன் மென்பொருள் திறன்களை வலுப்படுத்துவதுடன், மேம்பட்ட செயல்முறை நுட்பங்களில் குறைந்தளவு தங்கியிருக்கும் வணிகங்கள் மற்றும் அறிவார்ந்த வாகனங்களுக்கான கூறுகளிலும் அதிக முதலீடுகளை மேற்கொள்ளும்.
- மொபைல் தொடர்பாடலின் பரிணாமத்தை அதிகரிக்க தொழில்துறை சகாக்களுடன் இணைந்து 5G மதிப்பை அதிகரித்தல் மற்றும் 5.5G இனை வரையறுக்கும்.
- அனைத்து பாவனையாளர்களுக்கும் தடையற்ற, பாவனையாளரை பிரதானமாகக் கொண்ட மற்றும் அறிவார்ந்த அனுபவத்தை வழங்கும்.
- குறைந்த கார்பன் உலகத்திற்கான குறைந்த ஆற்றல் நுகர்வுக்காக புத்தாக்கத்தில் ஈடுபடும்.
- தொடர்ச்சியான விநியோக சவால்களை எதிர்கொள்ளும்.
“உலகளாவிய குறைகடத்தி விநியோகச் சங்கிலி முழுவதும் நம்பிக்கையை மீண்டும் உருவாக்குவதும், ஒத்துழைப்பை மீட்டெடுப்பதும் தொழில்துறையை மீண்டும் பாதையில் கொண்டுவருவதற்கு முக்கியமானது,” என எரிக் சூ வலியுறுத்தினார்.
முன்னோக்கி செல்கையில், ஒரு சிக்கலான மற்றும் நிலையற்ற உலகளாவிய சூழலிலேயே நாம் தொடர்ந்து இருக்கப் போகின்றோம். COVID-19 இன் மீள் எழுச்சி மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை ஆகியவை ஒவ்வொரு நிறுவனம், வணிகம் மற்றும் நாட்டிற்கும் தொடர்ந்து சவால்களை முன்நிறுத்தும். நாம் அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு புதிய தீர்வுகளை வழங்க டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஆற்றலை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எனவே, முழுமையாக இணைக்கப்பட்ட, அறிவார்ந்த உலகத்திற்காக ஒவ்வொரு நபருக்கும், வீடு மற்றும் நிறுவனத்திற்கும் டிஜிட்டலைக் கொண்டுவருவதற்காக எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுடன் டிஜிட்டல் உருமாற்றத்தை புத்தாக்கத்துடன் உந்துதலுடன் வைத்திருப்போம்.
Huaweiஇன் மூலோபாய ஆராய்ச்சி கழக தலைவரும், சபையின் பணிப்பாளருமான வில்லியம் சூ, அடுத்த தசாப்தத்தில் வயதான மக்கள் தொகை மற்றும் அதிக ஆற்றல் நுகர்வு உள்ளிட்ட சமூக நல்வாழ்வை பாதிக்கும் சவால்களைப் பற்றிய கலந்துரையாடலுடன் தனது பிரதான உரையைத் தொடங்கினார். ஒன்பது தொழில்நுட்ப சவால்கள் மற்றும் ஆராய்ச்சி முயற்சிகளுக்கான முன்மொழியப்பட்ட வழிமுறைகள் உட்பட 2030 ஆம் ஆண்டின் அறிவார்ந்த உலகத்தைப் பற்றிய Huaweiஇன் கண்ணோட்டம் தொடர்பில் அவர் தொடர்ந்து உரையாற்றினார்.