தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் கல்வியின் டிஜிட்டல் மாற்றத்தை ஊக்குவிக்குமென என Huawei தெரிவிக்கிறது
இருபத்தியோராம் நூற்றாண்டின் கற்றல் என்பது டிஜிட்டல் அறிவு, சமயோசித சிந்தனை மற்றும் சிக்கல்களைத் தீர்ப்பது போன்றவை உள்ளடங்கலாக அறிவினை பெருக்கிக் கொள்ளுதல், வேலை ஒழுக்கம் மற்றும் மென்திறன்களை வளர்த்துக் கொள்வதாகும், இவை நவீன பணியிடத்தில் மாணவர்கள் வெற்றிகரமாக தமது தொழில் வாழ்வினை முன்னெடுக்க உதவும். வருங்கால சந்ததியினரின் வளர்ச்சி வீதம் அல்லது உலகளாவிய வளர்ச்சிக்குத் தேவையான திறமைகளைக் குறைத்த தொற்றுநோய் காரணமாக ஏற்பட்ட சவால்கள் நிறைந்த சகாப்தத்தில், அதிர்ஷ்டவசமாக டிஜிட்டல் தொழில்நுட்பங்களுடன் இன்றைய கல்வித்துறை ஒரு தெளிவான பாதையில் செல்வதுடன், நிர்வாகத்தின் செயல்திறனை விரைவுபடுத்தும் அதேவேளை ஆழ்ந்த மாற்றத்தை எதிர்நோக்கியுள்ளது என Huawei Sri Lankaவின் எண்டர்பிரைஷ் வணிக குழுமத்தின் துணைத் தலைவர், இந்திக டி செய்சா அண்மையில் சுட்டிக்காட்டினார்.
மாணவர்கள் தங்கள் வகுப்புகளுக்கான உள்ளடக்கத்தை உருவாக்கும் அதேவேளை, மென்திறன்கள் மற்றும் டிஜிட்டல் அறிவை வளர்த்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், மாணவர்கள் இணையம் ஊடாக தகவல்களை அணுகுவதையும், உள்ளடக்க விநியோகத்திற்காக மெய்நிகர் வகுப்பறைகளை சார்ந்திருக்கும் இந்த கற்றல் முறையானது அதிகரித்து வரும் டிஜிட்டல் கற்றல் பரப்பிற்கான காரணமாகவுள்ளது என அவர் விளக்கமளித்தார். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இருசாராருமே இப்போது தங்கள் கற்றலை மேம்படுத்த தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை உபயோகப்படுத்தும் அதேநேரத்தில், தொழிற்துறைகளின் எதிர்கால கேள்விகளுக்கு ஏற்ப தம்மை தயார்படுத்திக் கொள்ள மிலேனியல் மாணவர்களுக்கு உதவும் கற்றல் மாதிரிகளுக்கு ஆதரவளிக்கும் இணையம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அபிவிருத்திகளின் அடிப்படையில் பல்வேறு வகையான உள்ளடக்கங்கள் வெளிவந்துள்ளன. இணையமானது உட்கட்டமைப்பின் மற்றொரு வடிவமாக மாறி வருவதாகவும், எல்லையற்ற சாத்தியக்கூறுகளை அணுகுவதற்கும் தொழில்நுட்ப மாற்றத்திற்கான ஒரு சக்திவாய்ந்த ஊக்கியாகவும் உள்ளது என்பதையும், மக்களை நெருக்கமாகக் கொண்டு வருவதையும், சமுதாயத்தை மிகவும் வினைத்திறன் மிக்கதாக மாற்றுவதனையும், மேலும் பேண்தகு உலகத்தை மேம்படுத்துவதையும் அவர் மேலும் தெளிவுபடுத்தினார். Huawei Sri Lanka ஏற்பாடு செய்திருந்த ‘டிஜிட்டல் புத்தாக்கத்தின் மூலம் கல்வியை இயலுமைப்படுத்தல்’ என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் உரையாற்றியிருந்தார்.
இன்று உலகில் 7.2 பில்லியன் மக்கள் உள்ளனர், அவர்களில் 25 சதவீதத்துக்கும் அதிகமானோர் 18 வயதுக்கு குறைவானவர்கள். தொழில்நுட்பத்தால் கொண்டு வரப்படும் நன்மைகளால் ஈர்க்கப்பட்டு, இளைஞர்கள் மனிதகுலத்தின் எதிர்காலத்தை வரையறுக்க உதவுவார்கள். டிஜிட்டல் மற்றும் இயற்பியல் உலகங்கள் மிகவும் ஒருங்கிணைந்ததாக இருக்கும் எதிர்காலத்தில், தொழில்நுட்பங்கள், நாடுகள், வணிகங்கள் மற்றும் தொழில்களுக்கு இடையில் எல்லைகள் என்பதே இருக்காது. “இணைப்பானது புதிய இயல்பாக வெளிப்படும். 2025 ஆம் ஆண்டில் 100 பில்லியன் இணைப்புகள் காணப்படும்,” என உலகளாவிய டிஜிட்டல் உருமாற்றம் குறித்த அண்மைய நுண்ணறிவுகளைப் பற்றி அவர் தெளிவுபடுத்தும் போது அவர் குறிப்பிட்டதுடன், அதனால் எதிர்காலத்தில் முதலீடு செய்வதாயின் ஐ.சி.டி மற்றும் கல்வியில் முதலீடு செய்வது முன்நிபந்தனையாகும் என சுட்டிக்காட்டினார். இது அறிவை வெளிப்படுத்துவது, சுற்றுச்சூழல் அமைப்பை இணைப்பது மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகிகள் இடையே எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் ஒத்துழைப்பை வளர்ப்பது பற்றியதாகும். இது மக்கள், சமூகங்கள் மற்றும் நாடுகளை அதிக போட்டிக்கு உட்படுத்துவதாகும்.
“கல்வி என்பது உலகை மாற்ற நீங்கள் பயன்படுத்தக்கூடிய மிக சக்திவாய்ந்த ஆயுதம். பாலின சமத்துவமின்மையை இல்லாதொழிக்கவும், வறுமையைக் குறைப்பதற்கும், அமைதியை வளர்ப்பதற்கும் இது மிக முக்கியமாகும். நவீன கல்வியானது கற்பவர்களுக்கு அவர்களின் உடல் மற்றும் உள நீதியான நல்வாழ்வை அபிவிருத்தி செய்யவும் நிர்வகிக்கவும் உதவுகிறது. பிரபல தத்துவஞானி ஹெர்பேர்ட் ஸ்பென்சர் கூறியது போல, ‘கல்வியில் சுய அபிவிருத்திக்கான செயல்முறை முழுவதுமாக ஊக்குவிக்கப்பட வேண்டும்’. எனவே தொழிற்படையில் இணைய விரும்பும் பட்டதாரிகளுக்கு சுய அபிவிருத்தி முக்கியமானதாகும்” என்று டி சொய்சா சுட்டிக்காட்டினார்.
ஒவ்வொருவருக்கும் தங்களது சொந்த திறமைகள் இருந்தாலும், சுய அபிவிருத்தி இல்லாததால் நம்மில் பெரும்பாலோர் அதை ஆராய முடியவில்லை என்று அவர் விளக்கிக் கூறினார். இது தொடர்பில் நவீன கல்வி தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் மாதிரிகளில் கவனம் செலுத்துவதுடன், மாணவர்கள் டிஜிட்டல் கருவிகளின் பயன்பாடு மற்றும் இணைப்பின் மூலம் அவர்களின் படைப்பாற்றலை வளர்க்கக்கூடிய ஒரு கூடிக் கற்கும் சூழலில் தமது கற்றலை முன்னெடுக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
எவ்வாறாயினும், கல்வி மாதிரிகளின் நிலைமாற்ற செயல்பாட்டில், கல்வித் துறை இன்னும் மூன்று சவால்களை எதிர்கொள்கிறது. இதில் முதலாவது மாணவர்கள் இணையம் வழியாக பல்வேறு கல்வி வளங்களை அணுக ஆர்வமாக இருக்கும்போது வலையமைப்பின் தரம் தடையாக இருப்பதாகும். இரண்டாவதாக, பணிச்சுமை அதிகரிக்கும் போது, ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் தங்கள் செயல்திறனை மேம்படுத்தும் சிறந்த வழிகளைக் கண்டறிய வேண்டும், மூன்றாவதாக, முக்கியமானதான ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் உயர்தர கல்வி வளங்களைப் பகிர்வதாகும், இது ஒன்லைன் கல்வி உயர்ந்த தரத்தை அடைய மிகவும் முக்கியமானதாகும்.
ஒரு முன்னணி உலகளாவிய ஐ.சி.டி தீர்வு வழங்குநராக Huawei நிறுவனம் எப்போதுமே தன்னை அர்ப்பணித்திருக்கும் இணைப்பில் கவனம் செலுத்துவதோடு மட்டுமல்லாமல், கல்வி, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து போன்ற தொழில்துறை வளர்ச்சித் துறைகளை பூர்த்தி செய்யும் கணினி மற்றும் டிஜிட்டல் தீர்வுகளிலும் பெருமளவில் முதலீடு செய்துள்ளது. Huawei full-stack, அனைத்து-சூழ்நிலைகளுக்குமான செயற்கை நுண்ணறிவு AI தீர்வுகளையும் வழங்குகிறது, இதன் மூலம் கல்வித்துறையில் நாம் எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகொள்ள end-to-end இறுதித் தீர்வுகளை உருவாக்க முடியுமென்பதுடன், இதன்மூலம் கல்வி நிறுவனங்கள் வெற்றி அடைய உதவ முடியும். தற்போது, 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள 2,500 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் Huawei இன் நிகழ்ச்சிதிட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தொழில்நுட்ப புத்தாக்கங்கள் மூலம் சிறந்த கல்வி உலகத்தை உருவாக்க கல்வி வாடிக்கையாளர்களுடன் நிறுவனம் தொடர்ந்து பணியாற்றும்.
“ரோம் ஒரு நாளில் கட்டப்படவில்லை, கல்வியின் டிஜிட்டல் மாற்றம் ஒரு சிக்கலான மற்றும் முறையான திட்டமாகும், ஆனால் Huawei இன் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் அனுபவங்களுடன் இந்த செயல்முறை வேகமாகவும் வினைத்திறனுடனும் அடையப்படலாம். கல்வி நேர்மறையான மாற்றத்தை உருவாக்க, அது அனைத்தையும் உள்ளடக்கியதாகவும், உயர்தரமாகவும் இருக்க வேண்டும் ”என்று டி சொய்சா சுட்டிக்காட்டியதுடன், மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் வெவ்வேறு பங்காளர்களுடன் இணைந்து வலுவான ஒத்துழைப்புடன், Huawei கற்றல், தொடர்பு மற்றும் கற்பித்தல் முறையை மீள்வரையறை செய்து வருகிறது.
புத்தாக்கம் மற்றும் பகிரப்பட்ட பெறுமானங்களைக் கொண்ட தயாரிப்புகள், தீர்வுகள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள் மூலம் தொழில்நுட்பம் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதுடன் வளப்படுத்துகிறது என்று Huawei நம்புகின்றது. ஐ.சி.டி.யின் தலைவராக இருப்பதால், டிஜிட்டல் பிரிவைக் கட்டுப்படுத்துவதற்கும், கல்வி வாய்ப்புகளுக்கு சமமான அணுகலை ஊக்குவிப்பதற்கும், சிறந்த இணைக்கப்பட்ட உலகத்தை உருவாக்குவதற்கும் Huawei உறுதிபூண்டுள்ளது. கல்வி என்பது ஒரு அடிப்படை உரிமையென்பதுடன், பேண்தகு வளர்ச்சியை அடைவதற்கு இது இன்றியமையாததாகும்.
பட விளக்கம்: Huaweiவின் எண்டர்பிரைஷஸ் வணிக குழும துணைத் தலைவர் இந்திக டி செய்சா